கண்ணீர் வடிக்கும் ராயல் என்பீல்டு ரசிகர்கள்... இப்படி நடக்கும்னு கனவுல கூட நெனச்சு பாத்திருக்க மாட்டாங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. ஆனால் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக, இந்த விஷயம் தெரியவந்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம், 63,531 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2023ம் ஆண்டு மே மாதத்தில், 70,795 ஆக இருந்தது.

இது 10.26 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். வீழ்ச்சியை சந்தித்திருந்தாலும் கூட, நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் அதிக டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில், ராயல் என்பீல்டு 6வது இடத்தை பிடித்துள்ளது.

Royal Enfield Bullet 350

முதல் 5 இடங்களில் முறையே ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), ஹோண்டா (Honda), டிவிஎஸ் (TVS), பஜாஜ் (Bajaj) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய டூவீலர் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக 6வது இடத்தை ராயல் என்பீல்டு நிறுவனம் தன்வசப்படுத்தியுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தை பொறுத்தவரையில் தற்போதைய நிலையில், கிளாசிக் 350, புல்லட் 350, ஹண்டர் 350, மீட்டியோர் 350, சூப்பர் மீட்டியோர் 650, ஷூட்கன் 650, இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650, ஹிமாலயன் மற்றும் ஸ்க்ராம் 411 உள்ளிட்ட பைக்குகளை எல்லாம் விற்பனை செய்து வருகிறது.

Royal Enfield Classic 350

ராயல் என்பீல்டு நிறுவனம் அடுத்ததாக குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி கொண்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பைக்கின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் கூட வெளிவந்துள்ளன.

அனேகமாக நடப்பு 2024ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்னதாக ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கில், 452 சிசி, லிக்யூட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் DOHC இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம்.

அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 40 பிஎஸ் பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கலாம். இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: குரில்லா 450 பைக்கை தொடர்ந்து, இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு பைக்குகளை வரிசையாக விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, June 7, 2024, 23:49 [IST]
English summary
Royal enfield sales report may 2024 10 per cent degrowth
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+