ஆசை சாக்லேட் ஞாபகம் இருக்கா.. அதுக்கே டஃப் கொடுக்கும்போல.. உற்பத்தியில் 6 மில்லியனை கடந்த ஸ்கூட்டர்!

இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று, சாக்லேட் ஃபேக்டரி சாக்லேட்டுகளை தயாரிப்பதைப் போல ஸ்கூட்டர் மாடல் ஒன்றை மிக அதிகளவில் தயாரித்துக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அது ஹோண்டா ஆக்டிவா அல்ல. இதற்கு போட்டியாக சந்தையில் இருக்கும் மற்றுமொரு ஸ்கூட்டர் மாடலான சுஸுகி அக்செஸ் 125 (Suzuki Access 125)-தான் அது. இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றே சுஸுகி மோட்டார்சைக்கிள். இதன் பிரீமியம் தயாரிப்பாக அக்செஸ் 125 ஸ்கூட்டர் மாடல் இருக்கின்றது.

இதையே சாக்லேட்டுகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் மிக அதிக அளவில் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. அதாவது, 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஆசை சாக்லேட்டை போல இந்த ஸ்கூட்டரை சுஸுகி தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக உற்பத்தியில் 6 மில்லியனை அக்செஸ் 125 கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது மாபெரும் உற்பத்தி சாதனை ஆகும்.

Suzuki access 125 6 million production

இதன் வாயிலாக ஹோண்டா ஆக்டிவாவிற்கு மிகப் பெரிய அளவில் அது சவால்விடுத்துக் கொண்டிருக்கின்றது மிக தெளிவாக தெரிய வந்திருக்கின்றது. அதேவேளையில், இந்தியாவிற்காக மட்டுமே இவ்வளவு யூனிட்டுகளையும் சுஸுகி மோட்டார்சைக்கிள் தயாரித்துவிடவில்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். வெளிநாடுகளுக்கும் சேர்த்துதான் இந்த பிரமாண்ட எண்ணிக்கையில் அக்செஸ் 125 ஸ்கூட்டர் தயாரிக்கப்பட்டு இருக்கின்றன.

பவர்ஃபுல் எஞ்சின், கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக தொழில்நுட்பங்களுக்கு பெயர்போனதாக இந்த ஸ்கூட்டர் மாடல் அறியப்படுகின்றது. குறிப்பாக, மாடர்ன் கால அம்சங்களைத் தாங்கிய கிளாசிக் லுக் ஸ்கூட்டராக இது காட்சியளிக்கின்றது. இதனால்தான் பலரின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராக அக்செஸ் 125 மாறியிருக்கின்றது.

Suzuki access 125 front look

இதன் விளைவாகவே 6 மில்லியன் உற்பத்தியை இந்த ஸ்கூட்டர் எட்சியிருக்கின்றது. இந்தியாவில் இந்த ஸ்கூட்டரை 2006 ஆம் ஆண்டிலேயே சுஸுகி நிறுவனம் முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. குடும்பஸ்தர்கள் மட்டுமின்றி இளைஞர்களின் மனம் கவர்ந்த ஸ்கூட்டராகவும் அது காட்சியளிக்கின்றது. அந்தவகையில், ஆண் மற்றும் பெண் என இரு பாலரும் விரும்பக் கூடிய ஸ்கூட்டர் மாடலாக அக்செஸ் மாறியிருக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் வாடிக்கையாளர்களைக் கவரும் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அவற்றில் மிக சிறந்ததாக ஈசி ஸ்டார்ட் சிஸ்டம், நீளமான இருக்கை, அகலமான கால் வைக்கும் இடம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஸ்கூட்டர் மாடலாக அக்செஸ் 125 மாடல் காட்சியளிக்கின்றது.

இந்த ஸ்கூட்டரில் மிகப் பெரிய ஸ்டோரேஜ் வசதி இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. 22.3 லிட்டர் அளவுக் கொண்டதே அது ஆகும். இதன் வாயிலாக அதிக பொருட்களை உள்ளே வைத்துக் கொள்ள முடியும். இதுதவிர, அதிக மைலேஜை வழங்குவதற்காக சுஸுகி ஈகோ பெர்ஃபார்மன்ஸ் எனும் தொழில்நுட்பத்தை வழங்கி இருக்கின்றது.

இத்துடன் அட்வான்ஸ்டு ஃப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் ஈகோ அசிஸ்ட் இலுமினேட்டர் அம்சங்களும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவே, அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான மாசு வெளியேற்றத்திற்கு உதவியாக இருக்கின்றன. தொடர்ந்து, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி கொண்ட திரை உள்ளிட்டவையும் அக்செஸ் 125 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது ஓர் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்டதும் கூட. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக நான்கு விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இதன் ஆரம்ப விலையும் குறைவாக உள்ளது. ரூ. 84,935 என்கிற விலையிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

அக்செஸ் 125 ரைடு கன்னெக்ட் எடிசன் (Access 125 Ride Connect Edition Disc Brake with Alloy Wheel), அக்செஸ் 125 ஸ்பெஷல் எடிசன் (Access 125 Special Edition Disc Brake Variant), அக்செஸ் 125 ஸ்டாண்டர்டு டிஸ்க் பிரேக் (Access 125 Standard Edition Disc Brake Variant) மற்றும் அக்செஸ் 125 ஸ்டாண்டர்டு டிரம் பிரேக் (Access 125 Standard Edition Drum Brake Variant) ஆகிய வேரியண்டுகளிலேயே அக்செஸ் 125 விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள இளைஞர்கள் பலரின் பிரியமான ஸ்கூட்டர் மாடலாக சுஸுகி அக்செஸ் 125 காட்சியளிக்கின்றது. இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் மத்தியிலேயே இதற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு அதன் வெளிப்புற தோற்றமே முக்கியமான காரணமாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, December 29, 2024, 14:47 [IST]
English summary
Suzuki motorcycle india celebrates production of 6 million access 125 scooters more details
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+