இப்போது வாங்காமல் விட்டால், அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க!! இந்த பைக்குக்கு பணம் தள்ளுபடி எல்லாம் அபூர்வம்!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம். இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப், மிகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு அதன் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களை கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்கிற பெயர்களில் அந்த பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு 1 வருடம் ஆகிவிட்டது. இதனை நினைவுக்கூறும் விதமாக அறிவிக்கப்பட்ட சலுகைகள் இந்த ஆகஸ்ட் மாதத்திற்கும் தொடரப்படுவதாக டிரையம்ப் தெரிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் விலை குறைவான வாகனங்களுக்கே அதிக டிமாண்ட் இருக்கும் என்பது ஊரறிந்த விஷயம். இதனை சற்று தாமதமாகவே புரிந்துக் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் பஜாஜ் உடன் இணைந்து பிரத்யேகமாக இந்திய மார்கெட்டிற்கென விலை குறைவான மோட்டார்சைக்கிளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது. ஹீரோ மோட்டோகார்ப் - ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் உருவாக்கப்பட்டதும், டிரையம்ப்பின் இந்த திட்டத்திற்கு ஒரு காரணம் என சொல்லலாம்.

triumph extends first anniversary offer

விலை குறைவான டிரையம்ப் பைக்குகளாக ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2023 ஜூலை 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டன. இந்த வகையில் பார்த்தால், கடந்த ஜூலை 5ஆம் தேதியோடு இந்த பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு 1 வருடமாகி விட்டது. இந்த முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

அதாவது, டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.10,000 குறைத்துக் கொள்ளப்படும் என டிரையம்ப் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த சலுகை ஜூலை 31ஆம் தேதி வரையில் மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆகஸ்ட் மாதத்திற்கும் இந்த பணம் தள்ளுபடி சலுகை தொடரப்படுவதாக தற்போது பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.

triumph extends first anniversary offer

இதன்படி, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் மேற்கூறப்பட்ட டிரையம்ப் பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம். இந்தியாவில் டிரையம்ப் நிறுவனத்திற்கு 75 நகரங்களில் 100க்கும் அதிகமான டீலர்ஷிப் ஷோரூம்கள் உள்ளன. அவை அனைத்திலும் இந்த சலுகையை பெறலாம். இந்தியாவில் புனேவில் உள்ள பஜாஜ் நிறுவனத்தின் சாகான் தொழிற்சாலையில் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் இந்த டிரையம்ப் 400சிசி பைக்குகள் 50க்கும் அதிகமான வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகளவில் கடந்த 1 வருடத்தில் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரத்திற்கும் அதிகமான மேட்-இன்-இந்தியா ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்குகளை டிரையம்ப் விற்பனை செய்துள்ளது. டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.24 லட்சத்தில் இருந்தும், ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கின் விலை ரூ.2.54 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன.

triumph extends first anniversary offer

விலைகள் வித்தியாசப்பட்டாலும், ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் இவை இரண்டிலும் ஒரே மாதிரியாக 398.15சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 39.5 பிஎச்பி மற்றும் 37.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

முக்கிய சிறப்பம்சங்களாக இந்த டிரையம்ப் பைக்குகளில், ஃபுல்-எல்இடி விளக்குகள், செமி-டிஜிட்டல் கன்சோல் மற்றும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் கூடுதலாக, ஸ்விட்ச் ஆஃப் செய்யக்கூடிய ஏபிஎஸ் பின் சக்கரத்தில் கொடுக்கப்படுகிறது. இந்த இரு பைக்குகளும், சக்கரத்தின் அளவில், சஸ்பென்ஷன் செட்-அப்பில் வேறுப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலை குறைவான டிரையம்ப் பைக்குகளாக இருப்பினும், இவற்றின் ஆன்-ரோடு விலை எப்படியிருந்தாலும் ரூ.3 லட்சத்தை தாண்டிவிடும். இருப்பினும், வாடிக்கையாளர்களை ஈர்க்க ரூ.10,000 பணம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டு, தற்போது அது மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதலால், கடந்த ஜூலை மாதத்தில் தவறவிட்டவர்கள் இந்த விலை குறைவான டிரையம்ப் பைக்குகளுள் ஒன்றை இந்த ஆகஸ்ட்டில் புக் செய்துவிடுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2024, 8:00 [IST]
English summary
Triumph extends speed 400 and scrambler 400x first anniversary offer
மேலும்... #triumph motorcycles #triumph #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X