பைக்கில் எக்ஸாஸ்ட் மாத்துனா இவ்வளவு விஷயம் யோசிக்கனுமா? தெளிவான விளக்கம் இதோ!
இன்று பைக் வாங்கும் இளைஞர்கள் பலர் ஷோரூமில் இருந்து பைக் வாங்கும் போது வரும் ஸ்டாக் எக்ஸாஸ்டை விட வெளிமார்க்கெட்டில் விற்பனையாகவும் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் மீது அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். இந்த எக்ஸாஸ்ட் மாற்றுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்னென்ன தீமைகள் இருக்கின்றன? இதை மாற்றுவதால் பைக்கின் உள்ளே என்ன நடக்கிறது? என்ற விரிவான விளக்கத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
நமது டிரைவ்ஸ்பார்க் குழுவில் இருந்து பியர்ல்வின் பெங்களூருவில் உள்ள என்எம்டபிள்யூ ஃபெர்பார்மென்ஸ் ரேஸிங் மையத்திற்கு சென்று அங்கு உள்ள ஸ்டாக் எக்ஸாஸ்ட் மற்றும் ஆஃப்டர் மார்க்கெட் எக்ஸாஸ்ட் ஆகியவற்றை வைத்து இரண்டிற்கும் என்ன வித்தியாசம் இரண்டையும் பயன்படுத்துவதால் என்னென்ன மாற்றங்கள் பைக்கில் நடக்கிறது? எந்த பைக்குக்கு எப்படியான எக்ஸாஸ்ட் மாட்டலாம் என்ற விரிவான விளக்கத்தை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பொருத்தவரை கார்களில் நான்கு விதமான பாகங்கள் இருக்கும். பைக் எக்ஸாஸ்ட்டில் மூன்று விதமான பாகங்கள் இருக்கிறது. பைக்குகளை பொருத்தவரை ஹெட்டர், கேட்டலிஸ்ட், எண்டுகேன் என மூன்று விதமான பாகங்கள் உள்ளன. இதில் எக்ஸாஸ்ட் மூலம் எப்படி சத்தம் வருகிறது என்பதை இந்த வீடியோவில் விரிவாக விளக்கமாக கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கு ஆஃப்டர் மார்க்கெட் எந்தெந்த வாகனங்களில் எந்தெந்த நேரத்தில் மட்டும் பொருத்தலாம் சாலைகளில் இப்படியான எக்ஸாஸ்ட் பொருத்தப்பட்ட வாகனங்களை எல்லாம் ஓட்ட முடியுமா? இதற்கு சட்ட வழிமுறைகள் உள்ளதா? என்பதை இந்த வீடியோவில் அவர் விளக்கமாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








