1நிமிஷம் சார்ஜ் பண்ணா 1.5கிமீ தூரம் பயணிக்கலாம்.. சூப்பரான இ-பைக்கின் விலையை அதிரடியாக குறைத்த டார்க்!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ர்க் பைக் உற்பத்தி நிறுவனங்களில் டார்க் மோட்டார்ஸ் (Tork Motors)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனம் அதன் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக் (Kratos R Electric Bike)-கிற்கு சிறப்பு தள்ளுபடி விலையை அறிவித்து இருக்கின்றது. இந்த பைக் குறுகிய நாட்களுக்கு ரூ. 1,49,999-க்கே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. குறுகிய காலம் என்றால் எப்போது வரை இந்த எலெக்ட்ரிக் பைக் தள்ளுபடி விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும். இந்த மார்ச் மாத இறுதி வரை இந்த சலுகை உங்களுக்குக் கிடைக்கும்.

Tork kratos r

ஆமாங்க, 31 ஆம் தேதியே சலுகை விலைக்கான கடைசி நாள் ஆகும். நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் பைக் மாடலுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டு இருப்பது மின்சார இரண்டு சக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டார்க் க்ரடோஸ் ஆர் ஓர் பிரீமியம் தர எலெக்ட்ரிக் பைக் மாடல் ஆகும்.

இந்த பைக்கில் 4.0 kWh, IP 67 தர சான்று பெற்ற பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும். இத்துடன், 9kW திறன் கொண்ட ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் பிஎம்எஸ்எம் (Axial Flux PMSM) மோட்டாரே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

Tork kratos r e-bike on sale at special price

இது அதிகபட்சமாக 38 என்எம் வரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தனித்துவமான ரைடிங் அனுபவத்தை பெறும் நோக்கில் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கில் ஐந்து விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஈகோ, ஈகோ பிளஸ், சிட்டி, ஸ்போர்ட்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

எலெக்ட்ரிக் பைக்கின் டாப் ஸ்பீடு மணிக்கு 105 கிமீ ஆகும். இதுதவிர இதில் ஓர் முழு சார்ஜில் 180 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும். ஆனால், இந்த உச்சபட்ச ரேஞ்ஜ் திறனை பெற வேண்டும் எனில் ஈகோ மோட் அல்லது மிக மிக குறைவான வேகத்தில் பயணித்தால் மட்டுமே முடியும்.

அதிக வேகத்தில் பயணித்தால் ரேஞ்ஜ் இதைவிட குறைவாகவே கிடைக்கும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் சிட்டி மோடில் 100 கிமீட்டரையும், ஸ்போர்ட்ஸ் மோடில் 70 கிமீ ரேஞ்ஜை மட்டுமே பெற முடியும். ஆகையால், குறைவான வேகத்தில் பயணிப்பதே பெஸ்ட் ஆகும்.

அதேநேரத்தில், விரைந்து சார்ஜ் செய்தல் மற்றும் வீட்டு பிளக் பாயிண்ட்டில் வைத்து சார்ஜ் செய்தல் ஆகியவற்றிற்கான வசதிகளும் டார்க் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்யும்போது 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும்.

அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் இதே சதவீதத்தை வெறும் ஒரு மணி நேரத்திலேயே எட்டிவிடும். மேலும், ஒரு நிமிடம் சார்ஜ் செய்தால் 1.5 கிமீ தூரம் வரை டிராவல் செய்யவும் முடியும். இதுமட்டுமில்லைங்க சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த எலெக்ட்ரிக் பைக் கை தேர்ந்ததாகக் காட்சியளிக்கின்றது. முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட திரையே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இது மொபைல் இணைப்பு வசதிக் கொண்டது ஆகும். நேவிகேஷன், வாகனம் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம், ஜியோ ஃபென்சிங், ஆக்டீவ் த்ரோட்டில் கன்ட்ரோல், ட்ரிப் மீட்டர், லோ பேட்டரி இன்டிகேட்டர், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், கிராஷ் அலர்டு, ஓடிஏ என ஏகப்பட்ட வசதிகளை இந்த எலெக்ட்ரிக் பைக்கில் டார்க் மோட்டார்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது.

இத்துடன் சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக க்ரடோஸ் ஆர் பைக்கின் முன் வீலில் ஹைட்ராலிக் டெலிஸ்கோபிக்கும், பின் வீலில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் டிஸ்க் பிரேக்குகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. முன் வீலில் 267 மிமீ டிஸ்க்கும், பின் வீலில் 230 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக்கைக் காட்டிலும் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாக ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி உள்ளிட்ட பிராண்டுகளின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. அதேவேளையில், டார்க் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களினாலேயே இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் சந்தை விரிவடையத் தொடங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. நாளடைவில் இந்த பிரிவிலும் தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2024, 17:22 [IST]
English summary
Tork motors announced special price for kratos r e bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+