இந்த நிறத்துக்காகவே எல்லாரும் இந்த பைக்கை வாங்கி குவிக்க போறாங்க.. ஐந்தாவதாக புதிய வண்ண தேர்வு அறிமுகம்!
இந்தியாவில் ராயல் என்பீல்டு (Royal Enfield) போன்ற நிறுவனங்களின் மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக பிரீமியம் தர இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே அதன் பிரபல பைக் மாடலில் ஒன்றில் புதிதாக புதிய நிற தேர்வு ஒன்றை இணைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தன்னுடைய போட்டியாளர்களுக்கு இப்போது வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை இருமடங்காக்கும் பொருட்டும், வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டும் அது புதிய நிற தேர்வை அறிமுகம் செய்திருக்கின்றது.
அப்படி என்ன நிற தேர்வை எந்த பைக் மாடலில் டிரையம்ப் சேர்த்திருக்கின்றது? இந்த பைக் மாடலின் விலை என்ன? மற்றும் இந்த பைக் மாடலின் சிறப்புகள் என்ன என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க, விரிவான பதிவிற்குள் போகலாம்.

ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக டிரையம்ப் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் ஓர் சூப்பரான மோட்டார்சைக்கிளாக போன்வில்லே டி120 (Bonneville T120) இருக்கின்றது. இந்த பைக் மாடலிலேயே புதிய நிற தேர்வை டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் சேர்த்திருக்கின்றது. கிரான் பெர்ரி சிவப்பு (Cranberry Red) மற்றும் கிரிஸ்டல் ஒயிட் (Crystal White) எனும் இரண்டு நிறங்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய வண்ண தேர்வையே டிரையம்ப் அறிமுகம் செய்திருக்கின்றது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 11.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏற்கனவே இந்த பைக் மாடலில் நான்கு விதமான நிற தேர்வுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையிலேயே மேலும் ஓர் புதிய நிற தேர்வு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
சஃபையர் ப்ளூ - சில்வர் ப்ளூ ஸ்டெல்த் எடிசன் (Sapphire Blue with Silver Blue Stealth Edition) டூயல் டோன், ஜெட் பிளாக் (Jet Black), கோர்டோவன் ரெட் சில்வர் ஐஸ் (Cordovan Red Silver Ice) மற்றும் ஜெட் பிளாக் - ஃப்யூஷன் ஒயிட் (Jet Black with Fusion White) ஆகியவையே அவை ஆகும்.
இத்துடனேயே ஐந்தாவது புதிய நிற தேர்வும் இணைக்கப்பட்டு உள்ளது. புதிய நிற தேர்வு மட்டுமே இந்த பைக் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. வேறு எந்த மாற்றமும் இந்த மோட்டார்சைக்கிளில் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது அதே விண்டேஜ் லுக்கிலேயே இந்த பைக் காட்சியளிக்கின்றது.
ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை, வட்ட வடிவ முகப்பு மின் விளக்கு, ஸ்போக் வீல், குரோம் பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகள் அப்படியே உள்ளன. டிரையம்ப் போன்வில்லே டி120 ஓர் 1200 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். பாரல்லல் ட்வின் எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 6,550 ஆர்பிஎம்மில் 78.9 பிஎச்பி பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 105 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸையே இந்த பைக் கொண்டு உள்ளது. உருவத்தில் வேண்டுமானால் இந்த பைக் கிளாசிக் 350 போட்டியாக இருக்கலாம். ஆனால், எஞ்சின் வழியாக பார்த்தால் இந்த பைக் பிஎம்டபிள்யூ ஆர் நைன் டி ( BMW R nineT) மாடலுக்கே போட்டியாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1200 (Ducati Scrambler 1200) பைக்கிற்கும் போட்டியாகவே டிரையம்ப் போன்வில்லை டி120 பைக் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. இந்த அட்டகாசமான நிற தேர்விற்கு பிரீமியம் பைக்கை அதிகம் விரும்புவோர் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








