ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!

இந்தியா, உலகின் மிக பெரிய 2-வீலர் மார்க்கெட். வேறெந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கிலான இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 2-வீலர்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. ஹீரோவில் இருந்து பல்வேறு விதமான பைக்குகளும், ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவற்றுள் முக்கியமானது ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும். இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு ஸ்பிளெண்டர் பைக்குகள் ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் விற்பனையாகுகின்றன.

top-10 two wheelers 2023-24 fy

2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரையில் சுமார் 32 லட்சத்து 93,324 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 2022 ஏப்ரல் - 2023 மார்ச் வரையிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், 2022-23 நிதியாண்டை காட்டிலும் கடந்த 2023-24 நிதியாண்டில் 37,580 ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஏனெனில், அந்த வருடத்தில் 32 லட்சத்து 55,744 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்ததது. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக 2வது இடத்தில் ஹோண்டா ஆக்டிவா உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஆக்டிவா கடந்த ஆண்டில் மொத்தம் 22 லட்சத்து 54,537 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

top-10 two wheelers 2023-24 fy

ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனையும் 2022-23ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஏனென்றால், 2022-23ஆம் நிதியாண்டில் 21 லட்சத்து 49,658 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 3வது இடத்திலும் ஹோண்டா 2-வீலரான ஹோண்டா ஷைன் உள்ளது. கடந்த 1 வருடத்தில் 14 லட்சத்து 82,957 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் 12 லட்சம் ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் 2 லட்சத்து 73,932 ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4வது இடத்தை பஜாஜ் பல்சர் பிடித்துள்ளது. 125சிசி-இல் இருந்து 250சிசி வரையில் பல்வேறு விதமான சிசி என்ஜின்களில் பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

top-10 two wheelers 2023-24 fy

கடந்த 1 வருடத்தில் ஒட்டுமொத்தமாக 14 லட்சத்து 10,974 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் வெறும் 10 லட்சத்து 29,057 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த ஆண்டில் சுமார் 3 லட்சத்து 81,917 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. பல்சர் பைக்குகளுக்கு அடுத்து கடந்த ஆண்டில், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு ஏப்ரலில் இருந்து இந்த ஆண்டு மார்ச் வரையில் 10 லட்சத்து 34,178 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய ஆண்டில் இதனை காட்டிலும் 17,865 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த ஹீரோ பைக்கிற்கு அடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் டிவிஎஸ் ஜூபிட்டர் மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவை கடந்த ஆண்டில் முறையே 8,44,863 மற்றும் 6,34,563 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-10 two wheelers 2023-24 fy

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் பைக் என ஹீரோ ஸ்பிளெண்டரை என கூறுகிறோம் என்பதை இந்த தொகுப்பை பார்த்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஒரு வருடத்தில் சுமார் 33 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகள் என்பது உண்மையில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். அதாவது ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2.5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2024, 23:07 [IST]
English summary
Top 10 two wheelers which sold most in 2023 24 financial year
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X