ஸ்போர்ட்ஸ் பைக்கெல்லாம் கொஞ்சம் ஓரமா நில்லுங்க.. அதிக திறனை வெளிப்படுத்தும் ஸ்கூட்டர்களின் லிஸ்ட்!

ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கே சவால் விடும் திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் இந்த உலகத்தில் விற்பனைக்குக் கிடைக்கின்றன என சொன்னால் உங்களால் நம்ப முடிகின்றதா.. நீங்கள் அதை நம்பிதான் ஆக வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான ஸ்கூட்டர்கள் இந்த உலகத்தில் மிக தாராளமான எண்ணிக்கையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஸ்கூட்டர்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

நல்ல டிமாண்ட் ஸ்கூட்டர்களுக்குக் கிடைக்கின்ற காரணத்தினாலேயே இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், ஸ்கூட்டர் காதலர்களைக் கவரும் நோக்கில் அதையும் அதிக திறனை வெளியேற்றக் கூடியதாக உருவாக்கி இருக்கின்றனர். அந்தவகையில், உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளுக்கு இணையான திறனை வெளியேற்றும் டாப் ஐந்து ஸ்கூட்டர்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Powerful scooters

அப்ரில்லா எஸ்ஆர்வி850 (Aprilia SRV850): உலக சந்தையில் இந்த ஸ்கூட்டர் 2012 தொடங்கி 2016 வரையில் விற்பனையில் இருந்தது. இந்தியாவில் 2015இல் இந்த வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டது. அப்போது ரூ. 15.72 லட்சத்திற்கு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டரில் 839.3 சிசி திறனை வெளியேற்றக் கூடிய வி-ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இது அதிகபட்சமாக 76 எச்பி மற்றும் 76 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் மைலேஜ் திறன் மிக மிக குறைவாகும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கே வெறும் 14 கிமீ வரையில் மட்டுமே அது மைலேஜ் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 199 கிமீ ஆகும்.

பிஎம்டபிள்யூ சி 650 ஜிடி (BMW C 650 GT): ஸ்போர்ட்ஸ் பைக்குளுக்கு இணையான திறனை வெளியேற்றும் ஸ்கூட்டர் மாடல்களில், பிஎம்டபிள்யூ மோட்டாராட்-இன் இந்த தயாரிப்பு மிக முக்கியமான ஒன்றாகக் காட்சியளிக்கின்றது. 2012 ஆம் ஆண்டிலேயே இந்த ஸ்கூட்டர் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

ஸ்கூட்டரின் சேஸிஸ் ஸ்டீல் மற்றும் காஸ்ட் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டவை ஆகும். எடை குறைவாக இருக்க வேண்டும், கையாள்வதை எளிமையாக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த சேஸிஸ் அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 647 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 60 எச்பி மற்றும் 62 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

ஹோண்டா எக்ஸ்-ஏடிவி (Honda X-ADV): ஹோண்டா நிறுவனத்தின் அட்டகாசமான தயாரிப்புகளில் இதுவும் ஒன்று என கூறலாம். இதனால் ஆஃப்-ரோடுகளை சமாளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில் 745 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 57 எச்பி பவரையும், 69 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். உலக சந்தையில் இந்த ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

சுஸுகி பர்க்மேன் 650 (Suzuki Burgman 650): ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு இணையான திறன், அதிக சொகுசான ரைடு அனுபவம் என அனைத்திலும் மிக சிறந்த ஸ்கூட்டர் மாடலாக இது இருக்கின்றது. இந்த ஸ்கூட்டரில் 650 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 56 எச்பி மற்றும் 61 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

ஹோண்டா சில்வர் விங் (Honda Silver Wing): ஹோண்டா நிறுவனத்தின் மற்றுமொரு அதிக திறனை வெளியேற்றும் ஸ்கூட்டர் மாடலாக சில்வர் விங் உள்ளது. இதில் அதிகபட்சமாக 48 எச்பி மற்றும் 53 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட 582 சிசி வாட்டர் கூல்டு ட்வின் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே ஸ்போர்ட்ஸ் பைக்குளுக்கு இணையான திறனை வெளியேற்றும் திறன் கொண்ட ஸ்கூட்டர்கள் ஆகும். ஸ்கூட்டர்கள் அனைத்தும் லாங் டிரைவிற்கு ஏற்றவையும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றின் உருவமும் அதிக முரட்டுத் தனமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், மனதைக் கவரும் ஸ்டைலிலேயே அவை இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 2, 2024, 11:18 [IST]
English summary
Scooter models that exhibit performance equal to sports bikes
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+