வட அமெரிக்காவில் தமிழக தயாரிப்பு.. "ஆள போறான் தமிழன் உலகமெல்லாமே" பாட்டுதான் ஞாபகம் வருது!
இந்தியாவில் இந்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட பைக் மாடல் ஒன்று வட அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது எந்த பைக் மாடல்? இந்தியாவில் அந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும் விலை என்ன? மற்றும் என்ன மாதிரியான சிறப்பம்சங்களுடன் விற்பனைக்குக் கிடைக்கிறது? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கும் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு (Royal Enfield)-ம் ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக ஷாட்கன் 650 (Shotgun 650) மோட்டார்சைக்கிள் இருக்கின்றது.

இந்த பைக்கையே ராயல் என்பீல்டு நிறுவனம் வட அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பைக் ஏற்கனவே நம் நாட்டிலும், ஐரோப்பிய நாடுகளிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, ராயல் என்பீல்டு நிறுவனம். இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது வட அமெரிக்காவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்தியாவில் ராயல் என்பீல்டு ஷாட்கன் 650 ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதே பைக் அமெரிக்காவில் 6,899 டாலர்களுக்கும், கனடாவில் கனடா டாலர்களுக்கு 9,199-க்கும் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
இந்திய மதிப்பில் ரூ. 5,75,541-க்கும், ரூ. 5,64,907-க்கும் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது தோராய மதிப்பு மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியான விலையிலேயே ஷாட்கன் 650 விற்கப்படுகின்றது சான்றாக இந்த விலைகள் இருக்கின்றன. ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிக விலையிலேயே அது வெளிநாடுகளில் விற்கப்படுகின்றது.
சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் காணப்படும் பெரும்பாலான அம்சங்களே ஷாட்கன் 650 பைக் மாடலிலும் காணப்படுகின்றது. மிக முக்கியமாக எஞ்சின் மற்றும் சஸ்பென்ஷன் செட்-அப் ஆகியவற்றில் இரண்டு பைக் மாடல்களும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில் சூப்பர் மீட்டியோர் 650 மற்றும் ஷாட்கன் 650 ஆகிய இரண்டிலும் 648 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 46.3 பிஎச்பி மற்றும் 52.3 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், சஸ்பென்ஷன் செட்-அப்பாக இந்த பைக்கின் முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டத்துடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் இரு வீல்களிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன. ராயல் என்பீல்டின் இந்த தயாரிப்பிற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, பிரீமியம் தர இரண்டு சக்கர விரும்பிகள் மத்தியிலேயே சிறப்பான வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் ஷாட்கன் ஷீட் மெட்டல் கிரே, ட்ரில் கிரீன், பிளாஸ்மா ப்ளூ, ஸ்டென்சில் ஒயிட் ஆகிய நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இத்துடன், இந்த பைக்கை கஸ்டமைஸ் (தேவைக்கேற்ப மாடிஃபை) செய்துக் கொள்ளும் வசதியையும் வழங்குகின்றது. இந்த ஆப்ஷனிலேயே வட அமெரிக்காவில் ஷாட்கன் 650 விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் தயாரிக்கப்படும் பைக் மாடல் உலக நாடுகளை ஆளும் வகையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருப்பது தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமிதம் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு இந்தியாவில் கிடைப்பதைப் போலவே வட அமெரிக்காவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








