குடுத்து வெச்சவங்க... இந்த விலையில் ஒரு புதிய காரையே வாங்கியிருக்கலாமே!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) இந்தியாவில் அதன் டேடோனா 660 (Daytona 660) மோட்டார்சைக்கிளை சமீபத்தில் புதியதாக அறிமுகம் செய்தது. ரூ.9.72 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக்கிற்கான புக்கிங்குகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் இந்த டிரையம்ப் பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு உள்ளன. இதன்படி, முதல் டிரையம்ப் டேடோனா 660 பைக் இந்திய வாடிக்கையாளருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களையும், விற்பனையில் இதற்கு போட்டியாக உள்ள மற்ற பைக்குகளையும் இனி பார்க்கலாம்.

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் டேடோனா பைக்குகளுக்கு உலகம் முழுவதிலுமே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த நம்பிக்கையில், சமீபத்தில் டேடோனா 660 பைக்கை இந்தியாவில் டிரையம்ப் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.9.72 லட்சமாக தற்சமயம் உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் சில இலட்சங்கள் அதிகமாக வரலாம்.

triumph starts daytona 660 delivery

இத்தகைய விலையுயர்ந்த பைக்கை தான் தற்போது கஸ்டமர்களுக்கு டெலிவிரி செய்ய டிரையம்ப் துவங்கியுள்ளது. முதல் கஸ்டமர் மும்பையில் புதிய டேடோனா 660 பைக்கை டெலிவிரி பெற்றுள்ளார். சாடின் கிரானைட், சாப்பையர் பிளாக் மற்றும் கார்னிவல் சிவப்பு என 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் டேடோனா 660 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதில், மும்பையில் டெலிவிரி பெற்றுள்ள முதல் கஸ்டமர், சாடின் கிரானைட் நிறத்தில் இந்த பைக்கை வாங்கியுள்ளார்.

டிரையம்ப் டிரிடெண்ட் 660 மற்றும் டைகர் ஸ்போர்ட் 660 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 660சிசி இன்-லைன், 3-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் இந்த பைக்கிலும் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், புதிய டேடோனா 660 பைக்கில் இந்த என்ஜின் சற்று வேறுப்பட்டதாக ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,250 ஆர்பிஎம்-இல் 93.7 பிஎச்பி மற்றும் 8,250 ஆர்பிஎம்-இல் 69 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

triumph starts daytona 660 delivery

அதுவே, டிரையம்ப் டிரிடெண்ட் 660 பைக்கில் இதே என்ஜின் அதிகப்பட்சமாக 10,250 ஆர்பிஎம்-இல் 80 பிஎச்பி மற்றும் 6,250 ஆர்பிஎம்-இல் 64 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக வழங்கப்படுகிறது. இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. புதிய டேடோனா 660 பைக்கில் சர்வீஸ் இண்டர்வெல் 16,000கிமீ அல்லது 12 மாதங்கள் ஆகும்.

பைக்கில் ரோடு மற்றும் மழை ரைடிங் மோட்கள் உடன் சேர்த்து புதியதாக ஸ்போர்ட் ரைடிங் மோட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு 41மிமீ-இல் தலைக்கீழான பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ப்ரீ-லோடு அட்ஜெஸ் வசதி உடன் ஷோவா மோனோஷாக்கும் வழங்கப்பட்டு உள்ளன.

பிரேக்கிற்கு முன் சக்கரத்தில் 310மிமீ-இல் டிஸ்க்குகளும், பின் சக்கரத்தில் 220மிமீ-இல் டிஸ்க்கும் வழங்கப்படுகின்றன. இவற்றுடன், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் கொடுக்கப்படுகிறது. விற்பனையில் புதிய டிரையம்ப் டேடோனா 660 பைக்கிற்கு கவாஸாகி நிஞ்சா 650, ஏப்ரிலியா ஆர்.எஸ்660 மற்றும் சுஸுகி ஜி.எஸ்.எக்ஸ்-8ஆர் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் டேடோனா 660 பைக்கின் விலையில் ஒரு எஸ்யூவி காரையே வாங்கிவிட முடியும். இருப்பினும், இந்தியாவில் நிறைய பேர் இந்த பைக்கை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. டெலிவிரிகள் தற்போது துவங்கியுள்ளதால், டேடோனா 660 பைக்கை புக் செய்தவர்கள் டெலிவிரி பெற தயாராகுங்கள்.

Image Courtesy: Triumph Motorcycles Mumbai

More from DriveSpark

Article Published On: Friday, October 18, 2024, 20:34 [IST]
English summary
Triumph motorcycles starts daytona 660 delivery in india check price features all details here
மேலும்... #triumph motorcycles #triumph #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+