இவ்ளோ கம்மி ரூபாக்கு இந்த பைக்கை விற்பனை செய்ய போறாங்களா? ஓலாவாலகூட இவ்ளோ கம்மி விலைக்கு தர முடியுமா தெரியல!

இந்திய மின்சார இரண்டு சக்கர வாகன சந்தையை அலங்கரிக்கும் விதமாக புதுமுக நிறுவனம் ஒன்று தரமான எலெக்ட்ரிக் பைக் மாடல் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முற்றிலும் விநோதமான தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் அந்த எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்புகள் என்ன? எவ்வளவு விலைக்கு அது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது? இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தியை மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் ஸ்விட்ச் (Svitch)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே இந்தியாவின் எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவை அலங்கரிக்கும் விதமாக புதுமுக எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்விட்ச் சிஎஸ்ஆர் 762 (Svitch CSR 762) எனும் புதுமுக மாடலையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

Svitch csr 762

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஸ்விட்ச் நிறுவனம் மின்சார மிதிவண்டிகள் உற்பத்தியையே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் கை தேர்ந்த நிறுவனமாகவும் அது விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே தன்னுடைய பார்வையை அது எலெக்ட்ரிக் பைக் உற்பத்தியின் பக்கமும் திருப்பி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் சிஎஸ்ஆர் 762 இ-பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த பைக்கை அது வீடியோ கேம் அல்லது ஹாலிவுட் மூவிக்களில் வரும் வாகனங்களைப் போல முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஸ்விட்ச் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது.

Svitch csr 762 first aid kit

பெட்ரோல் டூ-வீலர்களுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே இந்த பைக்கை ஸ்விட்ச் நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், டார்க், ஓபென் மற்றும் ரிவோல்ட் உள்ளிட்ட நிறுவனங்களின் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு இது மிகப் பெரிய போட்டியாளனாக அமைந்திருக்கின்றது. ஸ்விட்ச் சிஎஸ்ஆர் 762 எலெக்ட்ரிக் பைக்கின் தனித்துவமான தோற்றத்திற்கு அதன் மாறுபட்ட உடற்பாகங்கள் மட்டுமே காரணமல்ல.

இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் விநோத அணிகலன்களும் ஓர் காரணமாக உள்ளன. மாட்டின் கொம்பைப் போன்று விரிந்திருக்கும் ஹேண்டில் பார், மெல்லிய டர்ன் லைட்டுகள், சதுர வடிவில் ஹெட்லைட் (இதுலேயே பகல் நேரத்தில் ஒளிரும் லைட்டுகளும் சதுர வடிவில் இடம் பெற்றிருக்கும்), பெரிய சூட்-கேஸ் போன்ற பைக்கின் அடிப் பகுதி உள்ளிட்டவற்றாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

Svitch csr 762 side view

இந்த பாங்களே பைக்கிற்கு மாறுபட்ட தோற்றத்தை வழங்கும் வகையில் உள்ளன. ஃப்யூவல் டேங்க் அமைப்பில் இருப்பது எரிபொருள் நிரப்பும் தொட்டி அல்ல. அது பொருட்களை வைத்துக்கொள்ள உதவும் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஆகும். இதில் 40 லிட்டர் வரையில் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும்.

பேட்டரி பேக்குகள் பெரிய லக்கேஜ் பெட்டி போல் இருக்கும் பாகத்திற்குள் இடம் பெற்றஇருக்கும். இரண்டு சிறிய கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்குகளே அதில் இடம் பெற்றிருக்கும். இந்த பேட்டரியை தனியாக கழட்டி எடுத்துச் சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.

Svitch csr 762 side look

இத்துடன், இரண்டு பேட்டரி பேக்குகளை கூடுதலாக வாங்கிக் கொள்ளும் வசதியையும் இந்த நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது. தடையில்லா பயணத்தை சிஎஸ்ஆற் 762 இ-பைக் உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ள இது ஏதுவாக இருக்கும். மேலும், இந்த பேட்டரி பேக் ஏர் கூலிங் வசதியைக் கொண்டிருக்கின்றன.

எனவே தனியாக ஆயிலை ஊற்றி இதை கூல் செய்ய வேண்டிய அவசிய இருக்காது. மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்குவதற்காக இந்த எலெக்ட்ரிக் பைக்கில் ஆர்எஸ்யூ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், மோனோஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 300 மிமீ டிஸ்க்கும், பின் பக்கத்தில் 280 மிமீ டில்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், கூடுதல் சிறப்பு பிரேக்கிங் சிஸ்டமாக சிபிஎஸ் வழங்கப்ப்டடு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் எலெக்ட்ரிக் மோட்டார் மத்திய பகுதியிலேயே மவுண்ட் செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கிருந்தே அது பின் வீலை இயங்கச் செய்யும். இந்த எலெக்ட்ரிக் மோட்டார் அதிகபட்சமாக 4 பிஎச்பி முதல் 13.4 பிஎச்பி பவர் வரை வெளியேற்றும் திறன் கொண்டது.

இதனால் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். மேலும், ஓர் முழு சார்ஜில் 190 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். ஆனால், இதன் பேட்டரி பேக்கின் திறன் பற்றிய விபரங்களை ஸ்விட்ச் வெளியிடவில்லை. பைக்கின் ஒட்டுமொத்த எடையே 155 கிலோ ஆகும்.

அதேவேளையில், ஸ்விட்ச் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தின் வாயிலாக தெரிய வந்தது என்னவென்றால் இந்த பைக்கில் 3.6 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் டாப் ஸ்பீடு 110 கிமீ என்றும், ரேஞ்ஜ் திறன் 160 கிமீ என்றும் தளத்தில் கூறப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இதன் உண்மையான ரேஞ்ஜ் மற்றும் ஸ்பீடு என்ன என்பதில் அனைவருக்கும் குழப்பம் ஏற்பட்டு இருக்கின்றது. விரைவில் இது பற்றிய விளக்கத்தை ஸ்விட்ச் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த வாகனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. இந்த நிலையிலேயே ஸ்விட்ச் தனித்துவமான அம்சங்கள் கொண்ட இ-பைக்கை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 11, 2024, 21:57 [IST]
English summary
Svitch csr 762 e bike launched in india here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X