ஓலா எப்பவும் நம்பர் 1 இடத்துல தான் இருக்கும் போல! 2,3 வது இடத்துல யாரு இருக்கா தெரியுமா?

மார்ச் மாதம் துவங்கிவிட்ட நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கடந்த பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. இதன்படி எலக்ட்ரிக் வாகன விற்பனையாளர்கள் எல்லாம் தங்கள் விவரங்களை வெளியிட்டுள்ள நிலையில் இந்த பட்டியலில் கடந்த பிப்ரவரி மாதம் டாப் 10 இடத்தில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனங்கள் குறித்து தான் காணப் போகிறோம்.

அந்த அடிப்படையில் பார்த்தால் பத்தாவது இடத்தில் ஒகாயா நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தமே 657 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 581 வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 13 சதவீத வாகனங்கள் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மார்க்கெட் பங்கில் 1 சதவீதத்தை கைப்பற்றியுள்ளது.

Top 10 Electric 2-Wheeler brands Feb 2024

பட்டியலில் 9வது இடத்தில் ஒக்கினாவா ஆட்டோடெக் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக 660 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 683 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது விற்பனை குறைவு ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பெரிய அளவு விற்பனை குறைவு ஏற்படவில்லை என்பதால் கவலைப்பட தேவையில்லை. இருந்தாலும் இந்நிறுவனம் பெரிய அளவில் வளர்ச்சி பெறவில்லை.

எட்டாவது இடத்தில் வார்ட்விஸார்டு மொபிலிட்டி நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தமாக 840 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 976 வாகனங்கள் விற்பனையாகி இருந்தன. அதை ஒப்பிடும்போது கடந்த பிப்ரவரி மாதம் 14 சதவீதம் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் புதுமையை புகுத்தினால் மட்டுமே அடுத்தடுத்து வளர்ச்சியை பெற முடியும் என கணிக்கப்படுகிறது.

Top 10 Electric 2-Wheeler brands Feb 2024

எட்டாவது இடத்தில் பிஜியுஆஸ் ஆட்டோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் மொத்தம் 1,349 எலக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் விற்பனையான 1487 என்ற விற்பனையுடன் ஒப்பிடும்போது 9 சதவீதம் விற்பனை வீழ்ச்சியாகும். இந்நிறுவனம் 2 சதவீதம் மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.

6வது இடத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 1750 எலெக்ட்ரிக் டூவீலர்களை கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் 1494 வாகனங்கள்தான் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 17 சதவீத வாகனங்கள் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 2 சதவீதம் மார்க்கெட் பங்கை வைத்திருந்தது.

Top 10 Electric 2-Wheeler brands Feb 2024

அடுத்ததாக கிரேவியஸ் எலெக்ட்ரிக் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்து பிப்ரவரி மாதம் 2606 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 2536 எலெக்ட்ரிக் வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது இந்நிறுவனம் 3 சதவீத மார்க்கெட் பங்கை வைத்துள்ளது. வளர்ச்சியிலும் மூன்று சதவீத வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது.

ஏத்தர் நிறுவனம் இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 8,983 வாகனங்களை கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்திருந்தது. இதுவே கடந்த ஜனவரி மாத விற்பனையை ஒப்பிடும்போது 4 சதவீதம் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 11 சதவீத மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.

Top 10 Electric 2-Wheeler brands Feb 2024

பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 11,618 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்தது. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை இந்நிறுவனம் 88,331 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்திடம் பஜாஜ் சேத்தக் என்ற ஒரே எலெக்ட்ரிக் வாகனம் தான் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் 2வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் மொத்தம் 14,499 எலெக்ட்ரிக் வாகனங்களை கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவனம் 18 சதவீதம் மார்க்கெட் பங்கை பிடித்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 11 மாதங்களில் மொத்தமாக 1,56,271 வாகனங்களை விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் முதல் இடத்தை வழக்கம்போல ஓலா நிறுவனம் தான் பிடித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 33,722 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த ஜனவரி மாதம் இந்நிறுவனம் 32,216 வாகனங்களை தான் விற்பனை செய்துள்ளது. தற்போது அதைவிட கூடுதலாக விற்பனை செய்து நான்கு சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. இந்நிறுவனம் மொத்தமாக 34 சதவீத மார்க்கெட் பங்கை வைத்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் எல்லாம் வரிசையாக தங்கள் வாகன விற்பனை நிலவரங்களை வெளியிட்டுள்ள நிலையில் வழக்கம்போல இந்த முறையும் ஓலா நிறுவனம் தான் முதலிடத்தில் பிடித்துள்ளது. ஓலா நிறுவனம் மிகப்பெரிய அளவில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று மிகப் பெரிய நிறுவனமாக மாறியுள்ளது. இன்று பெரும்பான்மையான பங்கு அந்நிறுவனத்திடம் மட்டுமே இருக்கிறது

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2024, 18:44 [IST]
English summary
Top 10 electric 2wheeler brands feb 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X