இந்தியாவின் பஜாஜ் ஆலையில் இப்படிப்பட்ட பைக்கா... எவ்வளவு லட்சங்களில் வந்தாலும் கஸ்டமர்கள் குவிய போறாங்க!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் இந்தியாவில் அதன் வணிகத்தை விரிவுப்படுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதன் ஒரு பகுதியாக, புதியதாக இரு 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய டிரையம்ப் தயாராகி வருகிறது. இந்த விஷயத்தை பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில் இந்த புதிய டிரையம்ப் பைக்குகள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றியும், இந்த புதிய டிரையம்ப் பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ உடன் இணைந்து செயல்பட்டு வரும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் சமீப காலமாக மக்களை கவரும் விதமாக விலை குறைவான பைக்குகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த வகையில், கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

triumph 400cc motorcycles iIndia launch

இதனை அதிகப்படுத்தும் விதமாக, மேலும் இரு புதிய 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பஜாஜ்- டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்படும் புதிய 400சிசி பைக்குகள் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இன்னும் சில மாதங்களில் வர உள்ள விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் புதிய டிரையம்ப் 400சிசி பைக்குகள் அறிமுகம் செய்யப்படலாம்.

ஆனால் முன்னதாக, டிரையம்ப்பின் புதிய 400சிசி மோட்டார்சைக்கிள்கள் இந்த 2024ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் தெரிவித்து இருந்தார். புதிய 400சிசி பைக்குகளில் ஒன்று டிரையம்ப் த்ரக்ஸ்டன் 400 ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. இது டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கேஃப்-ரேஸர் மோட்டார்சைக்கிள் ஆகும். மற்றொன்றும், த்ரக்ஸ்டன் 400 பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகவே இருக்கும்.

triumph 400cc motorcycles iIndia launch

டிரையம்ப் த்ரக்ஸ்டன் பைக் போன்றதான மோட்டார்சைக்கிள் ஒன்று இந்தியாவில் ஒருமுறை சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டிருந்தது. அந்த சோதனை பைக்கில் மோன்ஸா ஃபேயரிங், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் தட்டையான பில்லன் க்ராப் ரெயில்கள் இடம்பெற்று இருந்தன. இதனால், டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய 400சிசி பைக் அதிகளவில் பேனல்களை கொண்டதாக இருக்கலாம்.

மற்றப்படி, டிரையம்ப்பின் புதிய 400சிசி பைக்குகள் குறித்து வேறெந்த விபரங்களும் தற்போதைக்கு இல்லை. டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளை போன்று புதிய 400சிசி பைக்குகளும் புனேவில் உள்ள பஜாஜ் ஆட்டோவின் தொழிற்சாலையில் உருவாக்கப்படலாம். இங்கு உற்பத்தி செய்யப்படும் அந்த பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படலாம்.

இவ்வாறு ஒருபக்கம் புதிய பைக்குகளின் அறிமுகத்திற்கு தயாராகிவரும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் மறுப்பக்கம் ஏற்கனவே விற்பனையில் உள்ள ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளின் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, வருகிற அக்டோபர் மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திலும் 10 ஆயிரம் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளை உற்பத்தி செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளுக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. புதிய 400சிசி பைக்குகள் உடன், புதிய டேடோனா 660 பைக்குகளையும் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. எங்களுக்கு தெரிந்தவரையில், டேடோனா 660 பைக்குகளும் இன்னும் சில வாரங்களில் அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க பல வருடங்களாகவே டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் போராடி வருகிறது. ஆனால், குறைந்த விலையில் 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்ய விரும்புவதன் மூலம் டிரையம்ப் சமீப காலமாக சரியான டிராக்கில் செல்ல ஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது. ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை போன்று புதிய 400சிசி பைக்குகளும் மக்கள் மத்தியில் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 9, 2024, 23:16 [IST]
English summary
Triumph 400cc motorcycles india launch check all details here
மேலும்... #triumph motorcycles #triumph #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+