கரடி என்கிற பெயரில் பைக்கா!.. ராயல் என்பீல்டு வெளியிட்ட டீசரால் பற்றி எரியும் ஒட்டுமொத்த டூ-வீலர் மார்கெட்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், விரைவில் ஓர் புதுமுக பைக் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த புதுமுக பைக்கின் டீசர் வீடியோ (Teaser Video)-வை நிறுவனம் தற்போது வெளியீடு செய்து உள்ளது. பியர் 650 (Bear 650) எனும் பைக்கையே ராயல் என்பீல்டு இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இது ஓர் 650 சிசி (650CC) பைக் மாடல் ஆகும். மேலும், இது ஓர் ஸ்கிராம்ப்ளர் வகை இரண்டு சக்கர வாகனம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கிற்காக டீசர் வெளியிட்டு இருப்பது இதுவே முதல் முறையாகும். ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி திறனில் ஸ்கிராம்பிளர் மோட்டார்சைக்கிள் பிரிவில் விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் டூ-வீலர் இதுவே ஆகும். இத்தகைய வாகனத்தை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு இருக்கின்ற காரணத்தினாலேயே மார்க்கெட் முழுக்க இந்த வாகனம் பற்றிய பேச்சாக மாறி இருக்கின்றது.

Royal enfield bear 650 teaser out

இந்த பைக்கை விரைவில் நடைபெற இருக்கும் உலக புகழ்பெற்ற இஐசிஎம்ஏ 2024 வாகன கண்காட்சியிலேயே ராயல் என்பீல்டு வெளியீடு செய்ய இருக்கின்றது. இந்த நிகழ்வு வருகின்ற நவம்பர் மாதம் மிலன்-இல் நடைபெற இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இரண்டு சக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு ராயல் என்பீல்டு அதன் டீசர் படத்தை வெளியிட்டு உள்ளது.

பைக்கின் ஆஃப்-ரோடு திறனை வெளிக்காட்டக் கூடிய டீசர் வீடியோவையே வெளியிட்டு இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ராயல் என்பீல்டு நிறுவனம் 650 சிசி பிரிவில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரட்டையர்கள் பைக் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் வரிசையிலேயே மற்றுமொரு புதுமுக 650 சிசி பைக்காக பியர் இணைய உள்ளது. ஆனால், இந்த பைக் மாடல்களைப் போல இரண்டு எக்சாஸ்ட் சிஸ்டம் செட்-அப் வழங்கப்படவில்லை. சிங்கிள் எக்சாஸ்ட் செட்-அப்பே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆஃப்-ரோடு பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஓர் ஸ்கிராம்ப்ளர் 650 பைக் மாடல் ஆகும்.

எனவே, இன்டர்செப்டர் 650 பைக் மாடலுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் அதே சிறப்பான வரவேற்பு இந்த பைக்கிற்குக் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போது நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர் வீடியோ வாயிலாக இந்த பைக் சிறந்த ஆஃப்-ரோடு பயன்பாட்டு வசதிக் கொண்ட பைக்காக இருக்கப்போகிறது என்பது மட்டுமல்ல அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கிய பைக்காகவும் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.

அந்தவகையில், முன் பக்க வீலில் யுஎஸ்டி ஃபோர் (USD Fork)-க்கை இந்த பைக் பெற இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் மேல்பக்கம் அழகிய தங்க நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், பைக்கின் பின் பக்கத்தில் ட்வின் ஷாக் (Twin Shock) செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த இரண்டு வகையான சஸ்பென்ஷன் புதிய பியர் 650 பைக்கில் இடம் பெற இருப்பதனால் இந்த பைக் மிகவும் சுவாரஷ்யமான மற்றும் ரம்மியமான இயக்க அனுபவத்தை வழங்கும் என தெரிகின்றது. இதைத்தொடர்ந்து, இந்த பைக்கைக் கவர்ச்சியான தோற்றத்தில் காண்பிக்க அது இரட்டை நிற டோன் ஆப்ஷனில் விற்பனைக்கு வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடர்ந்து, நவீன கால சிறப்பம்சமாக 5 அங்குல டிரிப்பர் நேவிகேஷன், கூகுள் மேப் மற்றும் மியூசிக் கன்ட்ரோல் வசதியுடன் இந்த பைக்கில் வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதேபோல், ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள், வட்ட வடிவ ரியர் வியூ கண்ணாடிகள் மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பைக்கில் இடம் பெற இருப்போது தற்போதைய டீசர் படம் வாயிலாக உறுதியாகி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் 650 பைக் மாடல்களுக்கு (இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650) நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பையே விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் பியர் 650-க்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, October 28, 2024, 20:52 [IST]
English summary
Royal enfield teases bear 650 here is more details brands first scrambler based 650cc bike
மேலும்... #royal enfield #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+