பணக்காரர்கள் இப்போவே ரெடியாகிட்டாங்க... ரூ.11 லட்சத்தில் வர போகும் புதிய பைக் - எந்த பிராண்டில் தெரியுமா?

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் டேடோனா 660 (Daytona 660) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் நாளை (ஆகஸ்ட் 29) விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. டிரையம்ப் 660 பைக்குகளில் மிகவும் பவர்ஃபுல்லானதாக விளங்கும் இது, டிரையம்ப் டிரிடெண்ட் 660 மற்றும் டைகர் ஸ்போர்ட் 660 மோட்டார்சைக்கிள்களில் பொருத்தப்படும் அதே என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த புதிய டிரையம்ப் பைக்கை பற்றிய விரிவான விபரங்களையும், இந்த பைக்கிற்கு நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் விலையையும் பற்றி இனி பார்க்கலாம்.

உலகளவில் பிரபலமான பிரிட்டிஷ் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். இந்தியாவில் பல்வேறு தரமான பைக்குகளை விற்பனை செய்துவரும் இந்த நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக நம் நாட்டு சந்தையில் டேடோனா 660 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த பைக்கில் 660சிசி, இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.

triumph daytona 660 india launch

அதிகப்பட்சமாக 11,250 ஆர்பிஎம்-இல் 95 எச்பி மற்றும் 8,250 ஆர்பிஎம்-இல் 69 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், இதே என்ஜின் தான் டிரையம்ப் டிரிடெண்ட் 660 மற்றும் டைகர் ஸ்போர்ட் 660 பைக்குகளிலும் பொருத்தப்படுகிறது. ஆனால், அந்த பைக்குகளை காட்டிலும் 14 எச்பி மற்றும் 5 என்.எம் டார்க் திறன் வரையிலான என்ஜின் ஆற்றலை டேடோனா 660 பைக்கில் அதிகமாக பெறலாம்.

புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக்கில் மழை, சாலை மற்றும் ஸ்போர்ட் என 3 விதமான ரைடிங் மோட்களை பெறலாம். சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் ஷோவா யுஎஸ்டி ஃபோர்க்குகள் முன்பக்கத்திலும், ஷோவா மோனோஷாக் பின்பக்கத்திலும் வழங்கப்படுகின்றன. பிரேக் பணியை கவனிக்க முன் சக்கரத்தில் 310மிமீ-இல் இரட்டை டிஸ்க்குகளும், பின்பக்கத்தில் 220மிமீ-இல் சிங்கிள் டிஸ்க்கும் பொருத்தப்படுகிறது.

triumph daytona 660 india launch

இந்த பைக்கில் 14 லிட்டர்கள் கொள்ளளவில் பெட்ரோல் டேங்க் கிடைக்கும். பைக்கின் எடை 201 கிலோ ஆகும். வெளிநாட்டு சந்தைகளில் டைகர் ஸ்போர்ட் 660 பைக்கை காட்டிலும் டேடோனா 660 பைக்கின் விலை சற்று குறைவாகும். ஆனால் இந்தியாவில் டிரையம்ப் டைகர் ஸ்போர்ட் பைக்கின் விலையை காட்டிலும் புதிய டேடோனா 660 பைக்கின் விலையை அதிகமாக எதிர்பார்க்கிறோம்.

டைகர் ஸ்போர்ட் 660 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.9.58 லட்சமாக உள்ளது. புதிய டேடோனா 660 பைக்கின் விலையை ரூ.11 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சம் வரையில் எதிர்பார்க்கிறோம். விற்பனையில் டேடோனா 660 பைக்கிற்கு கவாஸாகி நிஞ்சா 650, ஏப்ரிலியா ஆர்.எஸ்660, ஹோண்டா சிபிஆர்650ஆர் மற்றும் சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-8ஆர் உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

triumph daytona 660 india launch

புதிய டேடோனா 660 பைக்கின் அறிமுகம் குறித்து டிரையம்ப் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், "புதிய டேடோனா 660 எங்களது லைன்-அப்பில் புதிய பெஞ்ச்மார்க்கை செட் செய்ய உள்ளது. இந்த பவர்ஃபுல்லான மெஷினை இந்திய கஸ்டமர்களுக்காக வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் முடிந்தவரையில் இவ்வாறு மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்வதில் உறுதியாக உள்ளது. இதனை காட்டிலும் விலைமிக்க & பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்களையும் டிரையம்ப் விற்பனை செய்கிறது. புதிய டேடோனா 660 பைக்கின் விலை எந்த அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதை பொறுத்தே அது இந்திய சந்தையில் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்க முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 28, 2024, 20:59 [IST]
English summary
Triumph daytona 660 motorcycle india launch check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X