மார்க்கெட்டே வேற மாதிரி ஆக போகுது.. ஹோண்டா ஆக்டிவா இவி கதையை முடிக்க வருகிறது சுஸுகி அக்செஸ் இவி!

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் ஆக்டிவா (Activa)-வின் மின்சார (Electric) வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இன்னும் ஒரு சில தினங்களிலேயே இதன் வெளியீட்டு நிகழ்வு அரங்கேற இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே சுஸுகி (Suzuki) நிறுவனம் அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான அக்செஸ்-இன் இவி (Access EV) வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதன் வெளியீட்டு நிகழ்வு 2025 ஆம் ஆண்டில் அரங்கேற இருப்பதாகவே தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஆக்டிவாவிற்கான போட்டி அடுத்த ஒரு சில மாதங்களிலேயே அதிகரித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சுஸுகி நிறுவனம் அதன் அக்செஸ் இவி-யை மட்டுமல்ல இந்தியாவில் பர்க்மேன் மேக்ஸி ஸ்கூட்டர் (Burgman Maxi Scooter)-இன் மின்சார வெர்ஷனையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

Suzuki access ev to launch

குறிப்பு: படம் உதாரத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கேற்ப கடந்த ;சில நாட்களுக்கு முன்னர் இந்த ஸ்கூட்டர் சோதனையோட்டம் செய்யப்பட்ட நிகழ்வு நாட்டில் அரங்கேறியது. ஆனால், இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களினால் முதலில் சுஸுகியின் அக்செஸ் இவியே விற்பனைக்கு வரும் என தெரிகின்றது. ஆனால், துள்ளியமான மாதம் மற்றும் நாள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

விரைவில் அதுபற்றிய தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், முதலில் பர்க்மேன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே விற்பனைக்கு வரும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. ஆனால், இதுவும் உறுதி செய்யப்படவில்லை. எனவே இரண்டில் எது முதலில் விற்பனைக்கு வரும் என்பதே மிகப் பெரிய குழப்பமாக மாறியிருக்கின்றது.

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் விளைவாக முன்னணி நிறுவனங்கள் பல நாட்டில் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றன. அந்தவகையில், ராயல் என்பீல்டு அதன் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 மற்றும் ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 ஆகிய இரண்டு இ-பைக் மாடல்களை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தது.

விரைவில் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 இ-பைக்கையும் அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதேபோல், ராயல் என்பீல்டு நிறுவனம் மட்டுமல்ல இன்னும் பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் விரைவில் புதிதாக மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.

அவர்களில் ஒருவராகவே சுஸுகி மாறி இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலரை விற்பனைக்குக் கொண்டு வரும்பட்சத்தில் ஹோண்டா ஆக்டிவா இவிக்கு மட்டுமல்ல ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி ஆகிய நிறுவனங்களின் மின்சார டூ-வீலர்களுக்கும் போட்டியாக அமையும். அவர்களுக்கு மட்டுமல்ல டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கும் அது போட்டியாக மாறும்.

சுஸுகி அக்செஸ் இவி கூடுதல் பிரீமியம் அம்சங்கள் தாங்கியா எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முக்கியமாக இப்போது விற்பனையில் ஐசிஇ அக்செஸ் ஸ்கூட்டரைக் காட்டிலும் கூடுதல் அம்சங்கள் கொண்டதாக அக்செஸ் இவி விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இணைப்பு வசதி, திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் மற்றும் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களும் இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி ஓலா எலெக்ட்ரிக் பிராண்டே முன்னணி மின்சார இரண்டு சக்கர நிறுவனமாகக் காட்சியளிக்கின்றது. இந்த பிராண்டுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே விரைவில் ஹோண்டா அதன் ஆக்டிவா மின்சார வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இத்துடன் சுஸுகி அக்செஸ் இவி-யும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக அதன் வருகையை தர இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, November 24, 2024, 15:34 [IST]
English summary
Suzuki set to launch access ev in india in 2025 competing with honda activa ev
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+