சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motocycle) நிறுவனம் இந்திய இரண்டு சக்கர வாகன காதலர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான வி-ஸ்டார்ம் 800டிஇ (V-Strom 800DE) மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அறிமுகமாக இந்த பைக்கிற்கு ரூ. 10.30 லட்சம் விலையை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.
இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான ஆல்டோ கே10 (Alto K10) மாடலை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 3.99 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆகையால், இந்த கார் மாடல் ரெண்டு யூனிட்டுகளை வாங்கிய பின்னரும் கொஞ்சம் காசு மிச்சமிருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. புதிய சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். சேம்பியன் யெல்லோ (Champion Yellow), கிளாஸ் மேட் கிரே (Glass Mat Mechanical Gray) மற்றும் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக் (Glass Sparkle Black) ஆகிய நிற தேர்வுகளிலேயே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும்.
பைக்கின் விலையை போலவே அதில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களின் பட்டியலும் மிகப் பெரியதாகவே இருக்கின்றது. அந்தவகையில், 5 அங்குல வண்ண டிஎஃப்டி எல்சிடி திரை இரவு மற்றும் பகல் நேர மோடுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் பலதரப்பட்ட தகவலை வழங்கும் திரை ஆகும். இத்துடன் யுஎஸ்பி போர்ட் வசதியும் அதில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, ஹெக்ஸகோனல் எல்இடி ஹெட்லைட், பொஷிசன் லைட், டெயில் லைட் மற்றும் இன்டிகேட்டர் ஆகியவையும் கவர்ச்சியான தோற்றத்தில் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மிக சிறந்த ரைடு அனுபவத்திற்காக இந்த பைக்கில் ஹிட்டாச்சி அஸ்டெமோ இன்வெர்டட் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஷோவா மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் சிஸ்டத்திற்காக 310 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகள் வி-ஸ்டார்ம் 800டிஇ பைக்கில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பைக் ஓர் அட்வென்சர் வகை மோட்டார்சைக்கிள் என்பது குறிப்பிடத்தகுந்தது. நீண்ட தூர டிராவலை மேற்கொள்ள உகந்த பைக் மாடலும் இதுவாகும்.
மேலும், நெடுதூர பயணத்தின்போது தேவையான பொருட்களை எடுத்துச் செல்ல ஏதுவாக லக்கேஜ் கேரியர் பைக்கின் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஓர் பயணியும் பின்னால் அமர்ந்து பயணிக்க முடியும். எஞ்சினைப் பொருத்த வரை 776 சிசி, 270 கிராங்க் பாரல்லல் ட்வின் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84.3 பிஎச்பி பவரையும், 78 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், இந்த எஞ்சின் உடன் குயிக்ஷிஃப்டர் அம்சமும் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகின்றது. பைக்கின் உருவாக்கத்தில் ஜிஎஸ்எக்ஸ் மாடலில் பயன்படுத்தப்படும் அதே ஸ்டீல் ஃப்ரேமே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் அழகிய தோற்றத்திற்காக ஒயர் ஸ்போக் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், விண்ட்ஸ்கிரீன் (3 விதமாக அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ள முடியும்), சுஸுகி டிரைவ் மோட் செலக்டர், டிராகன்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடு-பை-ஒயர் எலெக்ட்ரானிக் த்ரோட்டில் சிஸ்டம், குயிக் ஷிஃப்ட் சிஸ்டம், ஏபிஎஸ் என ஏகப்பட்ட வசதிகளை இந்த பைக்கின் அதிக விலைக்கு ஏற்ப அதிகளவில் வாரி வழங்கி இருக்கின்றது, சுஸுகி மோட்டார்சைக்கிள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுஸுகி வி-ஸ்ட்ராம் 800டிஇ பைக்கின் அறிமுகத்தால் இந்தியாவின் விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள்களின் பட்டியல் லேசாக விரிவடைந்திருக்கின்றது. இந்த பைக்கிற்கு நடிகர் அஜித் போல அடிக்கடி பைக்கில் ஊர் சுற்ற செல்பவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








