வாடிக்கையாளர்கள வளச்சு போட சுஸுகி போட்ட பிளான்! இந்த புதிய நிற தேர்விற்காகவே மக்கள் ஈ போல மொய்க்க போறாங்க!
இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் சுஸுகி (Suzuki)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் இரண்டு சக்கர வாகன பிரியர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு தன்னுடைய புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் புதிய நிற தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது. அக்சஸ் 125 (Suzuki Access 125) மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் (Suzuki Burgman Street) ஆகியவற்றிலேயே அது புதிய வண்ண ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. வரும் பண்டிகை நாட்களை முன்னிட்டே புதிய நிற தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
பொதுவாக, பண்டிகை நாட்களின் நெருக்கத்திலே வாகன உற்பத்தியாளர்கள் இதுபோன்று புதிய வண்ணத்தையும், சிறப்பு பதிப்புகளையும் அறிமுகம் செய்வர். ஆனால், பண்டிகை வர இன்னும் பல வாரங்கள் இருக்கின்ற நிலையில், இப்போதே வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் முயற்சியில் சுஸுகி நிறுவனம் களமிறங்கிவிட்டது.

Image இரண்டு வண்ணங்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய நிற தேர்வையே பர்க்மேன் மேன் மற்றும் அக்செஸ் 125 ஸ்கூட்டர்களில் சுஸுகி அறிமுகம் செய்து இருக்கின்றது. அந்தவகையில், அக்செஸ் 125 இல் மெட்டாலிக் சோனோம ரெட் மற்றும் பியர் மிராஜ் ஒயிட் (Metallic Sonoma Red / Pearl Mirage White) நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட வண்ண ஆப்ஷனையே அது புதிதாக அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய வண்ண தேர்விற்கு 90,500 என்கிற விலையே அது நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதேபோல், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் புதிதாக மேட் பிளாக் நம்பர் 2 (Metallic Matte Black No. 2) எனும் நிற அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது மேட் பிளாக் மற்றும் மெரூன் ஆகிய நிறங்களே பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த நிற தேர்விற்கு ரூ. 98,299 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பர்க்மேன் ஸ்ட்ரீட் மற்றும் அக்சஸ் 125 இந்த இரண்டும் மாறுபட்ட ஸ்டைலைக் கொண்டதாக இருந்தாலும், இரண்டும் ஒரே பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்டவையே.
மேலும், இதில் 124 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.58 பிஎச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 10 என்எம் டார்க்கை 5,500 என்எம் டார்க்கிலும் வெளியேற்றும். சிவிடி கியர்பாக்ஸ் இந்த எஞ்சினுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
பர்க்மேன் மற்றும் அக்சஸ் 125 பிரீமியம் அம்சங்கள் நிறைந்த ஸ்கூட்டர்கள் ஆகும். குறிப்பாக, இந்த ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் கன்சோல் வழங்கப்பட்டு இருக்கும். இதில் கூடுதல் சிறப்பு வசதியாக சுஸுகி ரைடு கனெக்ட் அம்சம் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சத்தின் வாயிலாகல திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவல், செல்போனுக்கு வரும் அழைப்புகள், எஸ்எம்எஸ்-கள் மற்றும் வாட்ஸ்அப் நோடிஃபிகேஷன் ஆகியவற்றை அறிந்துக் கொள்ள முடியும். மேலும் மிகப் பெரிய ஸ்டோரேஜ், யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் போர்ட் ஆகிய அம்சங்களும் இந்த ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டு இருக்கும். இதுபோன்று ஏகப்பட்ட அம்சங்களைத் தாங்கிய தயாரிப்பே சுஸுகியின் இந்த ஸ்கூட்டர் மாடல்கள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு என தனி ரசிக பட்டாளமே உண்டு இந்த பட்டாளத்தை வளைச்சுப் போடும் முயற்சியாகவே சுஸுகி நிறுவனம் அதன் இரண்டு முன்னணி மாடல்களில் புதிய நிற தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் மட்டுமல்ல அவெனிஸ் ஸ்கூட்டர் மாடலிலும் புதிய வண்ண தேர்வு அது அறிமுகம் செய்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








