சாக்லெட் போல் இலட்சக்கணக்கில் விற்பனையாகும் ஸ்பிளெண்டர் பைக்குகள்!! இந்திய மக்களின் பலரது முதல் சாய்ஸ்!

இந்தியாவில் மோட்டார்சைக்கிள்களுக்கு எப்போதுமே அதிக தேவை இருக்கும் நிலையில் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, கடந்த மாதத்தில் எந்த பைக் மக்களால் அதிகம் வாங்கப்பட்டுள்ளது என்பதையும், மற்ற பைக்குகளின் விற்பனை எண்ணிக்கையையும் இனி பார்க்கலாம்.

இந்திய மார்க்கெட்டில் புதியதாக எத்தனை பைக்குகள் வந்தாலும், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனையை ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில், அந்த அளவிற்கு, ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான ஸ்பிளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஸ்பிளெண்டரின் விற்பனை எண்ணிக்கைக்கு இணையாக வேறு எந்த பைக்கும் விற்பனையாகுவது இல்லை.

top-5 motorcycles sales in february

இருப்பினும், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை ஆனது வழக்கத்தை காட்டிலும் சற்று குறைந்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2 லட்சத்து 88,605 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், இந்த ஆண்டு பிப்ரவரியில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்கள் குறைவாக, 2 லட்சத்து 77,939 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும், 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிட்டால், அதற்கடுத்த பிப்ரவரி மாதத்தில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை கொஞ்சம் பரவாயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த மாதத்தில் 2 லட்சத்து 55,122 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து அதிகம் விற்பனை செய்யபட்ட மோட்டார்சைக்கிளாக ஹோண்டாவின் ஷைன் 2வது இடத்தை பிடித்துள்ளது.

top-5 motorcycles sales in february

கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் அப்டேட் செய்யப்பட்டதில் இருந்து ஷைன் பைக்குகள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 35,594 ஹோண்டா ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 1 லட்சத்து 42,763 ஷைன் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. அதாவது, கடந்த 1 வருடத்தில் ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை சுமார் 1 லட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 2024 ஜனவரி மாதத்திலும் 1.45 லட்ச ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. பஜாஜ் பல்சர் இந்த வரிசையில் 3வது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பல்சர் பைக்குகள் எண்ணிக்கை ஆனது 1 லட்சத்து 12,544 ஆகும். 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 80,106 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் கிட்டத்தட்ட 20 ஆயிரம் பல்சர் பைக்குகள் கடந்த மாதத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-5 motorcycles sales in february

இவை மூன்றும் தான் 1 லட்சம் யூனிட்களுக்கு மேல் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இந்தியாவின் டாப்-3 பைக்குகள் ஆகும். இவற்றிற்கு அடுத்து, 4வது இடத்தில் மற்றொரு பிரபலமான ஹீரோ பைக்கான எச்.எஃப் டீலக்ஸ் 76,138 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. 2023 பிப்ரவரி மாதத்தில் 56,290 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் ரைடர் இந்த வரிசையில் 5வது இடத்தை தனதாக்கி உள்ளது.

டிவிஎஸ் ரைடர் பைக்குகள் விற்பனை சமீப மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 42,063 ரைடர் பைக்குகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் ஏறக்குறைய 30 ஆயிரம் டிவிஎஸ் ரைடர் பைக்குகள் விற்பனை மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால், அந்த சமயத்தில் 30 ஆயிரம் ரைடர் பைக்குகள் விற்பனை என்பது கூட ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது.

top-5 motorcycles sales in february

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பலர் தங்களது முதல் பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டரையே தேர்வு செய்கின்றனர். இதில் இருந்து, ஸ்பிளெண்டர் பைக்குகளின் நம்பகத்தன்மையையும், அவற்றின் குறைவான பராமரிப்பு செலவையும் அறிய முடிகிறது. இதன் காரணமாகவே, இந்தியாவின் நம்பர் ஒன் மோட்டார்சைக்கிளாக ஸ்பிளெண்டர் உள்ளது. அதேநேரம், ஹோண்டாவின் ஷைன் பைக்குகள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் மாதங்களில் ஸ்பிளெண்டருக்கு இணையாக விற்பனையாகினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 18, 2024, 11:24 [IST]
English summary
Top 5 motorcycles sales in 2024 february hero splendor in first place
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X