ராசியான கை.. பஜாஜால் தயாரிக்கப்பட்ட டிரையம்ப் பைக்கிற்கு இப்படி ஒரு வரவேற்பா! உலகளவுல சேல்ஸ் பிச்சுக்குது!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto)வும், டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) மிகப் பெரிய மகிழ்ச்சியில் மூழ்கின்ற வகையிலான ஓர் சம்பவமே தற்போது அரங்கேறி இருக்கின்றது. இருவரின் கூட்டணியின்கீழ் தயாரிக்கப்பட்ட ட்வின் பைக் மாடல்களுக்கு உலக அளவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருப்பதே அவர்களின் இந்த மகிழ்ச்சிகு காரணம் ஆகும். இந்த இரு மாபெரும் நிறுவனங்களின் கூட்டணியை அடுத்து ஸ்பீடு 400 (Speed 400) மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400x) இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி உள்ளூர் மயமாக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த இரட்டையர்கள் பைக் மாடல்களுக்கே உலக அளவில் தரமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுமார் 50 ஆயிரம் யூனிட்டுகள் வரை இந்த ட்வின் பைக்குகள் விற்பனையாகி இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. விற்பனைக்கு வந்த ஒரே ஆண்டிலேயே இத்தனை ஆயிரம் யூனிட்டுகள் அவை விற்பனையாகி இருக்கின்றன.

Special discount on triumph 400 twins

இதனால்தான் இதனை மிகப் பெரிய சாதனையாக பஜாஜ் மற்றும் டிரையம்ப் ஆகியவை கருதுகின்றன. எனவேதான் இந்த நிகழ்வைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன. அத்துடன், இந்த இரட்டையர்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக ஓர் சிறப்பு சலுகையையும் அவர்கள் அறிவித்து இருக்கின்றனர். இரண்டு பைக்குகளுக்கும் ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த சலுகை குறைவான நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இம்மாத இறுதி (ஜூலை 31) வரை மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. மஹாராஷ்டிரா மாநிலம், புனவில் உள்ள சக்கன் பஜாஜ் வாகன உற்பத்தி ஆலையில் வைத்தே டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகியவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இங்கிருந்தே உலக நாடுகள் பலவற்றிற்கு இந்த இரண்டு சக்கர வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகின்றது. பஜாஜ் நிறுவனம் இந்த பைக்குகளின் உற்பத்தியை கையில் எடுத்த பின்னர் சற்றே மலிவானதாக அவை மாறி இருக்கின்றன.

இதன் விளைவாகவும், பஜாஜ் மீதிருக்கும் நம்பகத் தன்மைக் காரணமாகவே இந்த பைக்கிற்கு தற்போது டிமாண்ட் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றது. குறிப்பாக, இந்தியாவின் பிரீமியம் மோட்டார்சைக்கிள் சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை இந்த பைக் மாடல்கள் கண்டுள்ளன. இதற்கே மேலும் வலுசேர்க்க முதலாம் ஆண்டு விழா சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

ரூ. 10 ஆயிரம் சலுகையால் ஸ்பீடு ​​400 மாடலின் விலை ரூ. 2.24 லட்சமாகவும், ஸ்க்ராம்ப்ளர் 400 எக்ஸ் மாடலின் விலை ரூ. 2.54 லட்சமாகவும் மாறி உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். ஜூலை 2023-ல், லண்டனில் உலகளவில் வெளியிடப்பட்ட பின்னரே இந்தியாவில் இந்த பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான அறிமுகமான பத்த நாட்களுக்குள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான முன்பதிவுகளைக் குவித்தது.

இந்த நிலையிலேயே ஒரு வருடத்திற்குள் 50 ஆயிரம் யூனிட் விற்பனையை அது எட்டி இருக்கின்றது. இந்த இரண்டு பைக் மாடல்களிலும் ஒரே எஞ்சினே பன்படுத்தப்பட்டு இருக்கின்றன. 398.15சிசி, லிக்யூடு கூல்டு டிஓஎச்சி, 4வால்வுகள் கொண்ட எஞ்சினே அது ஆகும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 39.5 பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 37.5 என்எம் டார்க்கை 6,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த மோட்டார் இயங்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த பைக்குகளின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 10 ஆயிரம் சலுகை அறிவித்திருப்பதால் இந்த ட்வின் பைக்குகளின் விலை இன்னும் மலிவானதாக மாறி இருக்கின்றது. எனவே போட்டியாளர்களுக்கு வரும் நாட்களில் மேலும் சவாலானதாக இந்த பைக் மாடல்கள் மாறும் என யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 2, 2024, 11:31 [IST]
English summary
Triumph 400 twins achieved over 50 000 sales and introducing special discount to celebrate
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+