புதுசா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க போறீங்களா!.. 1 லட்ச ரூபாக்கும் கம்மி விலையில் 100 கிமீ ரேஞ்ஜ் தரும்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் (Electric Vehicle)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, மின்சார இரண்டு சக்கர வாகனம் (Electric Two Wheeler)-களுக்கு நாட்டில் அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டு உள்ளது. இந்தியாவின் இத்தகையை தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் களமிறங்கி மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஒரு சில நிறுவனங்கள் இந்தியாவின் பலதரப்பட்ட மக்களைக் கவர வேண்டும் என்கிற நோக்கில் சற்று குறைவான விலையில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், நாட்டில் ரூ. 1 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, ஓர் முழு சார்ஜில் 100 கிமீ வரையில் மைலேஜ் தரும் டாப் ஐந்து இ-ஸ்கூட்டர் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அவை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

Top 5 affordable electric scooters

ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X): ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவே ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் சமீபத்திலேயே தொடங்கப்பட்டன. எஸ்1 எக்ஸ் இந்தியாவில் ரூ. 69,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 3 விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். 2 kWh, 3 kWh மற்றும் 4 kWh ஆகியவையே அந்த பேட்டரி பேக்குகள் ஆகும்.

இதில், 2 kWh பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 95கிமீ ரேஞ்ஜையும், 3 kWh பேட்டரி பக் தேர்வு 143கிமீ முதல் 151 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளன. அதேவேளையில், 4 kWh பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 190 கிலோ மீட்டர் வரை ரேஞ்ஜ் தரும். ஓலாவின் இந்த தயாரிப்பு விலை குறைவானதாக இருந்தாலும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக காட்சியளிக்கின்றது.

அந்தவகையில், எஸ்1 எக்ஸ் மாடலில் 5 அங்குல திரை அல்லது 4.3 அங்குல திரையும் வழங்கப்படுகின்றது (தேர்வைப் பொருத்து மாறுபடும்). இதுதவிர சாவியில்லாமல் இயக்கும் வசதி, ஸ்மார்ட் இணைப்பு, 34 லிட்டர் பூட் ஸ்பேஸ், க்ரூஸ் கன்ட்ரோல், அட்வான்ஸ் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 6 kW மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ப்யூர் இவி இ-ப்ளூட்டோ 7ஜி (Pure EV ePluto 7G): இது ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இது ஆகும். நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் அதிக வசதிகள் கொண்டதாக இ-ப்ளூட்டோ 7ஜி காட்சியளிக்கின்றது. இதில், 2.4 kW MCU தொழில்நுட்பம் கொண்ட 1.5 kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இவற்றுடன், அதிக சக்தி வாய்ந்த 2.5 KWh பேட்டரி பேக்கே இ-ப்ளூட்டோ 7ஜி எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 111 கிமீ முதல் 151 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 72 கிமீ ஆகும்.

இதன் விலை ரூ. 92,999 ஆகும். இதே ஸ்கூட்டர் மாடலில் 7ஜி சிஎக்ஸ் எனும் ஆப்ஷனும் வழங்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 85 கிமீ முதல் 101 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதன் விலை ரூ. 77,999 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பஜாஜ் சேத்தக் 2901 (Bajaj Chetak 2901): பஜாஜ் நிறுவனம் சமீபத்திலேயே இந்த வேரியண்டை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 95 ஆயிரத்து 998 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இதில் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என அராய் சான்றளித்து இருக்கின்றது. இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 2.8 kWh பேட்டரி பேக்கே சேத்தர் 2901 இல் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 63 கிமீ ஆகும்.

எல்இடி மின் விளக்குகள், ஈகோ மோட் மற்றும் டிஜிட்டல் திரை உள்ளிட்டவை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக ரூ. 3 ஆயிரம் செலுத்தினால் டெக் பேக் (Tec Pac) வசதி வழங்கப்படும். இதன் வாயிலாக ஸ்போர்ட்ஸ் மோட், ஹில் ஹோல்ட், ரிவர்ஸ் மோட், கால் மற்றும் மியூசிக்கைக் கண்ட்ரோல் செய்யும் வசதி மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் (Ampere Magnus EX): இந்தியாவில் குறைவான விலையில் அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இது ஓர் முழு சார்ஜில் 100க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரும். இதற்காக 2.2 kWh பேட்டரி பேக்கே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 53 கிமீ ஆகும். அதேவேளையில், இதனால், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிலோ மீீட்டர் வேகத்தை வெறும் 10 செகண்டுகளிலேயே எட்ட முடியும். இத்தகைய திறன் கொண்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 94,900 என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

கோமகி எஸ்இ ஈகோ (Komaki SE Eco): இந்த பட்டியலில் நாம் பார்க்கும் கடைசி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவே ஆகும். எஸ்இ பன்முக தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், ஈகோ-வே விலை குறைவான வேரியண்டாக உள்ளது. இது ரூ. 97,256-க்கு இந்தியாவில் விற்கப்படுகின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணித்துக் கொள்ள முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 55 கிமீ ஆகும். 20 லிட்டர் அளவுள்ள பொருட்களை இதன் இருக்கைக்கு அடியில் உள்ள ஸ்டோரேஜில் வைத்துக் கொள்ள முடியும். இத்துடன், கீ ஃபாப், டூயல் டிஸ்க் பிரேக், டிஎஃப்டி திரை, எல்இடி லைட்டுகள், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும், அதேவேளையில், 100 கிமீ வரையில் ரேஞ்ஜை தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மாடல் இவையே ஆகும். புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும் திட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் நோக்கிலேயே இந்த பதிவு வழங்கப்பட்டு இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 12, 2024, 5:00 [IST]
English summary
Top 5 affordable electric scooters list in india 100 km range
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+