அடிக்கடி நெடுஞ்சாலையில் பயணிப்பவரா நீங்க? இதோ உங்களுக்கான உகந்த டாப்5 பைக்குகள்.. 3லட்ச ரூபாக்கும் கம்மி விலை!
இந்தியாவில் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மோட்டார்சைக்கிள்களைப் போலவே லாங் டிரைவ் மற்றும் நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு உகந்த மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த பைக்குகளில் பயணிக்கும்போது அசௌகரியமான அனுபவம் பெரிய அளவில் ஏற்படாது. அதேபோல், நீண்ட நேரம் வாகனத்தை ஓட்டினாலும் வாகனத்தை நிறுத்தலாம் என்கிற எண்ணமும் வராது.
அத்தகைய இரண்டு சக்கர வாகனங்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ரூ. 3 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் 5 பைக்குகளின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350): இந்த பைக் இந்தியாவில் ரூ. 2.05 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் 349 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 20.4 பிஎஸ் பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இது ஒரு லிட்டருக்கு 34.05 கிமீ முதல் 41.88 கிமீ வரையில் மைலேஜ் தரும். இது ஓர் ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் ஆகும். மிக சிறந்த மற்றும் ஸ்மூத்தான ரைடு அனுபவத்தை இது வழங்கும். மணிக் கணக்கில் பயணிப்பதற்கு உகந்த இருக்கையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பே வழங்கப்பட்டு இருக்கின்றது. டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ட்வின் ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக பள்ளம்-மேடு நிறைந்த சாலைகளில்கூட அசால்டாக பயணித்துக் கொள்ள முடியும். இந்த பைக்கில் 15 லிட்டர் வரை பெட்ரோலை நிரப்பிக் கொள்ள முடியும்.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த கிளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களில் இதுவும் ஒன்றாகும். தோற்றத்தில் கிளாசிக் ஸ்டைலைக் கொண்டிருந்தாலும், சிறப்பம்சங்கள் விஷயத்தில் நவீன காலத்திற்கு ஏற்றதாக ஹோண்டா ஹைனெஸ் சிபி350 காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 2.10 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 348.36 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21.07 பிஎஸ் பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் 35 கிமீ முதல் 45.8 கிமீ ஆகும். விண்ட் ஸ்கிரீன் மற்றும் மிக சிறந்த இருக்கை ஆகியவற்றையே இது தாங்கி இருக்கின்றது.
பஜாஜ் டோமினோர்400 (Bajaj Dominar400): இந்த பைக்கின் இந்தியாவில் ரூ.2.12லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. மேலும், இந்த பைக்கில் 373.3சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 40பிஎஸ் மற்றும் 35என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் 25கிமீ முதல் 30கிமீ ஆகும். அதிக வேகம், மிக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் மிருதுவான இருக்கை என அனைத்திலும் பெஸ்ட்டான பைக்காக இது காட்சியளிக்கின்றது.
ஜாவா பெராக் (Jawa Perak): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக் மாடலாக ஜாவா பெராக் காட்சியளிக்கின்றது. இதன் விலை ரூ. 2.13 லட்சம் ஆகும். இதில் 334 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும். இந்த பட்டியலில் உள்ள மற்ற பைக்குகளைப் போலவே இதுவும் மிக சிறந்த சஸ்பென்ஷன் மற்றும் இருக்கையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.
சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் (Suzuki V-Strom SX): இந்த பைக்கும் நெடுஞ்சாலை பயணங்களுக்கு மிக சிறந்த பைக்காகும். அதேவேளையில், அட்வென்சர் ரைடுகளுக்கும் உகந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கில் 249 சிசி எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 26.5 பிஎச்பி பவரையும், 22.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக்கில் லாங் டிரைவ் செல்லும் கலாச்சாரம் முன்பைக் காட்டிலும் இப்போது மிகப் பெரிய அளவில் வளர்ச்சியடைந்துக் காணப்படுகின்றது. இதற்கு அஜித் மாதிரியானோரே காரணம். இவர் போன்றோரை ஃபாலோ செய்தே இளைஞர்கள் பலர் பைக்கில் லாங் டிரைவ் செய்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








