சுஸுகி 2-வீலர்களுக்கு திடீரென என்ன இவ்வளவு டிமாண்ட்? ராயல் என்ஃபீல்டு கூட இதை எதிர்பார்த்திருக்காது!

சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle), ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னிலையில் உள்ளது. இந்த ஜப்பானிய 2-வீலர் நிறுவனம் கடந்த 2024 ஜூன் மாதத்தில் எத்தனை இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்பது குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி பார்க்கும்போது, இந்தியாவில் சுஸுகி 2-வீலர்ஸின் விற்பனை எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும், வழக்கத்தை காட்டிலும் அது எவ்வளவு அதிகம் என்பதையும் பற்றி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குறிப்பாக இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனையில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த 3 மாதங்களில் அதிக எண்ணிக்கையில் சுஸுகி 2-வீலர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கடந்த 2024 ஜூன் மாதத்தில் சுஸுகி 2-வீலர்ஸின் விற்பனை கிட்டத்தட்ட 90 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

suzuki motorcycle two wheeler sales

சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 88,287 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 9% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 80,737 இரு சக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்து இருந்தது.

கடந்த ஜூன் மாதத்தில் சுஸுகி விற்பனை செய்துள்ளதாக நாங்கள் குறிப்பிட்டுள்ள 88,287 வாகனங்களில் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியும் அடங்குகிறது. கடந்த ஜூன் மாதத்தில் உள்நாட்டில், அதாவது இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யபட்ட சுஸுகி 2-வீலர்ஸின் எண்ணிக்கை என்று பார்த்தால், 71,086 ஆகும். கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் 63,059 இருசக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

suzuki motorcycle two wheeler sales

இந்த வகையில் பார்க்கும்போது, சுஸுகி 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 13% அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து சுஸுகி மோட்டார்சைக்கிளின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சுஸுகி 2-வீலர்ஸின் எண்ணிக்கை 17,678 ஆகும். ஆனால், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 17,201 இருசக்கர வாகனங்களை மட்டுமே சுஸுகி நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது.

இருப்பினும், சுஸுகி மோட்டார்சைக்கிளின் ஒட்டுமொத்த விற்பனை அதிகரித்து இருப்பதால், இது நிறுவனத்துக்கு பெரியதாக கவலையாக இருக்காது. குறிப்பாக, உள்நாட்டு விற்பனை அதிகரித்து இருப்பது சுஸுகிக்கு நல்ல உத்வேகத்தை அளிக்கும். நடந்து முடிந்த ஜூன் மாதத்தில் மட்டுமில்லாமல், சுஸுகி மோட்டார்சைக்கிளின் விற்பனை ஆனது கடந்த 3 மாதங்களாக சிறப்பாக உள்ளது.

suzuki motorcycle two wheeler sales

சுஸுகி 2-வீலர்ஸின் ஒட்டுமொத்த விற்பனை வழக்கத்தை காட்டிலும் கடந்த 3 மாதங்களில் 15% அதிகரித்துள்ளது. இதுகுறித்து சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் & ஆஃப்டர் சேல்ஸ் பிரிவின் துணை தலைவர் தேவஷிஷ் ஹண்டா கூறுகையில், "ஜூன் 2024இல், குறிப்பாக இந்திய சந்தையில் வலுவான தேவையால் அதிகரித்த எங்கள் விற்பனை வளர்ச்சியில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்த நிதியாண்டில், முதல் காலாண்டில் எங்கள் விற்பனையில் ஆரோக்கியமான 15% வளர்ச்சி உடன், நல்ல தொடக்கத்தை நாங்கள் பெற்றுள்ளோம். வரும் மாதங்களில் இந்த வளர்ச்சி வேகத்தை தக்க வைத்துக் கொள்வதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் அர்பணிப்புள்ள டீலர் நெட்வொர்க்கின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத ஆதரவிற்காக நாங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி மோட்டார்சைக்கிளின் வெளிநாட்டு ஏற்றுமதி ஆனது கணிசமாக குறைந்துள்ளது. இருப்பினும், உள்நாட்டு விற்பனை அதிகரித்துள்ளதை எண்ணி நிச்சயமாக சுஸுகி நிறுவனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும். இது சுஸுகி 2-வீலர்களுக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் தேவையை காட்டுகிறது. இதனால், வரும் மாதங்களில் புது, புது 2-வீலர்களை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் முயற்சிக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 6, 2024, 17:00 [IST]
English summary
Suzuki motorcycle two wheeler sales report of june 2024 check all details here
மேலும்... #suzuki motorcycle #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X