உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரெண்டல் அண்ட் டூர் என்ற பெயரில் உலகில் பல்வேறு இடங்களில் பைக்குகளை வாடகைக்கு விடும் சேவையை துவங்கியுள்ளது. இதனால் இனி வெளிநாடுகளுக்கு எங்கு சென்றாலும் பைக்கில் பற்றி கவலைப்பட தேவையில்லை. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பைக்குளை வாடகைக்கு எடுத்து நன்றாக ஊர் சுத்த முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலகம் முழுவதும் தற்போது பைக் ரைடிங் சேவை பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட நிறுவனங்கள் பைக் ரைடிங் மீது ஆர்வம் இருக்கும் இளைஞர்களுக்காக ஆங்காங்கே பைக் ரைடிங் சேவைகளை வழங்கி வருகிறார்கள். இதன்படி அந்த ரைடர்கள் குறிப்பிட்ட பகுதிக்கு சென்று விட்டால் அங்கிருந்து அந்நிறுவனம் பைக்குகளை வழங்கி அவர்களுக்கு பைக் ரைடிங்கை ஏற்பாடு செய்வதுடன் பைக் ரைடிங் போது அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் வழங்கி வருகிறது.

royal enfield rental and tours

இப்படியாக ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தற்போது ரெண்டல் அண்ட் டூர்ஸ் என்ற பெயரில் இந்த சேவையை உலகம் முழுவதும் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த சேவையை சோதனை கட்டமாக இந்தியாவில் இந்நிறுவனம் வெற்றிகரமாக செய்து முடித்த நிலையில் தற்போது உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த சேவையை விரிவு படுத்தி உள்ளது. இதன் மூலம் பைக் டூர் செல்லும் ரயிலர்களுக்கு ஒரு புதிய பரிணாமத்தை வழங்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பைக்குகளை எடுத்துச் செல்லும் ரைடர்களுக்கு தேவையான உதவிகள் அவர்களுக்கு தானே ரைட் செய்து செல்ல அனைத்து உபகரணங்கள் மற்றும் டிப்ஸ்களை இந்நிறுவனம் வழங்குகிறது. இது குறித்த நிறுவனத்தின் சிஇஓ கோவிந்தராஜன் கூறும் போது: "ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக பைக் ரைடிங்கை ஊக்குவித்து வருகிறது. ஒவ்வொரு நாடாக சென்று பைக் ரைடிங் செய்யும் விரும்பிகளுக்கு நீண்ட ஆண்டுகளாக ஊக்கமளித்து வருகிறோம்.

royal enfield rental and tours

டூவீலரில் அவர்கள் உலகம் முழுவதும் சுற்றும் ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்து உள்ளோம். இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரெண்டல் அண்ட் டூர்ஸ் என்ற புரோகிராம் மூலம் பைக் ரைடு விரும்பிகளுக்கு சுலபமான பைக் ரைடுகளை மோட்டார் சைக்கிள் டூரிஸம் மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம்.

அட்வெஞ்ச்சர் பைக் விரும்புவோருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். இதன் மூலம் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ராயல் என்ஃபீல்டு பைக் பயனர்களுக்கு பயனளிப்பதுடன் எங்கள் குடும்பத்தையும் விரிவடைய உதவியாக இருக்கும் என நம்புகிறோம். உலகம் முழுவதும் எங்கள் நிறுவனம் விரிவடைந்து கொண்டே வருகிறது" என்று கூறினார்.

royal enfield rental and tours

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்கி வரும் இந்த ரெண்டல் அண்ட் டூர் சேவையை பயன்படுத்த அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு ஏற்கனவே திட்டமிடப்பட்ட பகுதிகளில் உள்ள டூர் பிளான்கள் குறித்த விபரங்கள் மற்றும் எந்தெந்த நேரங்களில் இது பயன்படுத்த முடியும் என்ற அனைத்து தகவலும் இடம் பெற்றிருக்கும். இதில் உங்களுக்கு விருப்பமான டூரை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

நீங்கள் தேர்வு செய்து அனைத்து தகவலையும் உள்ளீடு செய்து பதிவு செய்தவுடன் உங்களுக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். அந்த அழைப்பில் உங்களது ரைடு குறித்த அனைத்து தகவல்கள் மற்றும் உறுதியான விபரங்கள் அனைத்தையும் உங்களுக்கு தெரிவிப்பார்கள். இதன் மூலம் உங்களது ரைடு உறுதி செய்யப்படும்.

அதன்படி நீங்கள் பதிவு செய்த நாள் மற்றும் நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் சென்று விட்டால் உங்களுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் பெற முடியும். தற்போது உலகில் 32 இடங்களில் இந்த சேவைகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல் தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, கொலம்பியா, துருக்கி, மற்றும் நபிபியா ஆகிய நாடுகளிலும் இது சேவை வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 25 நாடுகளில் இந்த சேவைகளை நிறுவனம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த 25 நாடுகளில் 52 இடங்களை தேர்வு செய்து அங்கு இந்த சேவைகளை வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்த 52 இடங்களில் மொத்தம் 62 விதமான டிரிப் பிளான்களை செய்து வைத்துள்ளது. இதில் நீங்கள் எந்த பிளானை வேண்டுமானாலும் தேர்வு செய்து பயணம் செய்து கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகம் முழுவதும் தற்போது பைக் ரைடிங் மீது மக்கள் அதிக ஆர்வம் கொண்டு வருகிறார்கள். இதனால் நாடு நாடாக சென்று இப்படியாக பைக் ரைடிங்கை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகமாகி வருகிறது. இதை பயன்படுத்தும் விதமாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இப்படியான சேவையை துவங்கி உள்ளது. இது நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, April 19, 2024, 7:00 [IST]
English summary
Royal enfield rental tours global introduction offering worldwide experiences
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X