சுஸுகியோட லெவலே இப்ப வேற! மேட்-இன்-இந்தியா 2-வீலர்களை வாங்க தான் வெளிநாட்டில் ஆள் இல்ல!!

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. ஜப்பானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்கிறது. அதேபோல், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கிலான 2-வீலர்களை சுஸுகி ஒவ்வொரு மாதமும் ஏற்றுமதி செய்கிறது. இந்த வகையில் நடந்து முடிந்த 2024 அக்டோபர் மாதத்தில் எத்தனை 2-வீலர்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.

இந்தியாவில் பல்வேறு விதமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிறுவனத்தின் ஆக்ஸஸ் ஸ்கூட்டருக்கும், எஃப்.இசட் பைக்குகளுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைக்கிறது. இதன் மூலமாக, ஒவ்வொரு மாதமும் குறைந்தப்பட்சம் 1 லட்சம் வாகனங்களை ஆவது சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்துவிடுகிறது.

suzuki motorcycles two wheelers sales

இந்த வகையில், கடந்த 2024 அக்டோபர் மாதத்திலும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 55 இருசக்கர வாகனங்களை சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் விற்பனை செய்துள்ளது. இதில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 940 வாகனங்கள் உள்நாட்டிலும், 15 ஆயிரத்து 115 வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டவை ஆகும். ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெறும் 1 லட்சத்து 507 வாகனங்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

அந்த மாதத்தில் 84,302 சுஸுகி 2-வீலர்கள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன; 16 ஆயிரத்து 205 வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், சுஸுகி 2-வீலர்களின் உள்நாட்டு விற்பனை அதிகரித்துள்ளது என்றாலும், வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், சுஸுகி 2-வீலர்களின் ஏற்றுமதி மாதத்திற்கு மாதம் கணிசமாக குறைந்து வருகிறது.

suzuki motorcycles two wheelers sales

ஏனெனில், இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் 21 ஆயிரத்து 922 இருசக்கர வாகனங்களை சுஸுகி இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 99,185 இருசக்கர வாகனங்களை சுஸுகி விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், செப்டம்பரை காட்டிலும் அக்டோபரில் சுமார் 20 ஆயிரத்து 870 இருசக்கர வாகனங்களை சுஸுகி அதிகமாக விற்பனை செய்துள்ளது.

குறிப்பாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் வெறும் 77 ஆயிரத்து 263 சுஸுகி 2-வீலர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த அக்டோபர் மாதத்தில் சுஸுகி 2-வீலர்களின் உள்நாட்டு விற்பனை 1 லட்சத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த 2024 ஏப்ரல்- அக்டோபர் மாதத்தில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 930 இருசக்கர வாகனங்களை சுஸுகி விற்பனை செய்துள்ளது.

suzuki motorcycles two wheelers sales

இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 6 லட்சத்து 21 ஆயிரத்து 470 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 460 ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 7 மாதங்களில் 6 லட்சத்து 70 ஆயிரத்து 457 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் இருந்து சுஸுகி விற்பனை செய்து இருந்தது.

இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டில் ஏப்ரல்- அக்டோபரில் 69 ஆயிரத்து 473 சுஸுகி 2-வீலர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்த்ததை போல், சுஸுகியின் உள்நாட்டு விற்பனை 92 ஆயிரத்து 600 வாகனங்கள் அதிகரித்துள்ள போதிலும், வெளிநாட்டு ஏற்றுமதி 23 ஆயிரத்து 127 வாகனங்கள் குறைந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸின் உள்நாட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் சுஸுகி நிறுவனத்துக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தாலும், வெளிநாட்டு ஏற்றுமதி குறைவு நிச்சயமாக சற்று கவலை அளிக்கும். ஏனெனில், ஜப்பானை சேர்ந்த சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவை ஓர் வாகன உற்பத்தி மையமாகவே பார்க்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 9, 2024, 23:32 [IST]
English summary
Suzuki motorcycles two wheelers sales october 2024 check all details here
மேலும்... #suzuki motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X