பேட்டரி எரிஞ்சிரும், மோட்டார் தீஞ்சிரும் என்கிற பயமே வேண்டாம்.. 8 வருட வாரண்டியை அறிவித்த முன்னணி பிராண்டு!
மக்கள் பலர் மின்சார வாகன (Electric ) பயன்பாட்டிற்கு மாறும் எண்ணத்தில் இருக்கின்றனர். இருப்பினும், நாட்டில் அரங்கேறும் சில நிகழ்வுகள் அவர்களின் எண்ணத்திற்கு தடை கல்லாக இருக்கின்றன. குறிப்பாக, பேட்டரி (Battery)களால் மின்சார வாகனங்கள் தீ பிடித்து எரியும் நிகழ்வே பலரை மின்சார வாகனம் வாங்கு திட்டத்தைக் கைவிடச் செய்துக் கொண்டிருக்கின்றது. இதுமட்டும் இல்லைங்க, பேட்டரி பேக்குகளை சிலர் நம்பகத் தன்மையற்றதாகவும் பார்க்கின்றனர். அவற்றின் ஆயுட்காலம் எப்போது வேண்டுமானால் குறைந்து போகக் கூடும் என்று பலர் அஞ்சுகின்றனர்.
இந்த நிலையிலேயே பிரபல மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று தங்களின் தயாரிப்புகளின்மீது நம்பிக்கை வளர்க்கும் பொருட்டு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்து இருக்கின்றது. 8 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை தன்னுடைய தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார்களுக்கு வழங்க இருப்பதாக அது அறிவித்திருக்கின்றது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி (Simple Energy). இந்த நிறுவனமே தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நீண்ட கால வாரண்டி திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு தங்களின் தயாரிப்புகள் மீது நம்பிக்கை ஏற்படும் என நிறுவனம் நம்புகின்றது.
இதன் வாயிலாக விற்பனையை ஊக்குவிக்க முடியும் என்றும் அது கருதுகின்றது. அதேவேளையில், சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் தன்னுடைய தயாரிப்புகளை அதிக பாதுகாப்பு திறன் மிக்கதாக தயார் செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே நீண்ட கால வாரண்டியை துணிச்சலாக அது அறிவித்து உள்ளது.
சிம்பிள் பாதுகாப்பு மற்றும் சிம்பிள் சூப்பர் பாதுகாப்பு எனும் கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தின்கீழே புதிய உத்தரவாத திட்டத்தை சிம்பிள் எனெர்ஜி அறிவித்திருக்கின்றது. 8 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தையே அது அறிவித்திருக்கின்றது. இந்தியாவில் பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாருக்கு இந்த அளவு அதிக ஆண்டுகள் வாரண்டியை வழங்கும் முதல் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி என்பது குறிப்பிடத்தகுந்தது.
சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயன்படுத்தும் 95 சதவீதம் பொருட்கள் நிறுவனத்தால் தயாரிக்கப்படக் கூடியவை ஆகும். இதன்படி, பேட்டரி பேக்கும் நிறுவனத்தாலேயே தயாரிக்கப்படுகின்றது. நிறுவனம் பேட்டரி பேக்கின் ஆயுட்காலத்தை உறுதிப்படுத்தும் விதமாக அதே 7 ஏழு அடுக்குகளாக தயாரித்து இருக்கின்றது.
இதேபோல், இதன் எலெக்ட்ரிக் மோட்டாரும் நீடித்து உழைக்கும் வகையிலேயே தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நம்பிக்கையிலேயே நிறுவனம் அதிக ஆண்டுகள் வாரண்டியை அறிவித்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி பிராண்டின்கீழ் இரண்டு வாகன மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. சிம்பிள் ஒன், சிம்பிள் டாட் ஒன் ஆகியவையே அவை ஆகும். இதில், சிம்பிள் ஒன்-இன் விலை ரூ. 1.66 லட்சம் ஆகும்.
இதேபோல், சிம்பிள் டாட் ஒன்-க்கு ரூ. 1.45 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 212 கிமீ ரேஞ்சை வழங்கும். இதற்காக அதில் 5.0 kWh பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு உள்ளது. அதேவேளையில், சிம்பில் டாட் ஒன்-இல் ஓர் முழு சார்ஜில் 151 கிமீ தூரம் வரை மட்டுமே பயணிக்க முடியும்.
ஏனெனில் இதில் சிறிய பேட்டரி பேக்கான 3.7 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில், இரண்டும் எலெக்ட்ரிக் மோட்டார் விஷயத்தில் ஒற்றுமையுடன் காட்சியளிக்கின்றன. அந்தவகையில், 8.5 kW எலெக்ட்ரிக் மோட்டாரே இவற்றில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனங்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பணியிலேயே தற்போது சிம்பிள் எனெர்ஜி களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை (ஆயுத பூஜை, தீபாவளி) அனுசரிக்கப்பட இருக்கின்ற சூழலிலேயே சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் கூட்டப்பட்ட வாரண்டி திட்டத்தை நாட்டில் அறிமுகம் செய்திருக்கின்றது. ஆகையால், கூடுதல் வாடிக்கையாளர்களை இந்த பண்டிகைக் காலத்தில் சிம்பிள் எனெர்ஜி பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








