சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம் இந்தியாவில் 2-வீலர்கள் உற்பத்தியில் வெற்றிக்கரமாக 80 இலட்சத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்தியாவில் சுஸுகி நிறுவனம் தற்சமயம் விற்பனை செய்யும் 2-வீலர்கள் குறித்தும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆகும். ஆரம்பத்தில், சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் உடன் இணைந்து செயல்பட்டு வந்த சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் பின்னர் 2001ஆம் ஆண்டில் இருந்து இந்திய மார்க்கெட்டில் தனித்து செயல்பட ஆரம்பித்தது.

suzuki 2-wheeler productions 80 lakhs

இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு விதமான ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகளை விற்பனை செய்துவரும் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியாவில் 2-வீலர்கள் உற்பத்தியில் வெற்றிக்கரமாக 80 இலட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் சுஸுகி நிறுவனத்தின் 80 இலட்சமாவது இரு சக்கர வாகனமாக சுஸுகி அவெனிஸ் 125 என்கிற ஸ்கூட்டர் தொழிற்சாலையில் இருந்து வெளிவந்துள்ளது.

பளிச்சிடும் சிவப்பு நிறத்தில் அவெனிஸ் 125 ஸ்கூட்டர் சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமாக ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள கெர்கி தாவுலா தொழிற்சாலையில் இருந்து முழுவதுமாக உற்பத்தியை முடித்துக் கொண்டு வெளிவந்துள்ளது. இந்தியாவில் சுஸுகி நிறுவனம் உற்பத்தி செய்த 80 இலட்ச 2-வீலர்கள் இந்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்டவையே ஆகும்.

suzuki 2-wheeler productions 80 lakhs

கிட்டத்தட்ட கடந்த 23 வருடங்களாக இந்தியாவில் 2-வீலர்களை உற்பத்தி செய்துவரும் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடைசி 40 இலட்ச 2-வீலர்களை மிக விரைவாக வெறும் 6 வருடங்களில் உற்பத்தி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடைசி 10 இலட்ச சுஸுகி 2-வீலர்கள் கடந்த 1 வருடத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.

சுஸுகியின் குருக்கிராம் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் சுஸுகி 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்தில் இருந்து பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டாலும், இந்த நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய வாகனங்களாக இருப்பது ஸ்கூட்டர்கள் ஆகும்.

suzuki 2-wheeler productions 80 lakhs

முக்கியமாக, ஆக்ஸஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அவெனிஸ் 125 உள்ளிட்ட 125சிசி ஸ்கூட்டர்களை சுஸுகி நிறுவனம் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்கிறது. இதில் குறிப்பாக, சுஸுகி ஆக்ஸஸ் 125 ஆனது ஒட்டுமொத்த இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிக்ஸெர், ஜிக்ஸெர் எஸ்.எஃப்155, ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் 250 எஸ்.எஃப் மற்றும் வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 உள்ளிட்டவை சுஸுகி மோட்டார்சைக்கிளில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான பைக்குகள் ஆகும். இவை இல்லாமல், வி-ஸ்ட்ரோம் 800டிஇ, கதானா மற்றும் ஹயபுஸா போன்ற விலையுயர்ந்த பைக்குகளையும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று சுஸுகி மோட்டார்சைக்கிள் ஆகும். மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று, சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனமும் இந்தியாவை உற்பத்தி மையமாக பயன்படுத்தி வருகிறது. அதாவது, நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுஸுகி 2-வீலர்கள் வெளிநாடுகளுக்கும் அதிக எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 18, 2024, 23:59 [IST]
English summary
Suzuki 2 wheeler productions hits 80 lakhs in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X