நாளை வெளியீடு: ராயல் என்பீல்டின் முதல் எலெக்ட்ரிக் பைக்.. இன்னும் கொஞ்சம் நாள்ல ஓலாவை காணோம்னு தேட போறாங்க!

இந்தியாவின் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடலை இந்த உலகிற்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. நாளைய தினமே (நவம்பர் 4) நிறுவனத்தின் முதல் இ-பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உலக புகழ்பெற்ற இஐசிஎம்ஓ 2024 (EICMA 2024) வாகன கண்காட்சியின் வாயிலாகவே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எனவே ஒட்டுமொத்த இரண்டு சக்கர வாகன காதலர்களின் கவனமும் ராயல் என்பீல்டு பக்கம் தற்போது திரும்பி இருக்கின்றது. நிறுவனம் என்ன மாதிரியான தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கிறது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்த எதிர்பார்ப்பிற்கு வலுசேர்க்கும் விதமாக சமீபத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் வரவிருக்கும் மின்சார பைக்கின் டீசர் படத்தை வெளியிட்டு இருந்தது.

Royal enfield electric motorcycle unveiling tomorrow

விண்வெளியில் இருந்து பாராசூட் ஒன்று இரண்டு சக்கர வாகனத்தை பூமிக்கு எடுத்து வருவதைப் போன்ற காட்சிகளே அந்த டீசர் வீடியோவில் இடம் பெற்றிருந்தன. மேலும், அந்த டீசர் படத்தின் வாயிலாக நிறுவனத்தின் முதல் இ-பைக், ஃப்ளையிங் ஃபிளியா (Flying Flea) மோட்டார்சைக்கிளை தழுவியதாக இருக்கப் போவதும் உறுதியாகியது.

வேர்ல்டு வார் 2-இல் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கிய ஓர் மோட்டார்சைக்கிளே இந்த ஃப்ளையிங் ஃப்ளியா ஆகும். இதன் உருவத்தை மட்டுமே வரவிருக்கும் ராயல் என்பீல்டு எலெக்ட்ரிக் பைக் தத்தெடுக்கப் போவதில்லை. அதன் பெயரையும் இந்த வாகனம் தத்தெடுத்துக் கொள்ள இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

இதற்கேற்ப சமீபத்தில் ஃப்ளையிங் ஃப்ளியா எனும் பெயருக்கான காப்புரிமையை ராயல் என்பீல்டு நிறுவனம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டும் இல்லைங்க, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் என கூறி புதுமுக மின்சார பைக் ஒன்றின் படங்கள் இணையத்தில் சமீபத்தில் பகிரப்பட்டன.

அந்த வாகனம் ராயல் என்பீல்டு கிளாசிக்-இன் ஸ்டைலை தழுவியதாக இருந்தது. அதாவது, ஹெட்லைட், ரியர் வியூ கண்ணாடி உள்ளிட்டவை கிளாசிக் மோட்டார்சைக்கிள்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்தன. மேலும், அந்த வாகனத்தை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பார்சிலோனாவிற்கான நிர்வாக இயக்குநர் சித்தார்தா லால்-லே ஓட்டி வந்ததாகவும் கூறப்படுகின்றது.

ஆகையால், இந்த மின்சார பைக் அதிக சிறப்புகள் மற்றும் பிரத்யேக அம்சங்களைத் தாங்கியதாக இருக்கும் என நம்பப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஒரு சில பிராண்டுகளே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில், ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) இதில் முன்னணியில் உள்ளது.

இந்த பிராண்டு ரோட்ஸ்டர் (Roadster) எனும் பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பெயரில் மூன்று விதமான மாடல்களை அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் ரோட்ஸ்டர் ப்ரோ (Roadster Pro) ஆகியவையே அவை ஆகும்.

இவற்றிற்கான ரிசர்வேஷன் பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. விரைவில் இதன் டெலிவரி பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக மின்சார பைக் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் அது மிகப் பெரிய போட்டியாக ஓலா ரோட்ஸ்டர் இ-பைக்கிற்கு அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்பவே தற்போது தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் பைக்கிற்கு மட்டுமல்ல இப்போது விற்பனயைில் இருக்கும் மற்ற நிறுவனங்களின் மின்சார பைக்குகளுக்கும் இது போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓர் முழு சார்ஜில் 200 கிமீ அல்லது அதற்கும் அதிகமான கிமீ ரேஞ்சையே வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதுமட்டுமில்லைங்க, பிற தொழில்நுட்ப அம்சங்கள் விஷயத்திலும் இந்த பைக் மிக சிறந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 3, 2024, 17:11 [IST]
English summary
Royal enfield set to unveil its first electric motorcycle at eicma 2024 show tomorrow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+