வெளியாகியது சுஸுகியின் முதல் இ-ஸ்கூட்டர் பற்றிய முக்கிய விபரம்.. ஓலா ஸ்கூட்டரை போலவே இருக்கும் போலையே!

பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி (Suzuki) இந்தியாவில் விரைவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இன்றைய நிலவரப்படி இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மிகப் பெரிய நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) வளர்ந்துக் காணப்படுகின்றது. இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp)பால்-கூட இதை வீழ்த்த முடியாத நிலையே தென்படுகின்றது. அந்த அளவிற்கு எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் வளர்ந்து காணப்படுகின்றது.

இந்த நிலையிலேய ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட மற்ற எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்தியாளர்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கில் சுஸுகி அதன் புதுமுக மின்சார இரண்டு சக்கர வாகன மாடல் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும், அந்நிறுவனம் அதன் முதல் மின்சார இரண்டு சக்கர வாகனத்தை இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Suzuki electric scooter

குறிப்பு: படம் உதாரணத்திற்காக வழங்கப்பட்டது. இந்த தகவலைத் தொடர்ந்து தற்போது கூடுதலாக மற்றுமொரு புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதாவது, நிறுவனம் தயாரிக்க இருக்கும் அதன் முதல் மின்சார இரண்டு சக்கர வாகனத்தில் நிரந்தரமாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக்கே இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது விற்பனையில் உள்ள பெரும்பாலான மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்குடனேயே கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே சுஸுகியின் முதல் மின்சார இரண்டு சக்கர வாகனத்தில் நிரந்தரமாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் நிரந்தரமாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக்குடனேயே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதேவேளையில், தன்னுடைய தயாரிப்புகளில் விரைவில் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக ஓலா அறிவித்து இருக்கின்றது. இவ்வாறு நிலையாக பொருத்தப்பட்ட பேட்டரி பேக் கொண்ட தயாரிப்புகளை (மின்சார வாகனங்களை) கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கைக் கொண்டதாக மாற்றும் முயற்சியில் முன்னணி நிறுவனங்கள் களமிறங்கி இருக்கின்றன.

இந்தவேளையிலேயே சுஸுகி அதன் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழட்டு மாட்டும் வசதி அல்லாத பேட்டரி பேக்கை வழங்க இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சுஸுகியின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இப்போது வரை என்ன பெயர் வைக்கப்படும் என்கிற விபரம் வெளியிடப்படவில்லை. அதனை நிறுவனம் எக்ஸ்எஃப் 091 (XF091) என்ற குறியீட்டுப் பெயரிலேயே சுஸுகி அடையாளப்படுத்தி வருகின்றது.

இந்த மின்சார ஸ்கூட்டர் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டிற்குள் சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடலை ஆண்டு ஒன்றிற்கு 25,000 யூனிட்கள் வரை விற்பனைச் செய்ய சுஸுகி திட்டமிட்டுள்ளது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனங்களின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும்.

இத்துடன், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் ஆகியவற்றிற்கும் இதன் வருகை மிகப் பெரிய போட்டியாக மாறும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமல்ல இன்னும் பல வாகன மாடல்களை சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

அந்தவகையில், விரைவில் இ-பர்க்மேன் (e-Burgman) மாடலையும் அது அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிறுவனம் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கையே பயன்படுத்தும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், இன்னும் பல பிரீமியம் அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவே இ-பர்க்மேன் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்த: ஃபிக்ஸட் பேட்டரி பேக் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருப்பது, அது மலிவு விலையில் விற்பனைக்கு வரும் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. இதேபோல், கணிசமான அளவிலேயே சிறப்பம்சங்களைக் கொண்ட தயாரிப்பாகவும் அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, July 12, 2024, 18:38 [IST]
English summary
Suzuki electric scooter with fixed battery coming 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+