ரூ.20 லட்சத்தில் விற்ற பைக்கை கஸ்டமர்களிடம் இருந்து திருப்பி கேட்கும் சுஸுகி! 3 ஆண்டுக்கு பின் வெளிவந்த உண்மை!

சுஸுகி இந்தியா (Suzuki India) நிறுவனத்தின் பிரபலமான ஹயபுஸா (Hayabusa) பைக் மாடர்ன் தரத்தில் சில வருடங்களுக்கு முன்னர் தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் ஆரம்பத்தில் இருந்து இதுவரையில் உருவாக்கப்பட்ட அனைத்து ஹயபுஸா பைக்குகளையும் சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் திரும்ப அழைக்கிறது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஹயபுஸா பைக்குகளில் பிரச்சனையை கண்டறிந்ததை அடுத்து இந்த திரும்ப அழைக்கும் முடிவை சுஸுகி கையில் எடுத்துள்ளது. அப்படி என்ன பழுதை சுஸுகி கண்டுப்பிடித்துள்ளது என்பதையும், இந்த சுஸுகி பைக்கை பற்றியும் இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான சுஸுகி சூப்பர் பைக்குகளுள் ஒன்று, ஹயபுஸா ஆகும். இந்தியாவிலும் சுஸுகி ஹயபுஸா பைக்கிற்கு கணிசமான ரசிகர் பட்டாளம் உள்ளது. இரு தலைமுறைகளை கடந்து இந்தியாவில் தற்சமயம் 3வது தலைமுறை சுஸுகி ஹயபுஸா பைக் விற்பனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுஸுகி இங்கு அறிமுகம் செய்தது.

suzuki recalls hayabusa bikes

2021 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும், அந்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இருந்தே ஹயபுஸா பைக்குகள் உற்பத்தி இந்தியாவில் துவங்கப்பட்டுவிட்டது. இதை ஏன் நாங்கள் இங்கே கூறுகிறோம் என்றால், 2021 மார்ச் மாதத்தில் இருந்து நடந்து முடிந்த 2024 செப்டம்பர் மாதம் வரையில் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து சுஸுகி ஹயபுஸா பைக்குகளும் திரும்ப அழைக்கப்படுகின்றன. இந்த காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்தம் 1,056 சுஸுகி ஹயபுஸா பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

காலப்போக்கில் பைக்கின் பிரேக் சிஸ்டத்தில் ஏற்படும் பிரச்சனையை சுஸுகி கண்டறிந்துள்ளது. பிரேக்கை அழுத்தும்போது முன் பிரேக் லிவர் ஹேண்டில்பாருடன் மிகவும் நெருங்கி வருவதை சுஸுகி நிறுவனம் கண்டறிந்ததை அடுத்து, அவற்றை திரும்ப அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த பிரச்சனையினால் பிரேக் கொடுத்த பின் பைக் நிற்கும் தூரம் அதிகமாக இருப்பதை சுஸுகி தற்போது கண்டறிந்துள்ளது.

suzuki recalls hayabusa bikes

இது விபத்திற்கு வழிவகுக்கலாம் என்பதால், ஹயபுஸா பைக்குகளை உடனே அழைத்து இந்த பழுதை சரிச்செய்து கொடுக்க சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் இறங்கியுள்ளது. முந்தைய 2ஆம் தலைமுறை சுஸுகி ஹயபுஸா பைக்குகளிலும் சில பிரேக்கிங் பிரச்சனைகள் இருந்தன. இந்த பிரச்சனைகளை தவிர்க்கும் முயற்சியாகவே 3ஆம் தலைமுறை ஹயபுஸாவில் பெரிய டிஸ்க்குகள் உடன் பிரெம்போ ஸ்டைலிமா காலிபர்கள் பொருத்தப்பட்டன.

ஆனால், பைக்கின் பிரேக் லிவரில் சுஸுகி பிரச்சனையை தற்போது கண்டறிந்துள்ளது. வழக்கம்போல் இந்த பிரச்சனையை சுஸுகி இலவசமாக பழுதுப் பார்த்துக் கொடுக்கும். 2021 ஏப்ரலில் இருந்து ஹயபுஸா பைக்கை வாங்கியவர்கள் சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக திரும்ப அழைக்கப்படுவர். பைக்கை ஷோரூம் சொல்லும் சர்வீஸ் செண்டருக்கு கொண்டு சென்றால் பழுது சரிப்பார்த்துக் கொடுக்கப்படும்.

suzuki recalls hayabusa bikes

கஸ்டமர்களை அழைக்க ஷோரூம் அதிகாரிகள் துவங்கிவிட்டார்களா? இந்த பழுதை சரிச் செய்வதற்கு எவ்வளவு மணிநேரம் எடுக்கும் என்கிற கேள்விகளுக்கு விடை இல்லை. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள சுஸுகி டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும். ஹயபுஸா சூப்பர்பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவிலேயே சுஸுகி விற்பனை செய்யும் மிக விலையுயர்ந்த பைக் இதுவாகும்.

ஸ்டாண்டர்ட் மற்றும் 25வது ஆண்டுநிறைவு கொண்டாட்ட எடிசன் என 2 விதமான வேரியண்ட்களில் ஹயபுஸா பைக் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.16.95 லட்சம் மற்றும் ரூ.17.70 லட்சம் ஆகும். மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் சுஸுகி ஹயபுஸா பைக்கில் 1340சிசி லிக்யுடு-கூல்டு, 4-சிலிண்டர் என்ஜின் கொடுக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த என்ஜினை வைத்து ஒரு காரையே இயங்க வைக்க முடியும். அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான பைக்கிலா சுஸுகி இப்படி அஜாக்கிரதையாக இருப்பது. கடந்த 3.5 வருடத்தில் மொத்தமாக 1,056 ஹயபுஸா பைக்குகள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றால், இதை வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 25 ஹயபுஸா பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த அளவுக்கு குறைவாக உற்பத்தி செய்யப்படும் சூப்பர்பைக்கில் இந்த பிரச்சனையை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 7:00 [IST]
English summary
Suzuki recalls hayabusa bikes in india due to front brake issue check all details here
மேலும்... #suzuki motorcycle #hayabusa #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X