விலையை குறைத்து கூவி கூவி விற்பனை செய்ய தொடங்கிட்டாங்க.. இப்பவே வாங்கிடுங்க.. இல்லனா வருத்தப்படுவீங்க!

டிரையம்ப் (Triumph) நிறுவனம் பட்ஜெட் விலைக் கொண்ட டூ-வீலர்களை நேசிப்பவர்களைக் கவரும் விதமாக சமீபத்தில் ஸ்பீடு டி4 (Speed T4) எனும் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. 400 சிசி திறன் கொண்ட மோட்டார்சைக்கிளுக்கு மிகக் குறைவான விலையே அது நிர்ணயித்தது. ரூ. 2 லட்சத்து 17 ஆயிரமே அதற்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலையையே மேலும் குறைத்து ஸ்பீடு டி4 மாடலை இன்னும் மலிவு விலைக் கொண்டதாக மாற்றி இருக்கின்றது, டிரையம்ப். ரூ. 18 ஆயிரம்-மே குறைக்கப்பட்டு உள்ளது.

ஆகையால், இப்போது டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக் ரூ. 1.99 லட்சத்திற்கே விற்பனைக்குக் கிடைக்கும் சூழல் உருவாகி இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 2024 ஆம் ஆண்டின் இறுதியை முன்னிட்டே இந்த விலைக் குறைப்பை நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது.

Triumph speed t4 price cut

விலை குறைக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் வரும் நாட்களில் டிரையம்ப் ஸ்பீடு டி4 பைக் மாடலின் விற்பனை சூடுபிடித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை எதிர்பார்த்தே மாபெரும் விலை தள்ளுபடியை டிரையம்ப் செய்திருக்கின்றது. அதேவேளையில், வரும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வாகன உற்பத்தியாளர்கள் பலர் புதிய வாகனங்களின் விலையை கடுமையாக உயர்த்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

எனவே, டிரையம்ப்-ம் அதன் தயாரிப்புகளின் விலையை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இரண்டு சக்கர வாகன காதலர்கள், குறிப்பாக, டிரையம்ப் பைக் விரும்பிகள் இதனை நல்-வாய்ப்பாகக் கருதி ஸ்பீடு டி4 மாடலை வாங்குக் குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளையில், இந்த விலைக் குறைப்பானது ஸ்டாக் உள்ள வரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த மாத இறுதி வரை மட்டுமே இந்த சலுகை நிலுவையில் இருக்கும். இரண்டில் எது நடந்தாலும் ஆஃபர் விலக்கிக் கொள்ளப்படும் எனவும் தெரிகின்றது.

விலைக் குறைப்பை முன்னிட்டு ஏதேனும் சிறப்பம்சங்களில் இந்த நிறுவனம் கை வைத்திருக்குமோ என நினைத்துக் கொள்ள வேண்டாம். எந்தவொரு மாற்றத்தையும் அவர்கள் செய்யவில்லை என்றே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பைக்கில் 398 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூடு கூல்டு எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 30.6 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதே மோட்டாரையே டிரையம்ப் நிறுவனம் அதன் ஸ்பீடு 400 மாடலிலும் பயன்படுத்தி இருக்கின்றது. ஆனால், இந்த மாடலில் அது 39.5 பிஎச்பி மற்றும் 39 என்எம் டார்க்கை வெளியேற்றும் வகையில் மாற்றத்தைக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமான அம்சங்களாக ஸ்லிப்பர் கிளட்ச் அம்சம், 43 மிமீ அங்குலம் அளவுக் கொண்ட டெலிஸ்கோபிக் ஃபோர்க், டூயல் சேனல் ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் யுஎஸ்பி போர்ட் கொண்ட கன்சோல் உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, அட்ஜஸ்டபிள் லிவர், ரைடு-பை-வயர் த்ரோட்டில், ஸ்விட்சிங் செய்யும் வசதிக் கொண்ட டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் டார்க் அசிஸ்ட் கிளட்ச் போன்ற அம்சங்களையும் இந்த பைக்கில் டிரையம்ப் வழங்கி இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களை இந்த பைக் தாங்கியிருக்கும். இத்தகைய பைக்கின் விலையையே டிரையம்ப் தற்போது குறைத்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிரையம்ப் ஸ்பீடு டி4 மாடலின் விலைக் குறைக்கப்பட்டு இருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், அதன் தளத்தில் இன்னும் பழைய விலையே உள்ளது. ஆகையால், டீலர்களிடம் ஆஃபர் குறித்து விசாரிக்கலாம். ஆண்டு இறுதி என்பதால் சில விற்பனையாளர்கள் பிரத்யேக ஆஃபரை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2024, 22:17 [IST]
English summary
Triumph speed t4 sees a rs 18000 price drop now priced at rs 1 99 lakh
மேலும்... #triumph motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+