ராயல் என்ஃபீல்டு பைக் வச்சருக்கீங்களா? எச்சரிக்கை! உங்க வண்டியில இந்த பிரச்சனை இருக்கலாம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சர்வதேச அளவில் வாகனங்களை திரும்ப அழைக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த வாகனங்களை திரும்ப அழைக்க அந்நிறுவனம் முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. அதில் என்ன பிரச்சனைகள் இருக்கிறது? இதை எப்படி சரி செய்யப் போகிறார்கள் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். குறிப்பாக நீண்ட ஆண்டுகளாக கனவாக ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என நினைத்த பலர் தற்போது தங்கள் கனவுகளை நினைவாக்கி வருகிறார்கள்.

Royal Enfield Recall

இத்தனை ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அனுமதிப்பை பெற்றுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை திரும்ப அழைத்துள்ளது. அந்த வாகனங்களில் சில பிரச்சினைகள் இருப்பதே அந்நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. அந்த பிரச்சினைகளை சரி செய்வதற்காக தற்போது திரும்ப அழைத்துள்ளது. இலவசமாகவே அந்த பிரச்சினைகளை எல்லாம் சரி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதன்படி கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை தயாரிக்கப்பட்ட வாகனங்களில் பின்பக்கமும் பக்கவாட்டுப்பகுதியிலும் பொருத்தப்பட்டுள்ள ரிஃப்ளெக்டர்களில் பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட அனைத்து வாகனங்களிலும் பிரச்சனை இல்லை என்றாலும் குறிப்பிட்ட சில வாகனங்களில் பிரச்சனை இருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

Royal Enfield Recall

அதனால் இந்த காலகட்டத்தை தயாரிக்கப்பட்ட வாகனங்களை வாங்கிய உரிமையாளர்களை நேரடியாக தொடர்பு கொண்ட நிறுவனம் மீண்டும் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு திரும்ப அழைத்துள்ளது. அங்கு இந்த ரிஃப்ளெக்டர்கள் சோதனை செய்யப்படும் சோதனையில் வெற்றிகரமாக ரிஃப்ளெக்டர் வேலை செய்தால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மீண்டும் பைக்கை திரும்ப ஒப்படைக்கப்படும்.

ஒருவேளை ரிஃப்ளெக்டரில் பிரச்சினை இருந்தால் அதை இலவசமாகவே ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மாற்றி தரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரிஃப்ளெக்டர்கள் குறைந்த லைட் விசிபிலிட்டியில் போதுமான அளவு ரிஃப்ளெக்ஷனை செய்யவில்லை என்ற பிரச்சனை இருக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவே இந்த ரிஃப்ளெக்டர்களை மாற்ற அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Royal Enfield Recall

இதனால் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உங்களை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட காலகட்டத்தில் நீங்கள் பைக் வாங்கி இருந்து அந்த பைக்கில் உள்ள ரிஃப்ளெட்டர் மாற்ற உங்களுக்கு அழைப்பு வந்த உடனடியாக அருகில் உள்ள அதிகாரப்பூர்வமான சர்வீஸ் சென்டருக்கு சென்று உங்கள் வாகனத்தில் உள்ள ரெஃப்ளெக்டர்களை சரி செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாகனத்தை வாங்கி உங்களுக்கு அழைப்பு வராவிட்டாலும் உங்கள் வாகனத்தில் பிரச்சனை இருக்கிறதா என்பதை நீங்கள் அருகில் உள்ள சர்வீஸ் சென்டருக்கு சென்று சோதனை செய்து கொள்வது நல்லது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் வெகுவாக குறையும்.

இந்த பிரச்சனைகளை சரி செய்ய 15 நிமிடம் மட்டுமே ஆகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் நீங்கள் விரைவாக இந்த பிரச்சனைகள் இருந்தால் உங்கள் வாகனத்தில் இதை சரி செய்து கொள்ள முடியும். இது இந்தியா மட்டுமல்லாமல் தென்கொரியா, அமெரிக்கா, கனடா, பிரேசில், லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் லண்டன் ஆகிய நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கு பொருந்தும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்படியான திரும்ப அழைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு தங்களது வாடிக்கையாளர்களை பாதுகாத்து வருகிறது. விற்பனைக்கு பிறகான சேவையில் நிறுவனம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதற்கு இது ஒரு முக்கியமான சம்பவமாக பார்க்க முடியும். இதனால் ராயல் என்ஃபீல்டு வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, September 30, 2024, 14:22 [IST]
English summary
Royal enfield recall global recall faulty reflectors
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X