ரூ. 70,000க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்படும் பைக் மாடல்கள்.. பெட்ரோல் போட்டதையே மறந்திருவீங்க!

இந்தியாவில் டூ-வீலர்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். குறிப்பாக, தினசரி பயன்பாட்டு வசதிக் கொண்ட இரண்டு சக்கர வாகனம் (Commuter Bike)களுக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டு மக்கள் மத்தியில் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமான முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக இந்தியர்களைக் கவரும் பொருட்டு விலை குறைவான மற்றும் அதிகம் மைலேஜை வழங்கக் கூடிய இரண்டு சக்கர வாகனங்களை டூ-வீலர் உற்பத்தியாளர்கள் அதிக அளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பதிவில் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான டாப் ஐந்து ஆரம்ப நிலை இரண்டு சக்கர வாகனங்களின் லிஸ்ட்டையே பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, எக்ஸ்-ஷோரூமில் ரூ. 70 ஆயிரத்திற்கும் கம்மியான விலையில் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய ஆரம்ப நிலை கம்யூட்டர் வகை பைக் மாடல்களையே பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Top 5 commuter bikes list

ஹீரோ எச்எஃப் 100 (Hero HF 100): இந்தியாவின் மிக மிக விலை குறைவான பைக் மாடல் இதுவாகும். தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இந்த பைக் மாடல் ரூ. 56,818 என்கிற விலையில் விற்கப்படுகின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

எச்எஃப் 100 டிரம் கிக் ஸ்டார்ட் எனும் ஒற்றை வேரியண்டில் மட்டுமே இந்த பைக் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த பைக்கில் 97.2 சிசி ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டார் ஆகும்.

8 பிஎச்பி மற்றும் 8 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக் அதிகம் மைலேஜ் தரக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது. லிட்டர் ஒன்றிற்கே இது 65 கிமீ வரையில் மைலேஜ் தரும்.

டிவிஎஸ் ஸ்போர்ட் இஎஸ் (TVS Sport ES): இந்தியாவின் மிக மிக விலை குறைவான கம்யூட்டர் பைக் மாடல்களின் லிஸ்ட்டில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பைக் மாடல் சென்னையில் ரூ. 66,920 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் வசதிக் கொண்ட இஎஸ் வேரியண்டின் விலை ஆகும். இதைத்தொடர்ந்து, இஎல்எஸ் செல்ஃப் ஸ்டார்ட் மற்றும் அலாய் வீல் அம்சம் கொண்ட வேரியண்டிற்கும் ரூ. 71,963 என்கிற குறைவான விலையே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த பைக்கில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 8.19 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 83.9 கிமீ என கூறப்படுகின்றது.

ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe): நம்முடைய இந்த லிஸ்ட்டில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கும் பைக் மாடலே எச்எஃப் டீலக்ஸ் ஆகும். இந்த பைக் மாடலின் ஆரம்ப விலை ரூ. 62,468 ஆகும். தினசரி பயன்பாட்டிற்கு உகந்த இந்த டூ-வீலர் நாட்டில் நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதன் ஆரம்ப நிலை தேர்வான டிரம் பிரேக் கிக் ஸ்டார்ட் வேரியண்டின் விலையையே முன்னதாக பார்த்தோம். இதுதவிர, டிரம் பிரேக் - செல்ஃப் ஸ்டார்ட், பிளாக் மற்றும் அக்செண்ட், டிரம் பிரேக் - செல்ஃப் ஸ்டார்ட் ஆகிய வேரியண்டுகளிலும் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 70,318 மட்டுமே என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த பைக்கில் ஹீரோ நிறுவனம் 97.2 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சினையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8 பிஎச்பி மற்றும் 8 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கே 65 கிமீட்டருக்கும் அதிகம் என நிறுவனம் தெரிவிக்கின்றது.

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100): ஹோண்டாவின் இந்த தயாரிப்பு இந்தியாவில் ரூ. 66,600 என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதுவும் ஓர் 100 சிசி பைக் மாடலே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.38 பிஎஸ் மற்றும் 8.05 என்எம் டார்க்கை உருவாக்கும். இதன் மைலேஜ் திறன் 67.5 கிமீ ஆகும்.

டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon): இந்தியாவின் மலிவு விலை தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக் மாடல்களின் பட்டியலில் கடைசி மற்றும் ஐந்தாவது இடத்தையும் டிவிஎஸ்-இன் தயாரிப்பே பிடித்திருக்கின்றது. இந்த பைக் மாடல் சென்னையில் ரூ. 69,598 என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இது ஆரம்ப நிலை தேர்வான பேஸ் எடிசனின் விலை ஆகும். இதுதவிர, இன்னொரு பேஸ் எடிசன், டிஜி டிரம் மற்றும் டிஜி டிஸ்க் ஆகிய தேர்வுகளிலும் இந்த பைக் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை ரூ. 74,848, ரூ. 79,620 மற்றும் ரூ. 83,620 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றது.

அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இது ஓர் 110 சிசி பைக் மாடல் ஆகும். இந்த பைக்கில் 109.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 8.19 பிஎச்பி மற்றும் 8.7 என்எம் டார்க்கை வெளியேற்றும். இதன் அதிகபட்ச மைலேஜ் திறன் லிட்டர் ஒன்றிற்கு 73.68 கிமீ என கூறப்படுகின்றது. இந்த பைக்கில் சிறப்பம்சங்களாக செல்ஃப் ஸ்டார்ட், டேங்க் கிரிப், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தினசரி பயன்பாட்டு வாகனங்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். இந்த தேவையை தீர்ப்பதில் மேலே பார்த்த டூ-வீலர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. அதிகம் மைலேஜ் தரக் கூடியவை என்பதால் பலர் இந்த வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 5, 2024, 15:00 [IST]
English summary
Top 5 commuter bikes in india priced under rs 70000 offering excellent mileage
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+