விலையை இந்த அளவுக்கு குறைக்க பெரிய மனசு வேண்டும்! டிரையம்ப் பைக் கனவை நிஜமாக்க நேரம் வந்தாச்சு!!
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனம் அதன் சிறப்பு வருட-இறுதி சலுகையை அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கவுள்ள இந்த சலுகையை அனைத்து டிரையம்ப் பைக்குகளுக்கும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஒரேயொரு டிரையம்ப் பைக்கிற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. அது எந்த பைக் என்பதை பற்றியும், அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகையை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ், உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம். இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தனது வியாபார யுக்தியை மாற்றி வருகிறது. அதாவது, இந்திய சந்தைக்கு ஏற்ப விலை குறைவான பைக்குகளை அறிமுகம் செய்ய டிரையம்ப் தனது எதிர்கால திட்டங்களை வகுத்து உள்ளது.

அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் ஸ்பீடு 400, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் என்கிற இரு விலை குறைவான பைக்குகளை டிரையம்ப் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அவற்றுள் ஒன்றிற்குதான் தற்போது வருட-இறுதி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. நிறைவடைய உள்ள 2024ஆம் ஆண்டை நல்ல சேல்ஸ் ரிப்போர்ட் உடன் நிறைவு செய்ய எல்லா ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விரும்புகின்றன.
சில நிறுவனங்கள் அதன் ஒரு பகுதியாக சலுகைகளையும் அறிவித்துள்ளன. சமீபத்தில்தான், கேடிஎம் நிறுவனம் அதன் 250 ட்யூக் பைக்கிற்கு வருட-இறுதி சலுகைகளை அறிவித்ததை பார்த்திருந்தோம். அந்த வரிசையில் தற்போது டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் அதன் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் (Scrambler 400X) பைக்கிற்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
டிசம்பர் 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் உள்ள டிரையம்ப் பைக் ஷோரூம்களில் வழங்கப்பட்டுவரும் இந்த சலுகையின்படி, ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை இலவச ஆக்ஸஸரீகள் மற்றும் இதர பொருட்கள் உடன் பெறலாம். இவற்றை சலுகையில்லாமல் பெறும்போது பைக்கின் விலையுடன் கூடுதலாக ரூ.12,500 செலுத்த வேண்டியிருக்கும். தற்போது அவை இலவசமாக கிடைக்கும்.

இதன்படி, டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக் உடன் தாழ்வான என்ஜின் பார்ஸ், உயரமாக பொருத்தப்பட்ட மட்கார்ட் கிட், கோட்டட் விண்ட்ஸ்க்ரீன், லக்கேஜ் ராக் கிட், டேங்க் பேட் மற்றும் டிரையம்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான டி-சர்ட்டையும் இலவசமாக பெறலாம். இந்த சலுகையை பெற டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த டிரையம்ப் பைக்கை முன்பதிவு செய்ய வேண்டும்.
இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டிரையம்ப் டீலர்ஷிப் ஷோரூம் அல்லது டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை தொடர்பு கொள்ளவும். ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது டிரையம்ப் நிறுவனத்தின் செயல்திறன்மிக்க மாடர்ன் ஆஃப்-ரோடு மோட்டார்சைக்கிளாக விளங்குகிறது. இதனால், இந்த பைக்கை தைரியமாக எந்தவொரு கரடு முரடான பாதையிலும் ஓட்டலாம்.
விற்பனையில் கேடிஎம் 390 அட்வென்ச்சர் எக்ஸ், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர், பிஎம்டபிள்யூ ஜி310 ஜிஎஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டின் ஹிமாலயன் 450 பைக்கிற்கு போட்டியாக விளங்கும் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கில் வழங்கப்படும் அதே 398சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் ஸ்க்ராம்ப்ளர் 400எக்ஸ் போன்ற அட்வென்ச்சர் பைக்கிற்கு ஆக்ஸஸரீகள் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே இந்த பைக்கை வாங்கும் பெரும்பாலான கஸ்டமர்கள் ஆக்ஸஸரீகளை கூடுதல் தொகையை செலுத்தி வாங்குவதை பார்க்க முடியும். ஆனால், அவை தற்போது இலவசமாக கிடைக்க உள்ளதால், இந்த டிரையம்ப் பைக்கை வாங்கும் ஐடியாவில் இருப்பவர்கள் உடனடியாக முந்துங்கள்.


Click it and Unblock the Notifications








