யாராவது அவரை கண்ட்ரோல் பண்ணுங்க... இந்தியாவின் தேசிய பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டரை அறிவிச்சிடலாம்!!

இந்தியாவில் கார்களை காட்டிலும் பைக்குகளே அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக் கூடியவை என்பது நமக்கு தெரியும். இப்படிப்பட்ட சூழலில், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. ஹீரோவின் இத்தகைய வளர்ச்சிக்கு மிக முக்கிய அடித்தளமாக இருப்பது ஸ்பிளெண்டர் ஆகும். ஏனெனில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் நம்பர் ஒன் இரு சக்கர வாகனமாக இருப்பது ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும். வழக்கம்போல் கடந்த 2024 பிப்ரவரி மாதத்திலும் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக இருப்பது ஸ்பிளெண்டர் ஆகும்.

top-5 two wheelers in 2024 february

இருப்பினும், 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை கிட்டத்தட்ட 11 ஆயிரம் யூனிட்கள் குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு பிப்ரவரியை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் 11 ஆயிரம் ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகள் எண்ணிக்கை 2 லட்சத்து 88,605 ஆகும்.

ஆனால், இந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 2 லட்சத்து 77,939 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஹீரோ ஸ்பிளெண்டரை போல், இந்த லிஸ்ட்டில் 2வது இடத்திலும் வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஆக்டிவா கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2 லட்சத்து 134 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

top-5 two wheelers in 2024 february

ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 1 லட்சத்து 74,503 ஆக்டிவா ஸ்கூட்டர்களை மட்டுமே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆக்டிவாவிற்கு அடுத்து, இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தை ஹோண்டாவின் மற்றொரு பிரபலமான ஷைன் மோட்டார்சைக்கிள் பிடித்துள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தில் வெறும் 35,594 ஹோண்டா ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 42,763 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் ஹோண்டா ஷைன் பைக்குகள் விற்பனை ஆனது சுமார் 301% அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரியில் சுமார் 1 லட்சத்து 7,169 ஷைன் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

top-5 two wheelers in 2024 february

இந்த வரிசையில் 4வது இடத்தில் பஜாஜ் பல்சர் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பல்சர் பைக்குகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 12,544 ஆகும். ஆனால், 2023 பிப்ரவரி மாதத்தில் 80,106 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 32,438 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை நான்கு தான் கடந்த பிப்ரவரி மாதத்தில் 1 லட்சம் யூனிட்கள் மேல் இந்தியாவில் விற்பனையான 2-வீலர்கள் ஆகும்.

5வது இடத்தில் உள்ள ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 76,138 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளின் எண்ணிக்கை 56,290 ஆகும். டிவிஎஸ் ஜூபிட்டர் 73,860 யூனிட்களின் விற்பனை உடன் இந்த வரிசையில் 6வது இடத்தை பிடித்துள்ளது. 7வது மற்றும் 8வது இடங்களில் சுஸுகி ஆக்ஸஸ் (56,473) மற்றும் டிவிஎஸ் ரைடர் (42,063) உள்ளன.

top-5 two wheelers in 2024 february

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டரை இந்தியாவின் பைக் எனலாம். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கிலான ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் ஹைலைட் என்னவென்றால், ஹீரோ ஸ்பிளெண்டருக்கு போட்டியாக இருக்கும் எந்த பைக்கும் இந்திய மார்க்கெட்டில் இந்த அளவிற்கு விற்பனையாகுவது இல்லை.

More from DriveSpark

Article Published On: Sunday, March 17, 2024, 23:38 [IST]
English summary
Top 5 two wheelers which most sold in 2024 february check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X