அந்த சவுண்டுக்கே எவ்ளோ வேணாலும் குடுக்கலாம்... ராயல் என்பீல்டை அடிக்க புதுசா ஒருத்தன் பொறந்துதான் வரணும்...
இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக் நிறுவனங்களில் ஒன்று ராயல் என்பீல்டு (Royal Enfield). இதன் பிப்ரவரி (February) மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், ராயல் என்பீல்டு நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் 64,436 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 67,922 ஆக உயர்ந்துள்ளது. இது 5 சதவீத வளர்ச்சி ஆகும்.

அதே நேரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து 7,108 பைக்குகளை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8,013 ஆக உயர்ந்துள்ளது. இது 13 சதவீத வளர்ச்சி ஆகும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 71,544 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 75,935 ஆக உயர்ந்துள்ளது. இது 6 சதவீத வளர்ச்சி ஆகும்.

கிளாசிக் 350 (Classic 350), மீட்டியோர் 350 (Meteor 350), ஹண்டர் 350 (Hunter 350), புல்லட் 350 (Bullet 350), ஸ்க்ராம் 411 (Scram 411), ஹிமாலயன் (Himalayan), இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650), சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) மற்றும் சூட்கன் 650 (Shotgun 650) உள்ளிட்ட பைக்குகளை ராயல் என்பீல்டு விற்பனை செய்கிறது.
இதுதவிர வரும் காலங்களில் பல்வேறு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே போட்டி நிறுவனங்களான ஹோண்டா (Honda) மற்றும் ஜாவா (Jawa) ஆகியவற்றுக்கு வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது இருப்பதை காட்டிலும் மிக கடுமையான சவாலை வழங்கவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பாரம்பரியமான ராயல் என்பீல்டு நிறுவனம் நீண்ட நெடுங்காலமாக பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. கால மாற்றத்திற்கு ஏற்ப, வாடிக்கையாளர்களின் மன ஓட்டத்தை அறிந்து, புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதன் காரணமாகவே இன்றளவும் போட்டி நிறுவனங்களுக்கு ராயல் என்பீல்டு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து கொண்டுள்ளது.
ராயல் என்பீல்டு பைக்குகள் ரெட்ரோ கிளாசிக் லுக்கில் அட்டகாசமாக இருப்பதும், இன்றைய காலகட்டத்தில் உள்ள இளம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதிநவீன வசதிகள் வழங்கப்படுவதும், அவற்றின் மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய விற்பனை எண்ணிக்கையை எல்லாம் எட்ட இயலாது.


Click it and Unblock the Notifications








