டிரையம்ப்-ன் புதிய காஸ்ட்லியான பைக் விற்பனைக்கு அறிமுகம்! இந்த ஒரு பைக்கின் விலையில் 10ஸ்பிளெண்டரை வாங்கிடலாம்
டிரையம்ப் (Triumph) அதன் விலை உயர்ந்த பைக்கை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. டேடோனா 660 (Daytona 660) இந்த பைக்கையே டிரையம்ப் தற்போது விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 9 லட்சத்து 72 ஆயிரத்து 450 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த விலையில் பத்து ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை வாங்கிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த அளவிற்கு காஸ்ட்லியான டூ-வீலராகவே டிரையம்ப் டேடோனா 660 மோட்டார்சைக்கிள் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.
டிரையம்ப் நிறுவனம் இந்த புதிய பைக்கை தன்னுடைய புகழ்பெற்ற பைக் மாடல்களான டிரைடென்ட் 660 (Trident 660) மற்றும் டைகர் ஸ்போர்ட்ஸ் 660 (Tiger Sport 660) ஆகிய மாடல்களைத் தயாரிக்கப் பயன்படுத்தும் அதே பிளாட்பாரத்தை வைத்தே தயார் செய்திருக்கின்றது.

மேலும், இது ஓர் நடுநிலை எடைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் (Middleweight Sports Bike) வகை பைக் மாடல் ஆகும். இந்த புதிய த்ரில்லான ரைடு அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் கூறுகின்றது. டிரையம்ப் நிறுவனம் இந்த பைக்கில் பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், தரமான திறனை வெளியேற்றக் கூடிய 660 சிசி டிரிபிள் எஞ்சினையே டேடோனா 660 மாடலில் பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 11,250 ஆர்பிஎம்மில் 95 பிஎஸ் பவரை வெளியேற்றும். மேலும், இது 69 என்எம் டார்க்கை உருவாக்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

ஸ்லிப்பர் மற்றும் டார்க் அசிஸ்ட் கிளட்ச் வசதிக் கொண்ட கியர்பாக்ஸே இதுவாகும். இது சிறந்த கியர்ஷஃப்டை பெற்றுக் கொள்ள பெரும் உதவியாக இருக்கும். மேலும், இதன் கிளட்ச் ரியர் வீலைக் கன்ட்ரோல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
தொடர்ந்து இந்த பைக்கில் அட்வான்ஸ்டு அம்சங்களும் பல வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், வண்ண மயமான டிஎஃப்டி திரை இதில் எல்சிடி திரையுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. ரைடருக்கு தேவையான பல்வேறு முக்கிய தகவல்களை இந்த திரைகள் வழங்கும். இத்துடன், ஆப்ஷனலாக மை டிரையம்ப் இணைப்பு வசதியும் இதில் வழங்கப்படுகின்றது.
இந்த அம்சத்தின் அட்வான்ஸ்டு அம்சங்கள் பலவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்குதல், செல்போன் இணைப்பு மற்றும் மியூசிக் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல்வேறு நவீன கால வசதிகளை இந்த பைக்கில் காண முடிகின்றது.
இது ஓர் ஸ்போர்ட்ஸ் பைக்காக இருந்தாலும், நீண்ட தூர டிராவலுக்கு ஏற்ற பைக்காகவும் இதனை டிரையம்ப் தயார் செய்திருக்கின்றது. மேலும், லாங் டிராவலின்போது அசௌகரியமான டிராவல் அனுபவம் ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக கைதேர்ந்த சஸ்பென்ஷன்களை இந்த பைக்கில் டிரையம்ப் பயன்படுத்தி இருக்கின்றது.
அந்தவகையில், கிளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் மற்றும் அட்ஜஸ்டபிள் ரியர் சஸ்பென்ஷன் ஆகியவை இந்த பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த பைக்கில் டிரையம்ப் நிறுவனம் சிறந்த இயக்கத்திற்காக 41 மிமீ பிக்-பிஸ்டன் அப்சைடு டவுன் ஃபோர்க்கையே பயன்படுத்தி இருக்கின்றது.
இது ஷோவா நிறுவனத்துடையது ஆகும். இதேபோல், பின் பக்கத்திலும் ஷோவாவின் மோனோஷாக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுதான் அட்ஜஸ்டபிள் வசதிக் கொண்டது என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த பைக்கில் இரட்டை 4 பிஸ்டன் ரேடியல் காலிபர்கள் 310 மிமீ டிஸ்க்குடன் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றுடன், மூன்று விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஸ்போர்ட், ரோடு மற்றும் மழை ஆகிய ரைடிங் மோட்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. ரைடு பை ஒயர் த்ரோட்டில் சிஸ்டமும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இதுதவிர, கைகளுக்கு சூடான அனுபவத்தை வழங்கும் கிரிப், யுஎஸ்பி சாக்கெட், டயர் பிரஷ்ஷர் மானிட்டர் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, பாதுகாப்பு அம்சமாக இந்த பைக்கில் டிரையம்ப் புரடெக்ட் அலாரம் சிஸ்டம் மற்றும் டிரையம்ப் டிரைக் பிளஸ் டிராக்கர் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சம் பைக்கைக் கண்கானிக்கவும், திருட்டில் பாதுகாக்கவும் உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் புதிய டேடோனா 660 பைக்கின் விலையில் இந்தியர்களின் பிரியமான பைக் மாடலான ஸ்பிளெண்டரை பத்து யூனிட்டுகள் வரை வாங்கிக் கொள்ள முடியும். இந்தியாவில் ஸ்பிளெண்டர் ரூ. 95 ஆயிரத்திற்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








