ஹோண்டா ஆக்டிவாவில் அப்படி என்ன இருக்குனு தெரியலயே!! மாதத்திற்கு லட்சக் கணக்கில் மக்கள் வாங்குறாங்க!

இந்தியாவில் கார்களை காட்டிலும் 2-வீலர்களே அதிகம் விற்பனையாகும் என்பது நமக்கு தெரிந்த விஷயமே. 2-வீலர்களில் ஸ்கூட்டரை வாங்க நம்மில் நிறைய பேர் விரும்புகிறோம். அந்த வகையில் கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வழக்கம்போல், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 60,300 ஆகும். அதுவே, 2023 ஏப்ரலில் வெறும் 2 லட்சத்து 46,016 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

top-10 scooters of april 2024

ஹோண்டா ஆக்டிவாவை இந்தியாவிற்கான பிரதான ஸ்கூட்டர் என சொல்லலாம். ஏனெனில், இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ள ஸ்கூட்டருக்கும் ஹோண்டா ஆக்டிவாவிற்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. இந்த வரிசையில் 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 77,086 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 59,583 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 29.38% அதிகரித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் சுஸுகி மோட்டார்சைக்கிளின் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் உள்ளது. கடந்த மாதத்தில் 61,960 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-10 scooters of april 2024

2023 ஏப்ரலில் 52,231 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இதன்படி பார்க்கும்போது, 2023 ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ஆக்ஸஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 18.63% அதிகரித்துள்ளது. இந்த வரிசையில் 4வது மற்றும் 5வது இடங்களில் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டரும் உள்ளன.

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்கும் ஓலா எஸ்1 கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 33,963 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் 22,068 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதாவது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டில் ஓலா எஸ்1 ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை ஆனது 53.90% அதிகரித்துள்ளது.

top-10 scooters of april 2024

இவ்வாறு, ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் 5வது இடத்தில் உள்ள டிவிஎஸ் எண்டார்க் கடந்த ஏப்ரல் மாதத்தில் 30,411 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 ஏப்ரலில் 26,730 எண்டார்க் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் விற்பனை செய்திருந்தது. எண்டார்க் ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள ஹோண்டா டியோ இந்த வரிசையில் 6வது இடத்தை தனதாக்கி உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டியோ ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 23,182 ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஒரு டியோ ஸ்கூட்டர் கூட விற்பனை செய்யப்படவில்லை. 7வது மற்றும் 8வது இடங்களில் முறையே சுஸுகி பர்க்மேன் மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றின் கடந்த ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 17,680 மற்றும் 16,713 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களில் முறையே யமஹா ரே இசட்.ஆர் (14,055) மற்றும் ஹீரோ டெஸ்டினி (12,596) உள்ளன.

top-10 scooters of april 2024

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஹோண்டா ஆக்டிவாவை முந்த இனி ஒரு ஸ்கூட்டர் உருவாகி தான் வர வேண்டும். ஏனெனில் அந்த அளவிற்கு ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது உச்சத்தில் உள்ளது. இந்த டாப்-10 ஸ்கூட்டர்களில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், ஓலா எஸ்1 மற்றும் டிவிஎஸ் ஐக்யூப் என இந்த லிஸ்ட்டில் 2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 22, 2024, 23:59 [IST]
English summary
Top 10 scooters of april 2024 honda activa usual at first place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X