ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!

மற்ற வெளிநாடுகளை போன்று, இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மார்க்கெட் நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்களை இனி பார்க்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, அதாவது எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனையில் இல்லாத சமயத்தில், எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ் போன்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்கள் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், சந்தையின் இன்றைய நிலைமையோ வேறு விதமாக உள்ளது.

top-10 electric 2-wheeler brands

ஏனெனில், அவுட்-ஆஃப் சிலபஸ்ஸாக இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக மார்க்கெட்டில் அறிமுகமாகிய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இன்று இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக விளங்குகிறது. இதில் ஆச்சிரியம் என்னவென்றால், சந்தையில் இத்தகைய உயரத்தை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. ஏனெனில், 2021ஆம் ஆண்டில்தான் முதல் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பல்வேறு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தமாக 53,320 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஒரு மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்வது இதுவே முதல்முறை ஆகும்.

top-10 electric 2-wheeler brands

இதற்கு முந்தைய 2024 பிப்ரவரி மாதத்தில் 33,846 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. 2023 மார்ச் மாதத்தில் இன்னும் குறைவாக வெறும் 21,435 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே ஓலா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் சுமார் 31,885 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 39,531 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் 53,320 வாகனங்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துடையது ஆகும். அதாவது, இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலரை வாங்கும் 3இல் ஒருவர் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தேர்வு செய்கின்றனர். ஓலாவுக்கு அடுத்து மக்கள் அதிகம் விரும்பும் எலக்ட்ரிக் 2-வீலர் பிராண்டாக டிவிஎஸ் மோட்டார் உள்ளது.

top-10 electric 2-wheeler brands

கடந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 26,501 எலக்ட்ரிக் 2-வீலர்கள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் 16,893 எலக்ட்ரிக் 2-வீலர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. ஏனெனில், அந்த சமயத்தில் ஐக்யூப் என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துக் கொண்டிருந்தது. ஆனால், தற்போது எக்ஸ் என்கிற பெயரில் மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலும் டிவிஎஸ் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.

3வது இடத்தில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 18,008 எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை உடன் உள்ளது. சேத்தக் என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்யும் பஜாஜ் நிறுவனம் 2023 மார்ச்சில் வெறும் 4,553 சேத்தக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை ஏத்தர் எனர்ஜி சொந்தமாக்கி உள்ளது. ஏத்தர் நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 17,232 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் (4,062) உள்ளது.

top-10 electric 2-wheeler brands

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் 20க்கும் அதிகமான நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன. ஆனால், அவற்றுள் மார்க்கெட்டில் உடனடியாக வெற்றி பெற்றவை என்று பார்த்தால் இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ள முதல் 4 நிறுவனங்கள் மட்டுமே ஆகும். இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் இப்போதுதான் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் ஈடுப்பட ஆரம்பித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, April 14, 2024, 8:00 [IST]
English summary
Top 10 electric two wheeler brands in india 2024 march sales report
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X