30 நாளில் 3 லட்சம் பேர் இந்த பைக்கை வாங்கிட்டாங்க! லாஸ்ட் இடத்துல என்ன வண்டி இருக்குது தெரியுமா?
இந்தியாவில் டூவீலர்கள் தான் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. கார்களை பயன்படுத்துபவர்களை விட டூவீலர்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் இலட்சக்கணக்கான டூவீலர்கள் விற்பனையாகி வருகின்றன. அதன்படி இந்தியாவில் அதிகமாக விற்பனையாள டூவீலர்கள் குறித்த டாப் 10 பட்டியல் விபரங்கள் வெளியாகி உள்ளன. எந்த டூவீலர்கள் எவ்வளவு விற்பனையாகியுள்ளது? அது எவ்வளவு அளவு விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் மிக அதிகமாக விற்பனையாகம் டூவீலராக ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக்தான் இருக்கிறது. கடந்தத ஜூன் மாதம் மட்டும் 3,05,586 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 2,38,340 பைக்கில் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 67,246 பைக்குகள் விற்பனையாகி 28.21% அளவுக்கு விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பட்டியலில் 2வது இடத்தில் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் 2,33,376 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 1, 30,830 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 1,02,546 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி 78.38% அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் 1,39,587 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 99,254 பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 40,333 பைக்குகள் விற்பனையாகி 40.63% அளவிற்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

பட்டியலில் நான்காவது இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 1,11,101 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 1,07,208 பைக்குகள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 3893 பைக் விற்பனையாகி விற்பனை 3.63 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஹீரோ எச் எஃப் டீலக்ஸ் பைக் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 89,941 பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதமும் 89,275 பைக்குள் விற்பனையாகிறது. தற்போது கூடுதலாக 666 பைக்குகள் விற்பனையாகி 0.75% அளவிற்கு இந்த பைக்கின் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

பட்டியலில் ஆறாவது இடத்தில் டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 72,100 ஸ்கூட்டர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 64,252 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 7848 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி 12.21% அளவிற்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் ஏழாவது இடத்தில் சுஸூகி அக்செஸ் ஸ்கூட்டர் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 52,192 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 39,503 ஸ்கூட்டர்கள் தான் விற்பனையாகிறது. தற்போது கூடுதலாக 12,689 ஸ்கூட்டர் விற்பனையாகி 32.12 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
| Rank | Top 2Wheelers | June'24 | June'23 | Growth (%) YoY |
| 1 | Hero Splendor | 3,05,586 | 2,38,586 | 28.21 |
| 2 | Honda Activa | 2,33,376 | 1,30,830 | 78.38 |
| 3 | Honda Shine | 1,39,587 | 99,254 | 40.64 |
| 4 | Bajaj Pulsar | 1,11,101 | 1,07,208 | 3.63 |
| 5 | Hero HF Deluxe | 89,941 | 89,275 | 0.75 |
| 6 | TVS Jupiter | 72,100 | 64,252 | 12.21 |
| 7 | Suzuki Access | 52,192 | 39,503 | 32.12 |
| 8 | TVS XL 100 | 40,397 | 34,499 | 17.10 |
| 9 | TVS Apache | 37,162 | 28,127 | 32.12 |
| 10 | Ola S1 | 36,723 | 17,692 | 107.57 |
பட்டியலில் எட்டாவது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபட் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 40,397 வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 34,499 வாகனங்கள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 5898 வாகனங்கள் விற்பனையாகி 17.10 சதவீதம் அளவுக்கு விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் டிவிஎஸ் அப்பாச்சி பைக் இருக்கிறது. கடந்த ஜூன் மாதம் மொத்தம் 37,162 பைக் விற்பனை ஆகியுள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 28,127 பைக்குகள் தான் விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 9,035 பைக்கில் விற்பனையாகியுள்ளது. இது 32.12% விற்பனை வளர்ச்சி ஆகும்.
பட்டியலில் கடைசி இடத்தில் ஓலா எஸ் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த பட்டியலில் இருக்கும் ஒரே எலக்ட்ரிக் வாகனம் என்றால் அது இதுதான் கடந்த ஜூன் மாதம் மட்டும் 36,723 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 17,692 வாகனங்கள் தான் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 19,031 வாகனங்கள் விற்பனையாகி 107.57 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் விற்பனை சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருவது டாப் 10 பட்டியலில் ஒரு எலெக்ட்ரிக் வாகனம் உள்ளே சேர்ந்திருப்பது மூலம் தெளிவாக தெரிகிறது. ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் தான் அசைக்க முடியாத இடத்தில் முதல் இடத்தில் இருக்கிறது. இது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications









