ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஸ்கூட்டர் (Scooter) மாடல்களில் சுஸுகி அக்செஸ் (Suzuki Access)-ம் ஒன்றாகும். ஹோண்டா ஆக்டிவா (Honda Activa)-விற்கு போட்டியாக சந்தையில் விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் மாடல்களிலும் இது ஒன்றாக இருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலே விரைவில் எலெக்ட்ரிக் அவதாரத்தில் இந்த உலகத்திற்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுவும், சுஸுகி அக்செஸ் எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்த ஆண்டு முடிவடைவதற்குள்ளாகவே வெளியீட்டைப் பெற்றுவிடும் என கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவல்களே தற்போது வெளியாகி இருக்கின்றன. சமீபத்தில்தான் ஹோண்டா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஆக்டிவா (Activa EV)-வை உற்பத்தி செய்வதற்கான வேலையைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

Suzuki access electric scooter coming soon

இந்த நிலையிலேயே, எலெக்ட்ரிக் ஆக்டிவா பற்றிய தகவல்கள் வெளியாகி சில தினங்களிலேயே அதற்கு போட்டியாக சுஸுகி-யும் அக்செஸ் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே அதன் பர்க்மேன் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷனை சோதனையோட்டத்திற்கு உட்படுத்தி வருகின்றது.

ஆகையால், பலர் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்தியாவில் முதலில் விற்பனைக்குக் களமிறக்கப்படும் என எண்ணிக் கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே, அக்செஸ்-தான் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முதல் மின்சார ஸ்கூட்டராக விற்பனைக்கு வரும் என்கிற தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சுஸுகி அக்செஸ் ஓர் பிரீமியம் தர ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

அதிகம் ஸ்டைல் மற்றும் பிரீமியம் அம்சங்களை விரும்புவோர் மத்தியில் இந்த ஸ்கூட்டர் மாடலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் நான்கு விதமான ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் இரண்டு சிறப்பு பதிப்புகள் ஆகும். ரைடு கன்னெக்ட் பதிப்பு (Ride Connect Edition) மற்றும் சிறப்பு பதிப்பு (Special Edition) ஆகியவையே அவை ஆகும்.

வழக்கமான பதிப்பும் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதில் ஒன்று டிஸ்க் பிரேக் வசதியுடனும், மற்றொன்று டிஸ்க் பிரேக் அல்லாத டிரம் பிரேக் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 84,135 ஆகும். அதேவேளையில், அதிகபட்ச விலை ரூ. 94,736 ஆகும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இ20 எரிபொருளில் இயங்கும் வசதி, எல்இடி ஹெட்லேம்ப், சைடு ஸ்டாண்டு இன்டர்லாக் அமைப்பு, வெளிப்புற எரிபொருளை நிரப்பும் வாய் பகுதி, ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் திரை ஆகியவையே இந்த ஸ்கூட்டரின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

இதுதவிர, யுஎஸ்பி செல்போன் சார்ஜிங் பாயிண்ட், ஒரே ஸ்விட்சில் எஞ்சினை ஆஃப் செய்யும் வசதி, 21.8 லிட்டர் ஸ்டோரேஜ், நீளமான இருக்கை உள்ளிட்டவற்றையும் சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது. இதுமாதிரியான அம்சங்களே இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஏன் இதைவிட அதிக வசதிகள் அதில் வழங்கப்பட்டு இருந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய அளவில் போட்டி நிலவிக் கொண்டு இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் மற்றும் டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அதிக தொழில்நுட்ப வசதிகளை வாரி வழங்கி இருக்கின்றனர்.

இதனால்தான் இந்த பிரிவின் முன்னணி பிராண்டுகளாக அவர்கள் மாறி இருக்கின்றனர். இந்த மாதிரியானோரின் தயாரிப்புகளுக்கு போட்டி அளிக்க வேண்டும் எனில் சுஸுகி அக்செஸ்-ம் அதிக தொழில்நுட்பங்கள், அதிக ரேஞ்ஜ் மற்றும் சற்று குறைவான விலை ஆகியவற்றைக் கொண்டிருப்பது அவசியமாகும். இதை கட்டாயம் சுஸுகி அக்செஸ் இவி கொண்டிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இவி இந்த ஆண்டிற்கு உள்ளாகவே வெளியீட்டைச் சந்தித்துவிடும் என கூறப்படுகின்றது. எனவே 2025 இறுதிக்குள் அதனை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், சுஸுகி அக்செஸ் ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் என அனைவருக்குமான போட்டியாளராக களத்தில் குதிக்க இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, April 22, 2024, 21:25 [IST]
English summary
Suzuki access ev coming soon to compete with activa ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+