ஆக்டிவா விலை நம்ப முடியாத அளவுக்கு குறைய போகுதா! புதுசா டூ-வீலர் வாங்கும் பிளான்ல இருக்கவங்க காத்திருக்கலாம்!

இந்தியாவில் விற்கப்படும் இரண்டு சக்கர வாகனங்களின் விலையைக் குறைப்பதற்கான முயற்சியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (Society of Indian Automobile Manufacturers) களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சங்கம் மத்திய அரசுக்கு சமீபத்தில் ஓர் கோரிக்கையை விடுத்திருந்தது. அதில் இரு சக்கர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்றே அது கூறியிருந்தது. இப்போதைய நிலவரப்படி 28 சதவீதம் இரண்டு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியாக மத்திய அரசு வசூலித்து வருகின்றது.

இதனையே 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான கோரிக்கையை கனரக தொழில் அமைச்சகத்திடமே சியாம் முன் வைத்துள்ளது. எனவே விரைவில் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோடி அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் என நம்பப்படுகின்றது.

Honda activa 125

இரண்டு சக்கர வாகனங்கள் இயங்கும் எரிபொருளின் அடிப்படையில் அவற்றிற்கு வரியை விதிக்குமாறும் சியாம் முன்மொழிந்துள்ளது. இப்போது, இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி பெட்ரோலில் இயங்கும் டூ-வீலர் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. விரைவில், சிஎன்ஜி மற்றும் ஃப்ளெக்ஸ் ஃப்யூவல் போன்றவற்றில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன.

இந்த மாதிரியான பசுமை இயக்கம் சார்ந்த இரு சக்கர வாகனங்களுக்கு 12 சதவீத ஜிஎஸ்டியை விதிக்கவும் சங்கம் பரிந்துரைக்கிறது. மேலும், கூடுதலாக 350சிசிக்கு மேல் இரண்டு சக்கர வாகனங்கள் மீதான 3 சதவீத செஸ் வரியை நீக்கவும் அவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் இந்த கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் ஏற்கும் எனில் இரண்டு சக்கர வாகனங்களின் விலைகள் மிகப் பெரிய அளவில் குறையக் கூடுதம். இதன் விளைவாக டூ-வீலர்களின் விற்பனையும் பலமடங்கு அதிகரிக்கக் கூடும் என நம்பப்படுகின்றது. இரண்டு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டே இந்த முயற்சியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் களமிறங்கி இருக்கின்றது.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் ஓர்நபர் இரண்டு சக்கர வாகனத்தை வாங்க வேண்டும் எனில் 28 சதவீத ஜிஎஸ்டி, சாலை வரி, காப்பீட்டு பிரீமியம் கட்டணம் மற்றும் 350 சிசி-க்கு மேல் திறன் கொண்ட இருசக்கர வாகனம் எனில் கூடுதலாக 3 சதவீத செஸ் ஆகியவற்றை வழங்க வேண்டி இருக்கின்றது.

இதன் விளைவாக விலை இரண்டு சக்கர வாகனங்களின் விலைகூட இந்தியாவில் மிக உயர்ந்துக் காணப்படுகின்றது. எனவேதான் இப்போதும் பலர் இரண்டு சக்கர வாகனங்களை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் வாங்கிக் கொண்டிருக்கின்றது. அதுவே, வரி குறைக்கப்படும் புதிய வாகனங்களின் விலையே குறைய நேரிடும். இத்துடன், ஏழை மற்றும் எளிய மக்களாலும் புதிய வாகனங்களையே வாங்கிக் கொள்ள முடியும்.

உலக நாடுகள் சிலவற்றில் இரண்டு சக்கர வாகனங்களை ஏழைகளுக்கான வாகனமாக கருதி அதற்கு மிகவும் குறைவான வரியே வசூலிக்கப்படுகின்றது. குறிப்பாக, இந்தோனேஷியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் 7 சதவீதம் முதல் 11 சதவீதம் வரையிலான குறைவான வரியே மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால், இந்தியாவில் மிக அதிக வரி வசூலிக்கப்படுகின்றது. இதுதவிர, புதிய பாதுகாப்பு மற்றும் உமிழ்வு விதிமுறைகள் காரணமாகவும் இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களின் விலை பலமடங்கு உயந்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களின் விலையைக் குறைப்பதற்கான முயற்சியில் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் களமிறங்கி இருக்கின்றது.

அதேவேளையில், இந்தியாவில் எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு அதிக வரி வசூலிப்பதன் விளைவாக பலர் தற்போது மின்சார வாகன பன்பாட்டிற்கு மாறி இருக்கின்றனர். மின்சார வாகனங்கள் மீதான வரி முற்றிலுமாக தவிர்க்கப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டே அதன் மீதான வரி ரத்து செய்யப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர இன்னும் பல சிறப்பு சலுகைகள் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் விளைவாகவும் நாட்டில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையிலேயே எரிபொருள் எஞ்சினில் இயங்கும் டூ-வீலர்களின் விற்பனையையும் உயர்த்தும் பொருட்டு சியாம் களமிறங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களின் விலை உயர்விற்கு வரி அதிகமாக இருப்பதும் ஓர் முக்கிய காரணமாக உள்ளது. இந்த காரணத்தினாலேயே வரி உயர்வைக் குறைக்கும் பொருட்டு சியாம் களமிறங்கி இருக்கின்றது. எனவே சீக்கிரத்திலேயே இந்தியாவில் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளின் விலை மிகப் பெரிய குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, June 17, 2024, 20:09 [IST]
English summary
Siam proposes lower gst rates for two wheelers in india
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+