ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்க எப்போதும் ஒரு கூட்டம் இருக்கு - ஓவர்டேக் செய்ய ஓலாவால் மட்டும்தான் முடியும்!!
இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் பெரிய அளவில் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஹோண்டா முதலிடத்தில் உள்ளது. அதேநேரம், டிவிஎஸ், சுஸுகி போன்ற நிறுவனங்களும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்கின்றன. கடந்த 2024 மே மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதத்தில் எந்தெந்த ஸ்கூட்டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டர் என்றால், அது ஹோண்டா ஆக்டிவா ஆகும். ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மற்ற எந்த ஸ்கூட்டர்களும் தொட முடியாத உயரத்தில் உள்ளது. நடந்து முடிந்த கடந்த மே மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 16,352 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் 2 லட்சத்து 3,365 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் இந்த ஆண்டு மே மாதத்தில் 12,987 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆக்டிவாவிற்கு அடுத்து, இந்த வரிசையில் 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 75,838 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 மே மாதத்தில் 57,698 ஜூபிட்டர் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
அதாவது, ஆக்டிவாவை போல் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனையும் 18,140 யூனிட்கள் இந்த ஆண்டு மே மாதத்தில் அதிகரித்துள்ளது. இதேபோல், இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரும் 2023 மே மாதத்தை காட்டிலும் 2024 மே மாதத்தில் 18,867 ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மே மாதத்தில் 45,945 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், 2024 மே மாதத்தில் 64,812 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில், 4வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஓலா எஸ்1 என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓலா எஸ்1 ஆகும். கடந்த மே மாதத்தில் மொத்தம் 37,225 ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 மே மாதத்தில் 28,742 எஸ்1 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இதற்கடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் இந்தியாவின் ஸ்டைலிஷான ஸ்கூட்டர்களாக பார்க்கப்படும் டிவிஎஸ் எண்டார்க் மற்றும் ஹோண்டா டியோ உள்ளன. இவற்றின் கடந்த 2024 மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 29,253 மற்றும் 29,041 ஆகும். 2023 மே மாதத்தில் 27,556 எண்டார்க் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்த நிலையில், அந்த மாதத்தில் ஒரு டியோ ஸ்கூட்டர் கூட விற்பனை செய்யப்படவில்லை.

இந்த லிஸ்ட்டில் 7வது இடத்தில் சுஸுகி பர்க்மேன் 19,523 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 மே மாதத்தில் 10,234 பர்க்மேன் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 8வது இடத்தை இந்தியாவின் மற்றொரு பிரபலமான எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப் பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 17,230 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2023 மே மாதத்திலும் இதே எண்ணிக்கையிலான ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இன்னும் சொல்லப்போனால், 2023 மே மாதத்தை விட 2024 மே மாதத்தில் 683 ஐக்யூப் இ-ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 2 இடங்களில் யமஹா ரே இசட்.ஆர் மற்றும் பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 13,794 மற்றும் 13,042 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் இரு இடங்களில் உள்ள ஹோண்டா ஆக்டிவாவிற்கும், டிவிஎஸ் ஜூபிட்டருக்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. இந்த பெரிய இடைவெளி ஒவ்வொரு மாதமும் தொடர்ந்துக் கொண்டே போகிறது. அதேநேரம், இந்தியாவில் அதிக பேர் வாங்கப்படும் டாப்-5 ஸ்கூட்டர்களுள் ஒன்றாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நுழைந்துவிட்டது.


Click it and Unblock the Notifications









