30 நாளில் 94,370 பேர் இந்த கம்பெனி வண்டியை வாங்கிட்டாங்களா? ஆச்சரியமா இருக்குதே!
தற்போது டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் நவம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனமும் தனது விற்பனை விபரத்தை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் 8 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு மாதமும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றன. இதன் மூலம் எந்தெந்த நிறுவனங்களில் வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன என்ற விபரத்தை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். இதனால் மக்கள் மத்தியில் அந்த நிறுவனத்தின் வாகனங்கள் மீது அதிக மோகம் இருக்கிறது என்ற விவரமும் தெரியவரும்.

இப்படியாக கடந்த நவம்பர் மாதம் இந்தியா முழுவதும் விற்பனையான சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் விற்பனை விபரங்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மட்டும் எட்டு சதவீதம் அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மட்டும் சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் 94,370 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.
இதுவே கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்நிறுவனம் வெறும் 87,096 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அதை ஒப்பிடும்போது தற்போது 8 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இது குறித்த விற்பனை விபரங்களை சற்று விரிவாக பார்ப்போம்.

கடந்த நவம்பர் மாதம் நடந்த ஒட்டுமொத்த விற்பனையில் 78,033 வாகனங்கள் உள்நாட்டிலேயே விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 73,135 வாகனங்கள் தான் உள்நாட்டில் விற்பனையாகியிருந்தது. இதை ஒப்பிடும்போது 7 சதவீதம் அளவுக்கு உள்நாட்டு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
அடுத்ததாக ஏற்றுமதி விபரங்களை பார்க்கும்போது சுசுகி நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 16,037 வாகனங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மொத்தம் 13,961 வாகனங்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. தற்போது 15 சதவீதம் அளவுக்கு ஏற்றுமதி வளர்ச்சி அடைந்துள்ளது.

இது குறித்த அந்நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் கூறும்போது சுஸூகி நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகமாக பெற்று வருவதாகவும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்டு நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும் இதன் காரணமாக நல்ல வளர்ச்சியை பெற்று வருவதாகவும் இதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு அதிக லாபம் கிடைத்து வருவதாகவும் இது இந்த வெற்றியை அந்நிறுவனம் தங்கள் ஊழியர்களுக்கும் பார்ட்னர்களுக்கும் டீலர் நெட்ஒர்க் சமர்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் டூவீலர் மார்க்கெட் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. மிடில் கிளாஸ் மக்கள் பலர் டூவீலர் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். உள்ளூர் பயன்பாட்டிற்கு டூவீலர் தான் அதிகம் தேவைப்படுகிறது என்பதால் கார் பயன்படுத்தும் பல வாடிக்கையாளர்கள் டூவீலரையும் புதிதாக வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். நிச்சயம் இந்த மார்க்கெட் இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு வலுவாக இருக்கும்.
இந்நிலையில் சுஸூகி நிறுவனத்தின் தயாரிப்பை கடந்த நவம்பர் மாதம் மட்டும் சுமார் ஒரு லட்சம் பேர் வாங்கி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான பெரிய விஷயமாக இருக்கிறது. சுஸூகி நிறுவனத்தையும் தயாரிப்புகள் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக இருக்கிறது. தொடர்ந்து இந்த விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுஸூகி நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக வாகன தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் திரும்பி மக்கள் நம்பிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் தரமான தயாரிப்புகள் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமாகி வருவதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications









