இந்தியாவுல தயாரிச்ச ஹெல்மெட்டா இது? எனக்கு ஒன்னு குடுங்கன்னு வெளிநாட்டு காரங்க இதை கேட்டு வாங்குறாங்களாம்!
ஸ்டீல்பேர்ட் நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை தற்போது வெளியிட்டுள்ளன. இதில் இந்நிறுவனம் ஒரே ஆண்டில் 27% வளர்ச்சியை பெற்று ரூபாய் 711 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டூவீலரில் செல்பவர்களுக்கு ஹெல்மெட் என்பது கட்டாயமான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த ஹெல்மெட்டை தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் அதிகரித்துவிட்டன0 முக்கியமாக ஸ்டீல்பேர்ட் ஹைடெக் என்ற நிறுவனம்தான் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஹெல்மெட்டுகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றன. இதன்படி 2023-24 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனம் உலகின் மிகப்பெரிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனமாக மாறியுள்ளது.

இந்நிறுவனத்தின் ஹெல்மெட் மற்றும் மற்ற பொருட்கள் எல்லாம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலும் விற்பனையாகி வருகிறது. அனைத்து நாடுகளிலும் இதன் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் மொத்தம் ரூ 711 கோடியை வருமானமாக ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் ஒரே ஆண்டில் 27% அளவிற்கு விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் கபூர் கூறும் போது: " நாங்கள் ரைடர்களில் பாதுகாப்பை பிரதான நோக்கமாகக் கொண்டு வாகனங்களை தயாரித்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி வாடிக்கையாளர்கள் எங்கள் தயாரிப்புகளை எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பதை காட்டுகிறது. நாங்கள் உலகம் முழுவதும் உள்ள சாலைகளை பாதுகாப்பான சாலைகளாக மாற்றி வருகிறோம்.

ஸ்டீல்பேர்ட் நிறுவனத்தின் வெற்றி உலகம் முழுவதும் டூவீலர்களில் பயணிப்பவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்கிறார்கள் என்பதை பறைசாற்றுகிறது. உலகம் முழுவதும் 80 லட்சம் ஹெல்மெட்களை விற்பனை செய்துள்ளோம். எங்கள் தயாரிப்புகள் நம்பகத்தன்மையாகவும் நீடித்த உழைப்பு கொண்டதாகவும் இருக்கிறது." என்று கூறினார்.
ஸ்டீல்பேர்ட் நிறுவனம் கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் ஆலையை அமைத்து ஹெல்மெட்டுகளை தயாரித்து வருகிறது. இந்த ஆலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட திட்டமிடப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆலையில் இருந்து ஒரு நாளுக்கு 50,000 ஹெல்மெட்டுகள் தயாராக முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள ஓசூரிலும் இந்நிறுவனம் தயாரிப்பாளையை அமைத்து அங்கும் தங்களது தயாரிப்புகளை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக அதிகமான வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த பலருக்கு இந்நிறுவனம் வேலை வழங்க உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொருளாதாரம் வளர்ச்சி அடையும்.
இதுவரை ஸ்டீல்பேர்ட் நிறுவனம் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரைடர் கடைகளை திறந்துள்ளது. இங்கு ரைடர்களுக்கான சரியான ஸ்டைலிங் மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது. முக்கியமாக ரைடர்கள் தங்களது ஹெல்மெட்டுகளை சர்வீஸ் செய்யும் ஆப்ஷன் கூட இந்த கடைகளில் இருக்கிறது. வருங்காலங்களில் இந்த கடையின் எண்ணிக்கையை 1000ஆக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஸ்டீல்பேர்ட் நிறுவனம் ஹெல்மெட்டுகள் மட்டுமல்லாமல் பல்வேறு ரைடிங் கியர்கள், கிளவுஸ்கள், ரெயின் கோட் உள்ளிட்ட பல்வேறு விதமான ரைடிங் உபகரணங்களை தயாரித்து வருகிறது. இந்த உபகரணங்களும் தரமாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் பல்வேறு விதமான புதிய தயாரிப்புகளை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதன்படி இந்நிறுவனம் இந்த ஆண்டு 20 புதிய ஹெல்மெட்டுகளையும், அதில் 70 விதவிதமான வேரியன்ட்களையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்த ஹெல்மெட்டுகள் எல்லாம் பாதுகாப்புக்கு மட்டுமல்லாமல் அவர்களது ரைடிங் அனுபவத்தையும் சிறப்பாக வைத்திருக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் இந்த ஆண்டு நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து இந்த நிறுவனம் முன்னிலையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








