காலரை தூக்கிவிட்டு கெத்தா சொல்லுங்க.. இது நம்ம தமிழகத்தோட தயாரிப்பு.. அட்டகாசமான இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்!

கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் (Srivaru Motors). இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலாக பிரானா (PRANA) இருக்கின்றது. இதையே நிறுவனம் தற்போது அனைத்து நிலைகளிலும் மேம்படுத்தி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பிரானா 2.0 (PRANA 2.0) எனும் பெயரிலேயே இ-பைக் வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 2 லட்சத்து 55 ஆயிரத்து 150 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓலா ரோட்ஸ்டர் (Ola Roadster) இ-பைக்கிற்கு சவால் விடும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஸ்ரீவாரு மோட்டார்ஸ் தயார் செய்திருக்கின்றது.

Prana 2 0 electric bike launched

மேலும், ஆண்டு ஒன்றிற்கு சுமார் 10 ஆயிரம் யூனிட்கள் பிரானா 2.0 மின்சார பைக்கை விற்பனை செய்வதை இந்த நிறுவனம் இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், இந்தியா மட்டுமின்றி மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் எலெக்ட்ரிக் பைக்கை ஏற்றுமதி செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் தொடங்கப்பட்ட ஓர் நிறுவனமே ஸ்ரீவாரு மோட்டார்ஸ் ஆகும். நிறுவனத்தின் முதல் தயாரிப்பே பிரானா. இதனை 2021 ஆம் ஆண்டிலேயே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாகவே தன்னை மின்சார வாகன உற்பத்தியாளராகவும் ஸ்ரீவாரு மோட்டார்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்திக் கொண்டது.

Prana 2 0 electric bike side view

தற்போது இந்த பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பலதரப்பட்ட ஆய்வு மற்றும் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டநிலையிலேயே அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. புதியா பிரானா 2.0 எலெக்ட்ரிக் பைக் இரண்டு விதமான தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கிராண்ட் (Grand) மற்றும் எலைட் (Elite) ஆகியவையே அவை ஆகும். எலைட்டின் விலையையே மேலே பார்த்தோம். இதுவே ஆரம்ப நிலை தேர்வாகும். இதில் 5.0 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 123 கிமீ ஆகும். இதைவிட சற்று காஸ்ட்லியான தேர்வாக எலைட் இருக்கின்றது. இதற்கு ரூ. 3.20 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதில் அதிக ரேஞ்ஜை வழங்குவதற்காக 8.44 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 250 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். பிரானா 2.0 எலெக்ட்ரிக் பைக்கில் நவீன கால தொழில்நுட்ப வசதிகள் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஜிபிஎஸ் வசதிக் கொண்ட டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஆகும். இத்துடன், பாதுகாப்பு ரைடு அனுபவத்தை உறுதிப்படுத்தும் விதமாக டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. மிக முக்கியமாக இதன் பேட்டரி பேக்கை ஸ்டீலிலான உறையில் வைத்திருக்கின்றது. இத்துடன், நான்கு விதமான ரைடிங் மோட்கள் (பிராக்டிஸ், டிரைவ், ஸ்போர்ட்ஸ் மற்றும் ரிவர்ஸ்), பார்க்கிங் அசிஸ்டன்ஸ் போன்ற அம்சங்களும் பிரானா 2.0-வில் வழங்கப்பட்டு உள்ளன.

இதேபோல், ஸ்ரீவாரு மோட்டார்ஸ் விரைவில் அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையும் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றுத. அவை அலைவ் (Alive) எனும் பிராண்ன் கீழே விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனத்தையும் இந்தியாவைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கும் விற்பனைக்காக நிறுவனம் அனுப்பி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஸ்ரீவாரு மோட்டார்ஸின் உற்பத்தி ஆலை கோயம்புத்தூர் அருகே உள்ள சூலூரில் அமைந்துள்ளது. மாதத்திற்கு சுமார் 2,000 யூனிட்கள் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதே இந்த ஆலை ஆகும். புதிய பிரானா 2.0 நேற்று (ஆகஸ்டு 22) சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே அறிமுகம் செய்யப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே இந்தியாவின் இ-வாகன தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தமிழக நிறுவனம் ஒன்று புதிய உத்வேகத்துடன் புறப்பட்டு இருக்கின்றது. பிரானா 2.0-விற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 13:27 [IST]
English summary
Srivaru motors launches prana 2 0 e bike aiming for 10 000 sales
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+