ஓலா, ஓலானு எல்லாரும் தேடி தேடிப் போய் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - டிவிஎஸ், பஜாஜ் எல்லாம் கிட்ட கூட வரல!!

டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்கவே நிறைய பேர் விரும்புகின்றனர். இதன் காரணமாகவே சமீப காலத்தில் நிறைய எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் புதியது, புதியதாக நுழைந்துள்ளன. இந்த வகையில், இந்தியாவில் கடந்த 2024 மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-10 எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் போதுமான அளவிற்கு இல்லை என்பதை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதன் காரணமாகவே எலக்ட்ரிக் கார்களை வாங்குவதற்கு இப்போதும் நிறைய பேர் தயக்கம் காட்டுகின்றனர். இருப்பினும், எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்குவோரின் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

top-10 electric two-wheeler companies

குறிப்பாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மார்க்கெட்டில் நுழைந்த பிறகு எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களின் விற்பனை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. அதாவது, அந்த அளவிற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் விற்பனை குறுகிய காலத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2024 மே மாதத்தில் மட்டும் 37,225 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த மே மாதத்தில் இந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் 2-வீலர்களை வேறெந்த நிறுவனமும் விற்பனை செய்யவில்லை. இதன் மூலமாக, தற்போதைக்கு இந்தியாவின் நம்பர் ஒன் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஓலா எலக்ட்ரிக் கடந்த 2023ஆம் ஆண்டில் இதே மே மாதத்தில் 28,742 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

top-10 electric two-wheeler companies

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் ஓலா நிறுவனம் ஏறக்குறைய 8,500 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எஸ்1 எக்ஸ், எஸ்1 ஏர், எஸ்1 புரோ என மொத்தம் 3 விதமான எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை கடந்த மே மாதத்தில் விற்பனை செய்த நிறுவனமாக 2வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் உள்ளது. ஓலா நிறுவனத்தை போன்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துவரும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் மொத்தம் 11,788 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்து இருப்பினும், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கும், டிவிஎஸ் மோட்டாருக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளதை காணலாம்.

top-10 electric two-wheeler companies

இந்த வரிசையில் 3வது இடத்தில், பஜாஜ் ஆட்டோ உள்ளது. சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனை செய்துவரும் பஜாஜ் நிறுவனம் கடந்த மாதத்தில் மொத்தம் 9,214 சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. 4வது இடத்தை ஏத்தர் எனர்ஜி சொந்தமாக்கி உள்ளது. மஹாராஷ்டிராவில் 3வது தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுவரும் ஏத்தர் எனர்ஜி கடந்த மாதத்தில் மொத்தம் 6,045 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.

5வது இடத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டான ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. எலக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட்டில் சமீபத்தில் நுழைந்த ஹீரோ மோட்டோகார்பில் இருந்து கடந்த மாதத்தில் மொத்தம் 2,456 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 5 இடங்களில் முறையே க்ரீவ்ஸ் இவி (1,956), வார்ட்விசார்ட் (1,261), பிகாஸ் (1,158), ரிவோல்ட் (687) மற்றும் குவாண்டம் இவி (523) நிறுவனங்கள் உள்ளன.

Rank 2W Electric Scooter May'24 May'23 Growth (%) YoY
1 Ola 37,225 28,742 29.51
2 TVS 11,788 20,434 -42.31
3 Bajaj 9,214 10,097 -8.75
4 Ather 6,045 15,430 -60.82
5 Hero MotoCorp 2,456 751 227.03
6 Greaves EV 1,956 1,155 69.35
7 WardWizard 1,261 364 246.43
8 BGauss 1,158 1,814 -36.13
9 Revolt 687 572 20.10
10 Quanutum EV 523 59 786.44

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2021ஆம் ஆண்டில் இந்திய ஆட்டோமொபைல் மார்க்கெட்டில் நுழைந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. எலக்ட்ரிக் என்றில்லாமல், ஒட்டுமொத்த 2-வீலர்கள் விற்பனையில் ஓலா எலக்ட்ரிக் 4வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓலா எலக்ட்ரிக்கின் இந்த விரைவான வளர்ச்சி இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களுக்கான மார்க்கெட் விரிவடைந்து வருவதை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, June 22, 2024, 22:39 [IST]
English summary
Top 10 electric two wheeler companies of india may 2024 check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X