ராயல் என்ஃபீல்டு கிட்ட இந்த பைக்கை யாருமே எதிர்பார்க்கல! விற்பனைக்கு எப்ப வருது தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கோவாவில் நடந்து வரும் மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் முதன்முதலாக தனது ஸ்கிரம் 440 என்ற பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த பைக் இந்தியாவில் வெளியாகி உள்ளது0 இந்த பைக்கின் உள்ள அம்சங்கள் என்னென்னஉ இதில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் என்னென்ன புதிய விஷயங்களை உட்புகுத்தி உள்ளது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த ஆண்டு ஏகப்பட்ட பைக்குகளை வரிசையாக அறிமுகப்படுத்தியது. பல வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு போட்டியாக தங்கள் தயாரிப்புகளை இந்நிறுவனம் அடுக்கி உள்ள நிலையில், தற்போது கோவாவில் தங்கள் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக மோட்டோ வெர்ஸ் என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடக்கும் நிலையில் இந்த ஆண்டிற்கான நிகழ்ச்சி தற்போது நடந்து வருகிறது.

royal enfield scram 440

வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் அல்லது புதிய பைக்குகளை விற்பனைக்காக அறிமுகப்படுத்தும். அதன்படி தற்போது இந்நிறுவனம் தனது ஸ்கிரம் 440 என்ற தனது புதிய பைக்கை வெளியிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ரசிகர்கள் பலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பைக் தற்போது இந்தியாவில் வெளியாகி உள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஸ்கிரம் 440 பைக்கை பொறுத்தவரை அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வந்த ஸ்கிரம் 411 என்ற பைக்கிற்கு மாற்றாக அறிமுகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கிரம் 411 என்ற பைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விற்பனையிலிருந்து நிறுத்தப்பட்டது. தற்போது அந்த பைக்கில் இருந்து ஸ்டைலிங் மற்றும் புதிய கலர் ஆப்ஷன்களுடன் இந்த ஸ்கிரீம் 440 என்ற பைக் வெளியாகியுள்ளது.

royal enfield scram 440

புதிதாக வெளியாகி உள்ள ஸ்கிரம் 440 பைக்கில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 443 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, ஃபீயூயல் இன்ஜெக்ஷன் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 25.4 பிஎச்பி பவரையும் 34 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் நேரடியாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் எலெக்ட்ரானிக் ஃபீயூயல் இன்ஜெக்ஷன் செட்டப்பை கொண்டதாக இருக்கிறது.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன்பக்கம் டெலஸ்கோபிக் 44மிமீ அளவில் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. வீலை பொருத்தவரை முன்பக்கம் 190 மிமீ அளவு கொண்ட வீலும் பின்பக்கம் 180 மிமீ அளவு கொண்ட வீலும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் சிட்டி பயன்பாட்டிற்கும் ஏற்றதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

royal enfield scram 440

இந்த பைக்கின் அளவுகளை பொருத்தவரை 2165 மிமீ நீளமும், 840 மிமீ அகலமும், 1170 மிமீ உயரமும் கொண்டதாக இருக்கிறது. 1460 மிமீ வீல் பேஸ் மற்றும் 200 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் 196 கிலோ எடை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் பின்பக்க வீலில் உள்ள ஏபிஎஸ் சிஸ்டத்தை மட்டும் ஆஃப் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது. முன்பக்க வீலில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும் பின்பக்க வீலில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக்கின் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பைக் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் எப்பொழுது வெளியாகும் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 2025ம் ஆண்டு முதல் பாதிக்குள் இந்த பைக் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் விற்பனைக்கு வரும்போது ரூபாய் 2.10 லட்சம் முதல் ரூபாய் 2.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இந்த பைக்கை இந்தியாவில் பலர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நிலையில், தற்போது இந்த பைக் களமிறங்கியுள்ளது. ஏற்கனவே டிரையம்ப் மற்றும் ஹார்லி டேவிட்சன் ஆகிய நிறுவனங்கள் இந்த செக்மெண்டில் போட்டி போட்டு வரும் நிலையில், ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இந்த பைக்கும் அதில் சேர்ந்துள்ளது. நிச்சயம் இது மார்க்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 22, 2024, 19:45 [IST]
English summary
Royal enfield scram 440 unveiled in goa
மேலும்... #royal enfield #india #Motoverse 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X