பல வருஷத்து பகைக்கு பழி தீர்க்கப்போகும் ஹோண்டா! ஹீரோவை சிக்கிரமே பின்னாடி தள்ளிடுவாங்க போல!

கடந்த ஜனவரி மாதம் டூவீலர் மார்க்கெட்டில் விற்பனை மிக சிறப்பாக இருந்துள்ளது. கடந்தாண்டு விற்பனையை விட இந்த ஆண்டு விற்பனை அதிகரித்துள்ளது. அதே நேரம் கடந்த டிசம்பர் மாத விற்பனையை விடவும் இந்த மாதம் விற்பனை அதிகமாகியுள்ளது. அதிகம் விற்பனையான டாப் 4 மாடல் வாகனங்கள் ஒரு லட்சம் வாகனங்களை தாண்டி விற்பனையாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

கடந்த ஜனவரி மாதம் மொத்தம் இந்தியாவில் 10,29,775 டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 8,29,641 வாகனங்கள் விற்பனையாகியிருந்தன. இது இந்த ஆண்டு 24.12 சதவீத விற்பனை வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 2,00,134 வாகனங்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளன.

Top 10 Two Wheelers jan 2024

இந்த பட்டியலில் நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 2,55,122 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2,61,833 பைக்கில் விற்பனையாகி இருந்தது தற்போது 2.56 சதவீதம் விற்பனை வீழ்ச்சியை இந்த பைக் சந்தித்துள்ளது.

இரண்டாவது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கிறது மொத்தம் 1,73,760 ஸ்கூட்டர்கள் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1,33,001 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகிறது. தற்போது 33.6 சதவீத விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

Top 10 Two Wheelers jan 2024

பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹோண்டா ஷைன் இருக்கிறது. 1,45,252 ஸ்கூட்டர்கள் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகி உள்ளன. இதில் கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 99,878 பைக்குகள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 45.43 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

நான்காவது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 1,28,883 பைக் விற்பனையாகிய இருந்தன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 84,276 பைக்கில் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது 52.92% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த இடத்தில் ஹீரோ எச்எப் டீலக்ஸ் பைக் தான் இருக்கிறது

Top 10 Two Wheelers jan 2024

ஹீரோ எச்எப் டீலக்ஸ் பைக்கை பொறுத்தவரை கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 78,767 பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தம் 47,840 பைக்கில் தான் விற்பனையாக இருந்தது. ஒரே ஆண்டில் 64.65 சதவீதம் அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இப்படியாக பெரும்பாலான பைக்குகள் மிக அதிக அளவுக்கு விற்பனை வளர்ச்சியை சந்தித்துள்ளது.

ஆறாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இருக்கிறது. இது கடந்த ஜனவரி மாதம் 74,2025 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாத விற்பனை ஒப்பிடும்போது 36.23% விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. அடுத்த இடத்தில் சுஸூகி அக்செஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. இது கடந்த ஜனவரி மாதம் 55,386 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விற்பனை ஒப்பிடும்போது 21.74% விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

Top 10 Two Wheelers jan 2024

எட்டாவது இடத்தில் டிவிஎஸ் ரைடர் பைக் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 431 பைக்கில் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27,233 பைக்குகள் தான் விற்பனையாக இருந்தது தற்போது 59.11 சதவீத விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் இருக்கிறது 42,036 என்ற எண்ணிக்கையில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையாகியுள்ளது. இது 14.47 சதவீத விற்பனை வளர்ச்சியில் விற்பனையாகி உள்ளது.

பட்டியலில் கடைசி இடத்தில் பஜாஜ் பிளாட்டினா பைக் தான் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 33,013 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 41,873 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி இருந்தது. தற்போது 21.16சதவீதம் விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது இந்த பட்டியலில் முதலில் உள்ள ஸ்பிளெண்டர் மற்றும் கடைசி இடத்தில் உள்ள பஜாஜ் பிளாட்டினா ஆகிய இரண்டு பைகள் மட்டுமே விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 டூவீலர்களின் பட்டியல் இதுதான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டூவீலர் விற்பனை என்பது கணிசமான அளவு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒரே ஆண்டில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியை இந்த டூவீலர் செக்மென்ட் சந்தித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 18:06 [IST]
English summary
Top 10 two wheelers jan 2024 splendor activa pulsar raider
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X