சுஸுகி ஸ்கூட்டர் வச்சிருக்கீங்களா? அக்செஸ், பர்க்மேன் ஸ்கூட்டருல பிரச்னையாம்! 4லட்சம் டூ-வீலர்களுக்கு ரீ-கால்!
சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) நிறுவனம், இந்தியாவில் விற்பனைச் செய்த குறிப்பிட்ட சில இரண்டு சக்கர வாகன மாடல்களுக்கு அழைப்பு (Recall) விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உற்பத்தியின்போது ஏற்பட்ட கோளாறைச் சரி செய்யும் நோக்கிலேயே இந்த அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது. சுமார் 4 லட்சம் யூனிட் டூ-வீலர்களுக்கே சுஸுகி தற்போது மறு-அழைப்பு விடுத்து உள்ளது. மேலும், இந்த மறு-அழைப்பானது நிறுவனத்தின் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அக்செஸ் 125 (Access 125), பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 (Burgman Street 125) மற்றும் அவெனிஸ் (Avenis 125) ஆகியவற்றிற்கே இந்த ரீ-கால் பொருந்தும். மேலும், இந்த வாகன மாடல்களின் உற்பத்தி செய்யப்பட்ட நாள் பற்றிய விபரங்களையும் சுஸுகி வெளியிட்டு இருக்கின்றது.

அதன்படி, 30 ஏப்ரல் 2022 மற்றும் 3 டிசம்பர் 2022 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் தயார் செய்யப்பட்ட 125 சிசி ஸ்கூட்டர் மாடல்களலேயே பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கின்றது. மேலும், இவற்றிற்கே அழைப்பும் விடுக்கப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இக்னிஷன் காயிலில் (ignition coil) நிறுவப்பட்டு இருக்கும் உயர் டென்ஷன் கார்டு (high tension cord)-லேயே சிக்கல் இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
குறிப்பிட்ட தேவையை இந்த அம்சம் பூர்த்தி செய்யாத நிலையே தென்படுகின்றது. இந்த குறைபாட்டால் எஞ்சின் ஸ்தம்பித்து போகும் சூழல் ஏற்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, ஸ்டார்ட்டிங் பிரச்னை போன்றவற்றிற்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகின்றது. இதுபோன்று இன்னும் சில பெரிய சிக்கல்களை இது வழங்கலாம் என கணிக்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மாதிரியான பாதிப்புகளில் வாகனங்கள் சிக்கக் கூடாது என்பதன் அடிப்படையிலேயே முன்னெச்சரிக்கையை மேற்கொள்ளும் நடவடிக்கையில் சுஸுகி களமிறங்கி இருக்கின்றது. அதாவது சிக்கலை சரி செய்யும் பொருட்டே சுஸுகி தற்போது அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கின்றது. 3 லட்சத்து 88 ஆயிரத்து 411 யூனிட்டுகள் டூ-வீலர்கள் இந்த மறு-அழைப்பின் வாயிலாக பயன்பெற இருக்கின்றன.
கட்டணமில்லாமலேயே இந்த குறையை அது சரி செய்ய இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த அழைப்பில் வி-ஸ்ட்ரோம் 800 டிஇ (V-Strom 800 DE)-யும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தகுந்தது. உங்களின் டூ-வீலர் இந்த பாதிப்பிற்கு ஆளாகி இருக்கின்றதா என்பதை அறிய அருகில் இருக்கும் சர்வீஸ் மையங்களைத் தொடர்பு கொள்ளலாம் என சுஸுகி அறிவுறுத்தி இருக்கின்றது. அதேவேளையில் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை வாங்கிய உரிமையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது.
சுஸுகி நிறுவனத்தின் இந்த ஸ்கூட்டர் மாடல்களுக்கு இந்தியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே சமீபத்தில் சுஸுகி நிறுவனம் அக்செஸ் 125, பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 மற்றும் அவெனிஸ் 125 ஆகியவற்றில் புதிய நிற தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அக்செஸ் 125 இல் மெட்டாலிக் சோனோம ரெட் மற்றும் பியர் மிராஜ் ஒயிட் (Metallic Sonoma Red / Pearl Mirage White) நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட வண்ண ஆப்ஷனையும், பர்க்மேன் ஸ்ட்ரீட் ஸ்கூட்டரில் புதிதாக மேட் பிளாக் நம்பர் 2 (Metallic Matte Black No.2) எனும் நிற தேர்வும் அறிமுகம் செய்யப்பட்டது. மேட் பிளாக் மற்றும் மெரூன் ஆகிய நிறங்களாலேயே மேட் பிளாக் நம்பர் 2 அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகியின் இந்த ரீ-கால் பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணைய தள பக்கத்தையும் பார்வையிடலாம். அதிலும் உங்கள் வாகனம் பாதித்திருக்கின்றதா? அதன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். இந்த பாதிப்பால் பாதுகாப்பிலும் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், இதை சுலபமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும்.


Click it and Unblock the Notifications








